Published:Updated:

குழந்தைகள் முன்..?! : டூயட் கிளினிக்

குழந்தைகள் முன்..?! : டூயட் கிளினிக்

பிரீமியம் ஸ்டோரி
டூயட் கிளினிக்
குழந்தைகள் முன்..?! : டூயட் கிளினிக்
குழந்தைகள் முன்..?! : டூயட் கிளினிக்
குழந்தைகள் முன்..?! : டூயட் கிளினிக்
டாக்டர் டி.நாராயணரெட்டி, செக்ஸாலஜிஸ்ட்
குழந்தைகள் முன்..?!
குழந்தைகள் முன்..?! : டூயட் கிளினிக்

மீபத்தில் எனக்கு ஒரு பெண்ணிடம் இருந்து கடிதம் வந்தது. அதில் அவர் எழுதியிருந்தது இதுதான்... 'என் கணவர் என் மேல் உயிரையே வெச்சிருக்கார். ஆனா, சுத்தி குழந்தைங்க இருக்கிறதைக்கூட மறந்துடுறார். எனக்குத் தர்மசங்கடமா இருக்கு. நேரம் காலம் பார்க்காம என்னைத் தொந்தரவு பண்றார். 'என்ன இப்படிப் பண்றீங்க?'ன்னு கேட்டா, 'டாக்டர்களே பாலியல் கல்வி வேணும்னு சொல்றாங்க. குழந்தைங்க தப்பா நினைக்க மாட்டாங்க'ன்னு சொல்றார். நீங்க அவருக்கு அட்வைஸ் பண்ற மாதிரி டூயட் கிளினிக்ல எழுதுங்க டாக்டர். உங்களுக்கு ரொம்பப் புண்ணியமாப்போகும்.'

குழந்தைகள் முன்..?! : டூயட் கிளினிக்

பாலியல் கல்வியைத் தவறாகப் புரிந்துகொண்டதன் எதிர் விளைவுதான் இது. 'How much is too much?' என்பார்கள் இல்லையா, அதாவது 'எதுவரைக்கும் போனால் அதிகப்படியாகும்' என்பது சிலருக்குத் தெரியாமல் போகிற நிலை. எதுவரைக்கும் குழந்தைகள் தெரிந்துகொள்ளலாம் என்பதும் பலரது மண்டையைப் பிறாண்டும் சந்தேகம். பெற்றோர்தான் குழந்தைகளுக்கு முன்மாதிரி. அன்பாக இருப்பது வேறு; காமம் வேறு என்பது குழந்தைகளுக்குப் புரிய வேண்டும். அதனால் குழந்தைகள் முன் அவசியம் பெற்றோர் அன்பாகத்தான் இருக்க வேண்டும். காமத்தை வெளிப்படுத்துவதுபோல நடந்துகொள்வதுதான் தவறு. அதற்காக அப்பாவும் அம்மாவும் paying guest போல கறாராக நடந்துகொள்ளவும் தேவை இல்லை. ரொம்பவும் நாசூக்கானவர்கள் என்று காட்டிக்கொள்ள பெரிய இடைவெளியோடு, அந்தக் கால மனிதர்கள்போல பெற்றோர் இருப்பதும் பழகுவதும் தவறாகும். தனது பெற்றோருக்கு இடையே மிகுந்த அன்பு உள்ளது என்பதையும் குழந்தைகள் உணர வேண்டும்.

அதே சமயம், செக்ஸ் என்பது அவரவரது தனிப்பட்ட விஷயம் என்பதைப் புரியவைப்பது மாதிரி பெற்றோரின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். குழந்தைகள் வளரும் பருவத்தில் படுக்கை அறை நாகரிகத்தை அவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும். அப்பாவும் அம்மாவும் இருக்கும் அறைக்குள் கதவு திறந்து இருந்தால் சகஜமாக வரலாம். கதவு மூடி இருந்தால், தட்டிவிட்டு உள்ளே வர வேண்டும் என்று பெற்றோர் சொல்லிக்கொடுக்க வேண்டும். ஆரம்பத்திலேயே இவை குழந்தைகளுக்குப் புரியாதுதான். ஆனால், போகப் போகப் புரிந்துகொண்டுவிடும். அதுவும் இன்றைய குழந்தைகளுக்கு பெட்ரோல் புத்தி. சட்டென்று பற்றிக்கொண்டுவிடுவார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக பெற்றோர் தங்கள் செக்ஸ் நடவடிக்கைகளைக் குழந்தைகளுக்குத் தெரியாமல்தான் வைத்துக்கொள்ள வேண்டும்.

பாலியல் கல்வியின் நோக்கமே சூழலுக்கு ஏற்றாற்போல எப்படி நடந்துகொள்வது என்பதைக் கற்பிப்பதுதான். எல்லாவற்றையும் வெளிப்படையாகப் போட்டு உடைப்பது அல்ல!

குழந்தைகள் முன்..?! : டூயட் கிளினிக்

 
குழந்தைகள் முன்..?! : டூயட் கிளினிக்
குழந்தைகள் முன்..?! : டூயட் கிளினிக்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு