Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

நானே கேள்வி... நானே பதில்!


. நானே கேள்வி....நானே பதில் !
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
'கடவுளே ரஜினியிடமிருந்து காப்பாற்று !'
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!

"பெண்ணாகரத்தில் எந்தக் கட்சிகளுக்கிடையே பலத்த போட்டி இருக்கும்?"

"தே.மு.தி.க-வுக்கும் பா.ம.க-வுக்கும் இடையில்தான், யார் டெபாசிட் வாங்குவது என்று!"

- மு.ரா.பாலாஜி, கோலார்.

"ஒழுக்கம் என்பது எப்படி ஆளுக்காள் வேறு படுகிறது?"

"சின்னவங்க பொய் சொன்னால், ஜெயிலில் போடுவாங்க. பெரிய மனுசங்க பொய் சொன்னால், பேப்பரில் போடுவாங்க!"

- விஜயலட்சுமி முருகேசன், பொழிச்சலூர்.

"சட்டசபைக்கு ஜெயலலிதா வந்ததால் சாதித்தது என்ன?"

"செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடந்த இறுதி நாள் சட்டமன்றக் கூட்டத் துக்கு ஜெயலலிதா வந்தார் என்பது வரலாற்றில் பதிவாகும். அப்புறம் 'என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே' என்ற எம்.ஜி.ஆர். பாட்டை எடுத்துக்கொண்டு கருணாநிதியும் ஜெயலலிதாவும் மாறி மாறி நடத்திய 'பாட்டுக்குப் பாட்டு!"'

-பெ.வெற்றி, பொள்ளாச்சி.

" 'திமுக - காங்கிரஸ் கூட்டணியை உடைக்கச் சதி நடக்கிறது' என்கிறாரே தங்கபாலு?"

"ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை நேரடியாகப் பெயர் சொல்லி விமர்சிப்பதில் தங்கபாலுவுக்கு என்னவோ தயக்கம்!"

-சா.மோகனா, திருத்துறைப்பூண்டி.

"ஆந்திராவைப் பிரித்தால்... தெலுங்கானா. தமிழ்நாட்டைப் பிரித்தால்..?"

"ஜாலிலோ ஜிம்கானா... ராமதாஸுக்கு!"

- சிக்ஸ்முகம், கள்ளியம்புதூர்.

"'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை' என்றால்?"

"கொஸ்டீன் பாஸ் டு பெண்ணாகரம் தொகுதி மக்கள்!"

- வீ.அ.அம்பிகாபதி, சென்னை-85.

"'தர்மசங்கடத்தில் மாட்டிக்கொண்டு விழிப்பது என்றால்?"

"உதாரணம், கே.எஸ்.ரவிகுமார். 'ஜக்குபாய்' திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இணையத்தில் வெளியாகிவிட்டது, திருட்டு வி.சி.டி. வந்துவிட்டது என்பதற்காக, அதைக் கண்டித்து திரைத் துறையின் சார்பில் கூட்டம். அதில் கலந்துகொண்ட ரஜினி, "ஜக்குபாய் டைட்டிலிலேயே ஏதோ கோளாறு இருக்கிறது. அதனால்தான் நான் அதிலிருந்து விலகிக்கொண்டேன்!" என்று 'பூட்டகேஸ்' ரீதியில் பேசினார். அதுவாவது பரவாயில்லை, " 'வாசபி' என்ற பிரெஞ்சுப் படத்தின் சி.டி-யை ரவிகுமார் கொண்டுவந்து கொடுத்தார். அதுதான் 'ஜக்குபாய்' படத்தின் கதை!" என்று அடுத்த குண்டையும் தூக்கிப் போட்டாரே ரஜினி. ஆக, அது ஏற்கெனவே சுட்ட பழம்தான். அப்புறம் என்ன 'திருட்டு' வி.சி.டி. என்று ரசிகர்கள் நினைக்க மாட்டார்களா? ரஜினி இப்படிப் பேசும்போது சரத்குமாரும் கே.எஸ்.ரவிகுமாரும் இப்படியாக நினைத்திருப்பார்கள்... 'கடவுளே! ரஜினியிடமிருந்து எங்களைக் காப்பாற்று, திருட்டு வி.சி.டி-க்காரர்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்!' "

- வி.நிலா, வேலூர்-2

"அடேங்கப்பா என்று உங்களைச் சமீபத்தில் வியக்கவைத்த சம்பவம்?"

"உ.பி. முன்னாள் முதல்வர் கல்யாண்சிங் 'ஜன்கிராந்தி பார்ட்டி' என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்திருக்கிறார். கூடுதல் இணைப்பாக அவர் சொன்னது, 'இது இளைஞர்கள் காலம், எனவே நான் தொடங்கியுள்ள கட்சியை எனது மகன் ராஜ்வீர்சிங்கிடம் ஒப்படைக்கிறேன்!' "

- சா.ரஹ்மான், கீழக்கரை

நானே கேள்வி... நானே பதில்!

 
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!