Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

நானே கேள்வி... நானே பதில்!

பிரீமியம் ஸ்டோரி
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
தம்பி டீ இன்னும் வரலே!
 
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!

'''நினைத்தது நிறைவேறியது' என்று எப்போதாவது மகிழ்ந்தது உண்டா?''

''சமீபத்தில் நிறைவேறியதே! 'காங்கிரஸ் கட்சி ஒரு தேர்தலிலாவது மற்ற கட்சிகளின் தோளில் தொற்றிக்கொள்ளாமல் தனித்து நிற்க வேண்டும்' என்று எதிர்பார்த்தேன். இதோ, இப்போது காங்கிரஸ் தனித்து நின்றுவிட்டது, இளைஞர் காங்கிரஸ் தேர்தலில்!''

- எஸ்.பழனிவேல், திருமாளம்.

'''கலைஞருக்குப் பிறகு யாரையும் தலைவராக ஏற்றுக் கொள்ள மாட்டேன்' என்று மு.க.அழகிரி சொல்வதன் பொருள்?''

'''தம்பி, டீ இன்னும் வரலே!'''

- சிக்ஸ்முகம், கள்ளியம்புதூர்.

''ஆப்பு என்றால் என்ன?''

''மூச்சுக்கு முன்னூறு தடவை 'மைனாரிட்டி தி.மு.க. அரசு' என்றே சொல்லி மகிழ்ந்தது அ.தி.மு.க. ஆனால், தொடர்ச்சியான இடைத் தேர்தல்கள் தோல்வி, எம்.எல்.ஏ-க்களைமொத்த விலைக்கு வாங்குவது என்று அ.தி.மு.க-வை மைனாரிட்டி ஆக்கிக்கொண்டு இருக்கிறதே தி.மு.க, அதற்குப் பெயர்தான் ஆப்பு!''

- கே.அமுதவள்ளி, மதுரை.

''கொடுமையிலும் கொடுமை எது?''

'' 'கற்பி, ஒன்றுசேர், கிளர்ச்சி செய்' என்றார் அம்பேத்கர். எல்லா மாற்றங்களுக்கும் அடிப்படையானது கல்வி என்று அவர் நினைத்ததால்தான் தன் முழக்கத்தில் கல்விக்கு முதலிடம் தந்தார். ஆனால், மாநிலம் எங்கும் சிலைகள், நோட்டு மாலை, ஆடம்பரமான மாநாடு என்று நடத்தும் மாயாவதி, 'எங்களிடத்தில் போதுமான நிதி இல்லாததால் கட்டாயக் கல்விச் சட்டத்தை அமல்படுத்த முடியாது' என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அம்பேத்கருக்கு மாநிலம் முழுவதும் சிலைகளும் அமைத்த மாயாவதி... ம்ஹூம்!''

- எம்.காஸ்ட்ரோ, தருமபுரி.

''அடிக்கடி அரசியலில் 'முறைப்படி' அழைப்பு விடுக்கவில்லை என்கிறார்களே, அது என்ன 'முறைப்படி'?''

''இப்போது சட்டசபையை எடுத்துக்கொள்ளுங்கள். சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நாளே எதிர்க் கட்சிகள் 'முறைப்படி' வெளிநடப்பு செய்துவிடும். இதுவே நாடாளுமன்றமாக இருந்தால் 'முறைப்படி' அமளியில் ஈடுபடும். விடுங்க பாஸ்!''

- எஸ்.திருமலை, கோயம்புத்தூர்.

''புரியாத புதிர்?''

''ஒரு நிமிடம் வரும் விளம்பரங்களிலேயே சுவாரஸ்யமான குட்டிக் கதைகள் இடம்பெறு கின்றனவே, ஏன் இரண்டரை மணி நேரம் ஓடும் திரைப்படங்களில் கதையே இருப்பது இல்லை?''

- பா.ஜெயக்குமார், வந்தவாசி.

எல்லோரும் எழுதலாம்!

கேள்வியும் பதிலும் உங்களுடையதே. தபாலில் அனுப்பலாம். அல்லது செல்போனில் QA (space) உங்க சரக்கை 562636 நம்பருக்கு நறுக்குனு தட்டிவிடுங்க. பளிச் பரிசு நிச்சயம்!

 
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு