பிரீமியம் ஸ்டோரி
5 கேள்விகள்
5 கேள்விகள்
5 கேள்விகள்
 
5 கேள்விகள்
5 கேள்விகள்

சுகாதாரத் துறைச் செயலாளர் சுப்புராஜிடம்...

''வேலூர் மருத்துவமனையில் வேலை நேரத்தில் வெளியே சென்ற எட்டு டாக்டர்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின ரிடம் சிக்கிய மூன்று பேரை மட்டும் சஸ்பெண்ட் செய்துள்ளீர்கள். மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க£தது ஏன்?''

''அந்த மூன்று டாக்டர்கள் மட்டுமே சிக்கினர். மற்றவர்கள் தப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. விசாரணை நடத்தி வருகிறோம். உண்மையில், மேலும் பல டாக்டர் கள் சென்றிருப்பது உறுதியானால், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்!''


கலைராஜன் எம்.எல்.ஏ-விடம்...

''தலைமைச் செயலகம் அணு உலைபோல உள்ளது என்றெல்லாம் சட்டப் பேரவையில் முதல்வரைக் கிண்டலடிப்பது, ஜெயலலிதாவைத் திருப்திப்படுத்தவா?''

''தமிழர்களின் கட்டடக் கலை ரோமானியர், கிரேக்கர் கட்டடக் கலையுடன் போட்டி போடக்கூடியது. ஆனால், தற்போதைய தலைமைச் செயலகக் கட்டடம் பார்ப்பதற்கு அணு உலைபோல உள்ளது. அம்மா கட்டியிருந்தால் தமிழர் கட்டடக் கலையுடன் அருமையாகக் கட்டியிருப்பார் என்பதால்தான் அப்படிப் பேசினேன்!''


நடிகர் சிங்கமுத்துவிடம்...

''உங்கள் மீது தொடர்ந்துள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்பதற்காகத்தான் நீங்கள் தொடர்ந்து மிரட்டுவதாக வடிவேலு குற்றம்சாட்டி உள்ளாரோ?''

''வடிவேலுவைக் கொசு கடித்தாலும், அவர் வீட்டில் தண்ணீர் வரவில்லை என்றாலும், அதற்கும் நான்தான் காரணம் எனச் சொல்வாரோ என்றுகூடப் பயமாக இருக்கிறது. நான் குற்றமற்றவன் என நிரூபிக்க வேண்டி இருப்பதால், என் மீதுள்ள வழக்குகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என விரும்புகிறேன்!''


சட்டப்பேரவைச் செயலர் செல்வராஜிடம்...

''சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை டி.வி-யில் காட்டும்போது எதிர்க்கட்சியினர் புறக்கணிக்கப் படுகிறார்களே?''

''அனைத்துக் கட்சியினரும் வீடியோவில் வருவதுபோல் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை அரை மணி நேரம், ஒரு மணி நேரங்களாகத் தொகுத்து சம்பந்தப்பட்ட மீடியாக்களுக்கு அனுப்புகிறோம். அவர்கள் தங்களுக்கு வேண்டப்பட்ட அல்லது தாங்கள் வெளியிடும் செய்திகளுக்குப் பொருத்தமாக உள்ள வீடியோ காட்சிகளை ஒளிபரப்புகிறார்கள். அனைத்துக் கட்சியினரின் பேச்சுக்களையும் ஒளிபரப்புமாறு முக்கியமான மீடியாக்களின் நிருபர்களிடம் வாய்மொழியாகக் கேட்டுக்கொண்டுள்ளேன்!''


டி.என்.பி.எஸ்.சி. தலைவர் செல்லமுத்துவிடம்...

''குரூப் 2 தேர்வுக்கு முதல் நாளே அதற்கான கேள்வித்தாள் வெளியாகிவிட்டது என்கிறார்களே?''

''தஞ்சாவூரில் கேள்வித்தாள் வெளியாகிவிட்டதாகக் கூறினார்கள். அந்தத் தகவல் ஒரு வதந்தி. தஞ்சை மாவட்டத்துக்காக 79 வினாத்தாள் கட்டுகளை அனுப்பினோம். அதில் 78-ஐ மட்டும் அங்கு இறக்கிவைத்துவிட்டு, ஒன்றைத் தவறுதலாக புதுக்கோட்டைக்கு எடுத்துச் சென்றுவிட்டனர். பிறகு, விஷயம் தெரியவந்ததும் அந்தக் கட்டு மீண்டும் தஞ்சாவூருக்கே திருப்பி அனுப்பப்பட்டது. அந்தக் கட்டை யாரும் பிரிக்கவில்லை. சீல்கூட அப்படியே இருந்திருக்கிறது!''

 
5 கேள்விகள்
5 கேள்விகள்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு