Published:Updated:

'அம்மா' டி.ஜி.பி !

'அம்மா' டி.ஜி.பி !


. ம.கா.செந்தில்குமார் படங்கள் சு.குமரேசன்
'அம்மா' டி.ஜி.பி !
அம்மா 'டி.ஜி.பி.!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
'அம்மா' டி.ஜி.பி !
'அம்மா' டி.ஜி.பி !

லேட்டஸ்ட் டி.ஜி.பி. லகான் லத்திகா சரண் கையில்! சென்னை மாநகர முதல் பெண் கமிஷனரான இவர்தான் மாநில முதல் பெண் டி.ஜி.பி-யும்கூட! வந்து குவியும் வாழ்த்துக்களைக் கவனத்தில்கொள்ளாமல், சடசடவென மாநிலம் முழுமைக்குமான நடவடிக்கைகளை முடுக்கி விடுகிறார்.

"வாழ்த்துக்கள் மேடம்... தமிழக காவல் துறையில் ஒரு பெண் அடைந்திருக்கும் அபார உயரம் உங்களுடையது. ஆனால் இனி அரசாங்கம், அரசியல்வாதிகளின் தலையீடுகளை நீங்கள் அதிகமாக எதிர்கொள்ள வேண்டியிருக்குமே?"

"நான் ஐ.பி.எஸ். தேறிய மறுநாளே இந்த டி.ஜி.பி. பதவி என்னைத் தேடி வந்துவிடவில்லை. மாவட்ட எஸ்.பி, டி.ஐ.ஜி., ஐ.ஜி, ஏ.டி.ஜி.பி. என அதிகாரத்தின் அனைத்து மட்டங்களிலும் பணியாற்றிய பிறகுதான், அந்த அனுபவங்கள் என்னைப் பக்குவப்படுத்திய பிறகுதான் எனக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. ஒரு பெண் என்பதற்காக இந்தப் பதவி எனக்கு எந்தவித சலுகையையும் வழங்கப் போவதுஇல்லை. மிகச் சில இடங்களில் அரசியல் அதிகாரத்துக்கு போலீஸார் வளைந்து கொடுக்கிறார்கள் என்பதற்காக, ஒட்டுமொத்த காவல் துறையையும் குறை கூறிவிட முடியாது. இது போன்ற குற்றச்சாட்டுகளுக்குக்கூட இடமில்லாத நிலை வெகு விரைவில் இத் துறையில் நிலவும்!"

"முறையான ஓய்வு வழங்கப்படாததும், உயர் அதிகாரிகளின் அடக்கு முறைகளுக்கு ஆளாவதும்தான் காவலர்களை மனரீதியாகச் சோர்வுறச் செய்கிறது என்கிறார்களே?"

"சமயங்களில் அடுத்தடுத்து வழக்குகள் வரிசை கட்டி நிற்கும்போது போலீஸாரால் ஓய்வெடுக்க முடிவதில்லை என்பது உண்மைதான். வார விடுமுறை, விடுமுறை தினப் பணிகளுக்குச் சிறப்புச் சன்மானம் போன்றவை வழங்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. நீங்கள் குறிப்பிடும் உயர் அதிகாரிகளின் அடக்குமுறைகள் படிப்படியாகக் குறைந்திருக்கின்றன. வரும் நாட்களில் இதன் காரணமாக அடிமட்டக் காவலர்கள், மனம் சோர்வுற மாட்டார்கள்!"

"ஆறரைக் கோடி தமிழக மக்களுக்கு ஒரு லட்சம் காவலர்கள்தான். பணியிடங்களை அதிகரிக்க வாய்ப்பு இல்லையா?"

"நாலாயிரம் காவலர்கள் ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து பயிற்சி தொடங்க உள்ளனர். தொடர்ந்து ஒன்பதாயிரம் காவலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். காலியாக உள்ள டி.எஸ்.பி. பணியிடங்களையும் விரைவில் பூர்த்தி செய்யவிருக்கிறோம். இனி, ஒவ்வொரு ஆண்டும் தேர்வுகள்வைத்து காவல் துறைக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளோம்!"

'அம்மா' டி.ஜி.பி !

"பெண் போலீஸாருக்கே பாதுகாப்பு இல்லை என்றும் அவர்கள் பணிபுரியும் இடத்தில் போதுமான வசதிகள் இல்லை என்றும் டிபார்ட்மென்ட்டில் ஒரு பேச்சு இருக்கிறதே?"

"எங்கோ ஒரு மூலையில் நிகழ்ந்த சம்பவங்களை வைத்து பொத்தாம்பொதுவாகக் குறை சொல்ல முடியாது. சமூகத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மகளிர் காவல் நிலையங்கள்தான் சிறந்த புகலிடங்களாக விளங்குகின்றன. பாதுகாப்பு, பந்தோபஸ்தில் ஈடுபடும் பெண் போலீஸாருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்து அவர்களை இன்னமும் துடிப்புடன் பணியாற்றவைப்போம். ஒரு பெண்ணாக மகளிர் காவலர்களின் அனைத்து வேதனைகளும் பிரச்னைகளும் எனக்கும் தெரியும். விரைவில் தீர்வுகள் எட்டப்படும்!"

"தமிழ் சினிமாக்களில் தொடர்ந்து காவல் துறையினர் காமெடியாகவே சித்திரிக்கப்படுகிறார்களே?"

'அம்மா' டி.ஜி.பி !

"நீங்கள் குறிப்பிடும் அந்த மாதிரியான சம்பவங்கள் முன்னர் அடிக்கடி படம் பிடிக்கப்பட்டன. தாதா கோஷ்டியினரோடு போதையில் போலீஸ் அதிகாரிகள் சதி செய்வது, கிளைமாக்ஸில் மட்டுமே கடமையாற்ற வருவது போலக் காட்டுவது

போன்றவை தற்போது குறைந்துள்ளன. இதுபற்றி ஒரு படத் தயாரிப்பாளரிடம் கேட்டபோது, 'போலீஸை நல்லவங்களா காமிச்சா யார் படம் பார்ப்பாங்க?' என்றார். 'முதலில் நீங்கள் நல்லவிதமாகப் படம்எடுங்கள்!' என்று அவரிடம் சொன்னேன். ஆனால், இது போன்ற கிண்டல்களைக் கண்டுகொள்ளாமல்தான் எங்கள் வேலைகளை நாங்கள் செய்துகொண்டு இருக்கிறோம்!"

"நீங்கள் சினிமா பார்ப்பீர்களா?"

"டி.வி-யில் பார்ப்பேன். திருட்டு வி.சி.டி-யில் இல்லைங்க. சேட்டிலைட் சேனல்களில் ஒளிபரப்பப்படும் படங்கள் மட்டும் பார்ப்பேன். அது போக டணால் தங்கவேலு, நாகேஷ், கவுண்டமணி, வடிவேலு ஜோக்ஸ் பிடிக்கும். சமீபத்தில் '3 இடியட்ஸ்' படம் பார்த்தேன். எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. ஆனால், எல்லாரும் 'சூப்பர்' என்று பாராட்டுகிறார்களே என்று என் மகளை 'அவதார்' பார்க்க அனுப்பினேன். ஆனால், ஏனோ அவருக்கு அந்தப் படம் பிடிக்கவில்லை!" என்று சிரிக்கிறார் 'அம்மா' டி.ஜி.பி!

 
'அம்மா' டி.ஜி.பி !
'அம்மா' டி.ஜி.பி !