தகவல் அனுப்பவும், அண்ணா எங்களை வீட்டுக்குள் வரச் சொன்னார். பலரும் காத்திருந்தனர். 'உங்களுடன் போட்டோகிராபர் வந்திருக்கிறாரா?' என்று கேட்டார். 'இல்லை!' என்றோம். 'அப்படியானால் போட்டோ ஸ்டுடியோவுக்கே சென்றுவிடுவோமா?' என்று அண்ணா கேட்கும்போதே, ஓர் அவசர அழைப்பு. கட்சிப் பிரமுகர் ஒருவர் லாரி விபத்தில் காயம்பட்ட தகவல். 'நாளை பார்க்கலாம். கோபித்துக்கொள்ளாதீர்கள்!' என்று அண்ணா மருத்துவமனைக்குக் கிளம்பிச் சென்றுவிட்டார்.
மறுநாள் காலை போட்டோகிராபருடன் சென்றுவிட்டோம். தகவல் அறிந்த அண்ணா எங்களை வரச் சொல்லிவிட்டு, அவசர அவசரமாக முகச் சவரம் செய்து, குளித்து, ஆடை மாற்றிக்கொண்டு வந்தார். அண்ணாவுக்கு நன்கு அறிமுகமான அந்த போட்டோகிராபர், 'என்ன அண்ணா, இன்னிக்கு நீட்டா ஷேவ் எல்லாம் செய்திருக்கிறீர் கள்?' என்று கேட்டார். அதற்கு அண்ணா, 'காலேஜ் ஸ்டூடன்ட்ஸோடு போட்டோ எடுக்கும்போது நாமளும் நீட்டா, டிரிம்மா இருக்க வேண்டாமா?' என்றார் சிரித்துக்கொண்டே. அந்தப் பேரறிஞருக்குள் இருந்த குழந்தைத்தனத்தை நாங்கள் உணர்ந்த தினம் அது!''
- ந.திருநாவுக்கரசு, தஞ்சாவூர்-7.
|