பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
 
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

ஐ.பி.எல். டி.வி. ஷோவில் இருந்து இந்த வருடம் அதிரடியாகத் தூக்கி விட்டதால், மீண்டும் சான்ஸ் பிடிப்பதில் தீவிரமாக இருக்கிறார் மந்த்ரா பேடி. ஐ.பி.எல். பார்ட்டிகளில் கலந்து கொள்ளும் மந்த்ரா, கிரிக்கெட் வீரர்களிடம் நெருங்கிப் பழகி அவர்களிடம் 'மேனேஜர்' வாய்ப்பைக் கேட்கிறாராம். மறக்க முடியுற பார்ட்டியா நீங்க!

இன்பாக்ஸ்

கௌதம் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் அஜீத். 'ரேஸ் ஓட்டும் நேரத்தில் அப்படியே உடம்பையும் ஃபிட்டாக மாற்றிக்கொண்டு வருகிறேன்' என உறுதி கொடுத்துவிட்டு லண்டன் போயிருக்கிறாராம் அஜீத். அசல் அதிகாரியா வாங்க!

இன்பாக்ஸ்

ஐஸ்வர்யா ராயின் வாழ்க்கை வரலாற்றை எழுத இருக்கிறார் பிரபல எழுத்தாளர் ஷோபா டே. ''பெண்கள் ஐஸ்வர்யா ராய்போல் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆண்கள் ஐஸ்வர்யா ராய் போலத் துணை வேண்டும் என நினைக்கின்றனர். எனக்குப் பெரிய சவால் காத்திருக்கிறது'' என்கிறார் ஷோபா. செம விருந்து காத்திருக்கு!

இன்பாக்ஸ்

ஷாரூக் தன் மனைவி கௌரிகானுடன் ஒரு படம் நடிக்க இருக்கிறார். இருவரின் பர்சனல் அனுபவங்களை வைத்தே கதையை உருவாக்கியிருக்கிறாராம் கரண் ஜோஹர். குடும்பப் படம்ஹே!

இன்பாக்ஸ்

நக்சல் வேட்டை நடத்தும் சி.ஆர்.பி. எஃப்-ன் அடுத்த தலைவர், அநேகமாக நம்ம வீரப்பன் புகழ் விஜயகுமார். சமீபத்தில் மாவோயிஸ்ட் தாக்குதலில் 78 போலீஸ்காரர்கள் பலியானதால், இப்போதைய தலைவர் விக்ரம் ஸ்ரீவஸ்தவாவை நீக்க முடிவெடுத்து இருக்கிறதாம் மத்திய அரசு. நல்லது பண்ணுங்க!

இன்பாக்ஸ்

தெலுங்கில் ஹிட்டான 'விக்ரமார்குடு' படம் தமிழில் 'சிறுத்தை'யாகத் தயாராகிறது. முதலில் அனுஷ்காவைத்தான் பேசினார்கள். ஆனால், கார்த்தியின் தொடர் சிபாரிசால் தமன்னாதான் ஹீரோயினாம். அப்பாவுக்குத் தெரியுமா?

இன்பாக்ஸ்

புதிய சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவரின் அறைக்குள் பூஜை அறையும் உண்டு. ஜெயலலிதாதான் வருவது இல்லையே தவிர, தினமும் பூஜை நடந்து வருகிறதாம். ரிமோட்ல கும்பிடுவாங்களோ?!

இன்பாக்ஸ்

ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பதில் முதலிடம் அமிதாப் குடும்பத்துக்கு. பிளாக் மூலம் அமிதாப் எழுத, அபிஷேக்கும், ஐஸ்வர்யா ராயும் தினமும் டிவிட்டரில் ரசிகர்களோடு பேசுகின்றனர். புது வரவாக மாமியார் ஜெயாபச்சனும் இப்போது டிவிட்டரில். டிவிட்டிங் ஸ்டார்ஸ்!

இன்பாக்ஸ்

மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் விஷ்ணுவர்தனுக்கு பெங்களூரில் பிரமாண்டமான கோயில் ஒன்றைக் கட்டி வருகிறார்கள். அதன் திறப்பு விழாவுக்கு அமிதாப்பச்சன், ரஜினி, மம்மூட்டி என மற்ற மொழி சூப்பர் ஸ்டார்களை அழைக்கும் திட்டமாம். சூப்பர் கோயில்!

இன்பாக்ஸ்

தீபா மேத்தா இயக்க இருக்கும் இந்தி மற்றும் ஆங்கிலப் படத்தில் நடிக்க இருக்கிறார் அமீர்கான். இணைந்து நடிக்க இருப்பது நந்திதா தாஸ். அப்போ டபுள் டக்கர்!

இன்பாக்ஸ்

ரொனால்டோ, ரூனே என எல்லோரையும் எகிறி அடித்து உலகின் தலை சிறந்த கால்பந்தாட்ட வீரராக ஜொலிக்கிறார் 23 வயது லியோனல் மெஸ்ஸி. இந்த வருடத்தின் முக்கிய போட்டிகள் அனைத்திலும் மச்சான் அடித்தது ஹாட்ரிக் கோல்கள். எந்த மெஸ்ல சாப்பிடுறீங்க?

இன்பாக்ஸ்

சயீஃப் அலிகானுக்கும் கரீனா கபூருக்கும் மே மாத இறுதியில் துபாயில் டும்டும்டும்மாம். ஒட்டுமொத்த பாலிவுட்டையும் ஒருங்கிணைத்து டிஸ்கோ, பார்ட்டி, பேஷன் ஷோ, காமெடி ஷோ எனக் களைகட்டவைக்கும் திட்டமாம். ஹனிமூனுக்கு அவங்களை எல்லாம் கழட்டி விட்ருங்க!

இன்பாக்ஸ்

விலைவாசி உயர்வு குறித்து, இத்தாலி மொழியில் சோனியா காந்திக்கு வித்தியாசமாகக் கிண்டலடித்துக் கடிதம் எழுதிய குஜராத் முதல்வர் மோடிக்கு ஷாக் கொடுத்திருக்கிறார் சோனியா. விலைவாசியைக் குறைப்பது குறித்து ஆராய உருவாக்கப்பட்டிருக்கும் துணைக் குழுவுக்கு நரேந்திர மோடியையே தலைவராக நியமிக்கச் சொல்லியிருக்கிறார் சோனியா காந்தி. இந்த அப்ரோச் நல்லாயிருக்கே!

இன்பாக்ஸ்

அரசின் திட்டங்களை விமர்சனம் செய்யும் ஜெயலலிதாவின் புள்ளிவிவர அறிக்கைகளைப் படித்து மிரண்டுவிட்டாராம் முதல்வர். 'அதிகாரிகள் துணையின்றி தகவல்கள் வெளியே போக வாய்ப்பு இல்லை. அ.தி.மு.க-வுக்கு நெருக்கமான அதிகாரிகளின் பட்டியல் உடனே வேண்டும்' என்பது முதல்வரின் உத்தரவு. குடைச்சல் கொடுப்பதில் கொடநாட்டு அம்மா கில்லில்ல!

 
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு