Published:Updated:

காதலால் சரிந்த நட்சத்திரம் !

காதலால் சரிந்த நட்சத்திரம் !


. அ.ஆதித்யன்
காதலால் சரிந்த நட்சத்திரம் !
காதலால் சரிந்த நட்சத்திரம் !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
காதலால் சரிந்த நட்சத்திரம் !
காதலால் சரிந்த நட்சத்திரம் !

'21-ம் நூற்றாண்டின் காஸனோவா!'-உலகின் நம்பர் ஒன் கோல்ஃப் பிளேயரான டைகர் வுட்ஸை இப்போது இப்படித் தான் அழைக்கிறார்கள். மூன்று கிராண்ட் ஸ்லாம் பட்டம், 14 கோல்ஃப் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றிருக் கும் உலகின் சிறந்த கோல்ஃப் பிளேயர், இனி 'உலகின் சிறந்த ப்ளேபாய்' என அறியப் படுவார்.

டைகர் வுட்ஸுக்கு மனைவி எலின் அல்லாத இன்னொரு பெண்ணுடன் தொடர்பு என்பது முதல் ஒரு வரித் தகவல். 'வி.ஐ.பி-க்கள்னா அதெல்லாம் சகஜம்தானே!' என்பது அதற் கான முதல் விமர்சனம். அதற்கே அவரது மனைவி விவாகரத்து பரபரப்பு கிளப்ப, 'நான் கோல்ஃப் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன்!' என்று டைகர் வுட்ஸ் அறிவிக்கும் அளவுக்கு நிலைமை சிக்கலானது.

இப்போது அலாவுதீன் விளக்குப் பூதங்களாக அமெரிக்காவின் அத்தனை மாகாணங்களில் இருந்தும் 'நானும் டைகர் வுட்ஸின் காதலிதான்!' என்று கூட்டம் கூட்டமாகப் பூகம்பங்கள். இப்போது வரை 17 பெண்கள் வுட்ஸுடனான தங்கள் தனிமைத் தருணங்களை மனம் திறந்திருக்கிறார்கள். டைகர் வுட்ஸின் டாப் 6 காதலிகள் பற்றிய கவுன்ட் டவுன் இங்கே...

6. ரேசல் உசிடெல்-34: இரட்டைக் கோபுரத் தாக்குதலில், கணவனை இழந்த அம்மணி. திருமணமான செலி பிரிட்டிகளாகப் பார்த்து 'டீலா... நோ டீலா' கேட்பதுதான் ரேசலின் பொழுதுபோக்கு. விவாகரத்து ஸ்பெஷல் வழக்கறிஞர்கள் அம்மணிக்குச் சிலை திறக்க விவாதம் நடத்தும் அளவுக்குப் பல குடும்பங்களில் சோழியை உருட்டும் நியூயார்க் பெண்!

5. ஜேய்மி க்ரப்ஸ் - 24: பாரில் கிளாமர் வெய்ட்ரஸ் ஆக இருப்பது இவரது பார்ட் டைம் வேலை. மற்ற நேரம் முழுக்க டைகரின் நிழலில்தான் பதுங்கி இருந்திருக்கிறார் இவர். டைகருடனான அந்தரங்கப் படங்களைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறார்!

4.கலிகா மோகுவின்-29: லாஸ்வேகாஸ் நகரின் பிரபல நைட்-கிளப் மேனேஜர். 'இல்லற வாழ்வு சலித்துவிட்டது. என்னால் இந்தக் குடும்ப பாரத்தைச் சுமக்க முடியவில்லை என்று டைகர் அடிக்கடி என் மடியில் தலை புதைத்து அழுவார்!' என்கிறார் கலிகா!

காதலால் சரிந்த நட்சத்திரம் !

3.ஜேமி ஜுங்கர்-32: ஏற்கெனவே திருமணம் ஆனவள் என்று தெரிந்தும் இந்த பாலீஷ் மாடலுக்கு 2004-லேயே பிராக்கெட் போட்டுவிட்டாராம் நம்ம புலி. இதில் உச்சகட்ட காமெடி, ஜேமியின் கணவன் கொடுக்கும் குபீர் ஜாலி பேட்டிகள்தான். 'அவ முதல் தடவை டைகரைப் பார்க்கப் போறேன்னு சொன்னப்போ, எனக்குச் சந்தோஷத்துல தலைகால் புரியலை. அன்னிக்குத்தான் நான் டைகர் வுட்ஸோட கோல்ஃப் வீடியோகேம் வாங்கி விடிய விடிய விளையாடிட்டு இருந்தேன். ஆனா, அங்கே இவங்க ரெண்டு பேரும் விளையாடிட்டு இருப்பாங்கன்னு நினைச்சுக்கூடப் பார்க்கலை!' என்று ஆதங்கப்படுகிறார், இந்த அபலைக் கணவர்!

2.மின்டி லாடன்-34: இந்த வெயிட்ரஸ் வேலை பார்ப்பது ஆர்லேண்டோவில் இருக்கும் ஒரு ஹோட்டலில். ஊரு விட்டு ஊரு போன டைகர், அந்த ஹோட்டல் மெனுவை ஒரு முறை ருசி பார்த்திருக்கிறார். அதன் பிறகு அந்த மெனுவுக்காகவே அடிக்கடி ஆர்லேண்டோ போக ஆரம்பித்தார்!

காதலால் சரிந்த நட்சத்திரம் !

1. ஹோலி சாம்ப்சன்-36: இவருடனான ஒவ்வொரு உல்லாசப் பயணத்துக்குப் பிறகும், இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ஐந்தரைக் கோடி ரூபாய் டிப்ஸ் அளித்தது டைகரின்உச்சகட்ட சாதனை. ஹோலி, பலான படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர் என்பது அடிஷனல் அப்டேட்.

எல்லாம் சரி, ஏன் டைகர் வுட்ஸ் மேல் இந்தத் திடீர் கொலை வெறி?

காதலால் சரிந்த நட்சத்திரம் !

'டைகருடன் எனக்குத் தொடர்பு இருக்கிறது!' என்று தினுசு தினுசான கதையுடன் வருபவர்களுக்குத் தலா 45 கோடி ஆன் த ஸ்பாட் பேமன்ட் என்று அறிவித்திருக்கிறது 'விவிட் என்டர்டெயின்மென்ட்' என்கிற கிளுகிளு சி.டி. தயாரிப்பு நிறுவனம். அப்படி வருபவர்களைச் சமாதானப்படுத்தி, சாந்தமடையச் செய்ய டைகர் தரப்பில் இருந்தும் சில கோடிகள் கொட்டப்படுகின்றனவாம். 'இன்னும் எத்தனை பேர் கிளம்பி வருவாங்களோ?' என்று டைகர் வுட்ஸே திகைத்துக்கிடக்கிறாராம். ஆனால், இந்தச் சச்சரவுகளால் டைகர் மாடலிங் செய்யும் பொருட்களின் விற்பனை விறுவிறுவென உயருவது, அவருக் கான மாடலிங் மைலேஜ்.

என்னமோ போங்க!

 
காதலால் சரிந்த நட்சத்திரம் !
-
காதலால் சரிந்த நட்சத்திரம் !