டாக்டர் டி.நாராயணரெட்டி, செக்ஸாலஜிஸ்ட்

வெளியே 700... உள்ளே 60

ஒரு நாள் வாக்கிங் செல்லும்போது என் நண்பர் ஒருவர் சொன்னார், ''தொடர்ந்து சிகரெட் பிடிக்கிறவங்களுக்கு செக்ஸ் பிரச்னை வரும்னு படிச்சேன். நான் 30 வருஷமா புகை பிடிக்கிறேன். எனக்கு செக்சுவலா எந்தப் பிரச்னையும் இல்லையே டாக்டர்'' என்று. அவருக்கு நான் சொன்ன பதிலை நீங்களும் தெரிந்துகொள்ளுங்களேன்.

ஜான் ஸ்பேங்லர் என்கிற அமெரிக்கர், புகை பிடிப்பவர்களுக்கு என்னன்ன பாதிப்புகள் வரும் என்று ஆய்வு செய்தார். புகைக்காதவருடன் ஒப்பிடும்போது, புகைப்பவருக்கு 26 மடங்கு விறைப்புத்தன்மைக் கோளாறு அதிகம் வர வாய்ப்பு உள்ளது என்று நிரூபித்தார். புகையும் ஒரு சிகரெட்டின் முனையில் 700 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும். அதில் இருந்து புகையை உள் இழுக்கும்போது 60 டிகிரி வெப்பம் வாய் வழியே நுரையீரலுக்குள் செல்கிறது.புகைந்து கொண்டு இருக்கும் ஒரு சிகரெட்டில் இருந்து நான்கு ஆயிரம் வகை வேதிப் பொருட்கள் வெளியேறும். இதில் தார், நிக்கோட்டின், கார்பன் மோனாக்ஸைடு மூன்றும் மிக மோசமான வேதிப் பொருட்கள். தார், புற்றுநோய் தோன்றக் காரணமாகலாம். கார்பன் மோனாக்ஸைடு விஷத்தன்மைகொண்டது. நிக்கோட்டின் சிறு போதையைத் தரக்கூடியதால், பலர் இதற்கு அடிமையாகிவிடுகிறார்கள். நிகோடின் ஆண் உறுப்பின் ரத்தக் குழாயில் இருக்கும் எண்டோதீலியத்தைச் சேதப்படுத்தி, ரத்தக் குழாய்கள் சுருங்கி, ரத்த ஓட்டத்தைக் குறைத்துவிடும். ஆண் உறுப்பின் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதற்கும் நிக்கோட்டின் ஒரு தூண்டுதலாகிறதாம்.

விறைப்புத்தன்மையில் பிரச்னை, விந்து அளவு குறைதல், உயிரணுக்களின் எண்ணிக்கை குறைதல், உயிரணுவின் வடிவம் (Morphology) சிதைவடைதல் போன்ற பிரச்னைகள் எல்லாம் சேர்ந்து புகைப்பவர்களில் சிலருக்குக் குழந்தையின்மை பிரச்னை உருவாகலாம்.

ஆண்களுக்கு மட்டுமல்ல; பெண்கள் புகைத் தால் அவர்களுக்கும் பாதிப்பு வரலாம். பெண் பிறப்புறுப்பின் ரத்தக் குழாய்கள் சுருங்கி, ரத்த ஓட்டம் குறையும். இதனால் உறவின்போது வலி ஏற்படலாம். இவர்களுக்குக் கர்ப்பம் தரிப்பதிலும் சிக்கல் வரலாம்.

புகைப்பவர்களுக்கு ஒரே ஒரு அட்வைஸ்தான் - 'புகை முக்கியமா, இல்லற சுகம் முக்கியமா?