பிரீமியம் ஸ்டோரி
விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை
 
விகடன் வரவேற்பறை

கொலை நிலம்
தியாகு - ஷோபாசக்தி
வெளியீடு: வடலி, 13/54, 10-வது குறுக்குத் தெரு, ட்ரஸ்ட்புரம், சென்னை-24.
பக்கம்: 96, ரூ.80
ஈழ விடுதலைப் போர்

விகடன் வரவேற்பறை

இறுதியில் பெரும் மக்கள் படுகொலையில் போய் முடிந்தபிறகு -அதன் காரண காரியங்கள், அரசியல், ராணுவப் பிழைகள், புலிகளின் செயல்பாடுகள் என எல்லாவற்றையும் ஆழமான உரையாடல் மூலம் நம் முன் நிறுத்துகிறார்கள். தியாகு-ஷோபா சக்தி இருவரின் பேச்சும் பல உண்மைகளை முன்வைக்கிறது. ஈழத்தில் புதிய அரசியலைக் கண்டெடுக்க வேண்டிய அவசியம் புரிபடுகிற படைப்பு!


நிறம்
இயக்கம்: உ.சி.குமார்
வெளியீடு:
5/3, ராகவன் தெரு, வெற்றிநகர் விரிவு, டி.வி.கே நகர், சென்னை-82.

விகடன் வரவேற்பறை

பேப்பர் போடுகிற பையனின் வாழ்க்கையின் சில பக்கங்களை 12 நிமிடங்களில் விறுவிறுப்பாகவும் கவித்துவமாகவும் சொல்கிறார் இயக்குநர் குமார். சக மனிதர்களின் மீது வைக்கப்படுகிற அன்பு, நம்பிக்கை இன்னும் வற்றிவிடவில்லை என்பதைக் காட்டும் குறும்படம்!


சித்த வைத்தியன்
new.siddhavaithiyan.blogspot.com

விகடன் வரவேற்பறை

இயற்கை மருத்துவம், சுற்றுச்சூழல், இயற்கைச் சமையல் எனத் தொடர்ச்சியாக எழுதிவரும் மருத்துவர் சிவராமனின் வலைப்பூ. 'காய்ச்சல், தலைவலியில் இருந்து எய்ட்ஸ் வரை நோயினை விரட்ட உணவு ஒரு முக்கிய அம்சம்' எனும் 'ஆஸ்துமாவுக்கான உணவு' கட்டுரை பயனுள்ள பதிவு. 'குழந்தைப்பேறுக்கான உணவு' கட்டுரை அறிவியல்பூர்வமாக ஆரோக்கியமான உணவுகளைப்பற்றி பேசுகிறது!


மதராசபட்டினம்
இசை: ஜி.வி.பிரகாஷ்குமார் திங்க் மியூஸிக், ரூ.99

விகடன் வரவேற்பறை

இந்தியாவின் பெருமைகளை ஹீரோ பாட, வெளிநாட்டுப் பெண்ணுக்கு துபாஷ் மொழிபெயர்க்கும் 'வாம்மா துரையம்மா..!' பாடலில் உதித் நாராயணின் குரலில் குதூகல அருவி. தபேலா-டோலக் கூட்டணியில் காதல் கருக்கொள்ளும் தருணங்களைத் தாலாட்டுகிறது 'பூக்கள் பூக்கும் தருணம்' பாடல். எம்.எஸ்.வி- விக்ரம்-நாசர் என வித்தியாசமான கூட்டணியில் ஒலிக்கும் 'மேகமே ஓ மேகமே' பாடல் நூற்றாண்டுக்கு முந்தைய பக்கிங்ஹாம் கால்வாய் கரைக்கு நம்மை தூக்கிச் செல்கிறது. 'ஆருயிரே' காதலின் வலி சொல்லும் மென்சோகப் பாடல். கிளாஸிக் சாயலுடன் ஒலிக்கும் மாடர்ன் ஆல்பம்!


ரத்த தானம்
new.friendstosupport.org/index.phpx

விகடன் வரவேற்பறை

ரத்த தானம்பற்றிய அருமையான வெப்சைட். ரத்த தானத்தில் ஆர்வம்உள்ளவர்கள் ஏரியா வாரியாக இதில் இ¬ணைந்து உள்ளனர். நமக்கு எந்த ரத்த வகை தேவைப்படுகிறது, நாம் இருக்கும் நகரம் இரண்டையும் சொல்லிவிட்டால், மொபைல் நம்பர், முகவரியுடன் ரத்த தானம் செய்ய தயாராக இருப்பவர்களின் லிஸ்ட் உடனே திரையில் விரிகிறது. நாமும் நம்மைப் பற்றிய தகவல்களைக் கொடுத்து, டோனர்களின் லிஸ்ட்டில் இணைந்து கொள்ளலாம். ரத்தம் கொடுத்து உயிர் காக்கலாம்!

 
விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு