ம.கா.செந்தில்குமார்

அதட்டிய அழகிரி... அதிரடி தயாநிதி

ஒரு காதல் க்ளைமாக்ஸ்

தமிழகத்தின் மிக சென்சிட்டிவ் குடும்பத்துக்கு இது சென்சேஷனல் மாதம்!

சட்டசபைத் திறப்பு விழா, பிரதமர் - சோனியா தமிழகம் வருகை, தமிழக பட்ஜெட் என்று தாத்தா தலைநகரத்தில் தடதடக்க, பென்னாகரத்தில் அப்பாவும் சித்தப்பாவும் விறுவிறுப்பு கூட்டிக்கொண்டு இருந்தார்கள். தன் பங்குக்குத் தனது காதலியை அடையாளம் காட்டி, நிச்சயதார்த்தம் முடித்திருக்கிறார் துரை தயாநிதி, சன் ஆஃப் அழகிரி!

அனுஷா சீதாராமன். விரைவில் திருமதி துரை தயாநிதி ஆகவிருப்பவர். சென்னை அண்ணா நகரில் வசிக்கும் சட்டக் கல்லூரி மாணவி. அவருடைய அம்மா பவானி, எம்.ஜி.ஆரிடம் செயலாளராக இருந்த சிவசுப்பிரமணியத்தின் மகள். சென்னையில் தயாநிதியின் நண்பர்கள் வட்டம் பெரிது. அதில் ஒரு புள்ளியில் அறிமுகமானவர் அனுஷா. தித்திப்புச் சந்திப்புகள் காதலாகி வெளிப்பட்ட தருணத்தில் இருவர் வீட்டிலும் தயக்க மயக்கங்கள். 'அவ்வளவு பெரிய இடம் நமக்குச் சரியா வருமா?'

என்பது அனுஷா வீட்டினர் தயக்கம். 'அதுக்குள்ளே என்ன அவசரம்? உனக்குக் கல்யாணம் பண்ணப்போறோம்னு தெரிஞ்சா பொண்ணு கொடுக்க எத்தனை பேர் போட்டி போடுவாங்கன்னு தெரியுமா?' என்று அதட்டல் போட்டிருக்கிறார் அழகிரி. 'அதட்டுனா அடங்கிப்போறவனா அழகிரி மகன்!' என்று தனது நிலையில் விடாப்பிடியாக இருந்திருக்கிறார் தயாநிதி. 'ஒரே மகன் ஆசைப்பட்டதைச் செய்யாம வேற யாருக்குச் செய்யப்போறீங்க?' என்று ஒரு கட்டத்தில் தயாநிதி அதிரடி காட்ட... பணிந்து வழிக்கு வந்துவிட்டார் அழகிரி. 'எங்க வீட்ல உங்க பொண்ணைத் தங்கமாத் தாங்குவாங்க. நான் இருக்கேன். நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க!' என்று அனுஷாவின் அப்பா - அம்மாவுக்கும் தைரியம் ஊட்டியிருக்கிறார் தயாநிதி. தயாநிதியின் சகோதரிகள் அஞ்சுகச் செல்வியும் கயல்விழியும் இரு வீட்டினர் இடையிலும் 'உடன்படிக்கை' ஏற்பட முனைந்திருக்கிறார்கள். சினிமாத் திருப்பங்கள் எதுவும் இன்றி சுப நிகழ்வாகக் கடந்த வாரம் சென்னை தாஜ் ஹோட்டலில் சிம்பிளாக அரங்கேறிய நிச்சயதார்த்தத்தில் இருந்து...

எதற்கும் எங்கும் மெனக்கெடாமல் வளைய வரும் அழகிரியையே பார்த்துப் பழகியவர்களுக்கு அன்று ஆச்சர்யம். நிச்சயதார்த்தத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை சின்னப் பதற்றத்துடனேயே காணப்பட்டார். கருணாநிதி வந்து மணமக்களை வாழ்த்திவிட்டுச் சென்ற பிறகுதான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனார்.

கருணாநிதி வாழ்த்திவிட்டுச் சென்றதும், ஸ்டாலின், கலாநிதி, தயாநிதி, கனிமொழி உட்பட அனைவரும் குடும்பத்துடன் வாழ்த்திவிட்டுக் கிளம்பினார்கள். முரசொலி மாறனின் மனைவி மல்லிகா, முரசொலி செல்வம், அவரது மனைவியும் கருணாநிதியின் மகளுமான செல்வி ஆகியோர் நிகழ்ச்சி முடியும் வரை இருந்தனர்.

அஜீத் - ஷாலினி, சிம்பு என்று ஓரிரு சினிமா பிரபலங்கள்தான் ஆஜர்.

தயாநிதிக்கு கிரிக்கெட் பேட் ஒன்றைப் பரிசளித்தார் அனுஷா. அதைக் கொஞ்சம் எதிர்பார்க்காத துரை தயாநிதி முகத்தில் சந்தோஷ சர்ப்ரைஸ்!

தயாநிதி மேடையில் கேக் வெட்ட... அவரது நண்பர்கள், 'ஹேப்பி பர்த்டே டு யூ' என்று சத்தமாகக் கலாய்க்க, 'டேய்... யார்றா அது தப்பாப் பாடுறது!' என்று அழகிரியும் பதிலுக்கு அதட்டல் போட... சில நண்பர்கள் பம்மிப் பதுங்கிக்கொண்டது காமெடி எபிசோட்.

உறவினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்த நிகழ்ச்சியில், வழக்கத்துக்கு மாறாக அதிக அளவில் உளவுத் துறை ஆட்கள். என்ன காரணம் என்பதை யாரறிவார் பராபரமே!