Published:Updated:

செக்ஸ் டாய்ஸ் !

செக்ஸ் டாய்ஸ் !


. டாக்டர் டி.நாராயணரெட்டி செக்ஸாலஜிஸ்ட் டூயட் கிளினிக்
செக்ஸ் டாய்ஸ் !
செக்ஸ் டாய்ஸ் !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
செக்ஸ் டாய்ஸ் !
செக்ஸ் டாய்ஸ் !

''என் கணவர் வெளிநாடு சென்று திரும் பியபோது ஏதோ தினுசுதினுசான கருவிகளை வாங்கி வந்தார். 'ராத்திரியில நாம பயன்படுத்துவோம்!' என்கிறார். எனக்கு அதில் துளியும் விருப்பம்இல்லை. என் கணவருக்கு இதனை எப்படிப் புரியவைப்பது? அவற்றைப் பயன்படுத்தினால் ஏதேனும் பாதிப்புகள் வருமா டாக்டர்?'' இ-மெயிலில் ஒரு பெண்மணி கேட்டிருந்த கேள்வி இது!

அவற்றை 'செக்ஸ் டாய்ஸ்' என்பார்கள். இன் பத்தை அதிகரிக்க உதவும் சாதனங்கள் என்பதால், இவற்றுக்கு Sexual aids என்பது அறிவியல் பெயர். அவற்றைப் பயன்படுத்துவது பெருங்குற்றமோ, தவறோ கிடையாது.

ஓர் அமெரிக்க ஆய்வு. ஆய்வுக்குஎடுத்துக்கொண்டவர்களில் 56 சதவிகிதம் பேர் நீலப் படம் பார்க்கிறார்கள் என்றும், 44 சதவிகிதம் பேர் விதவிதமானநவீன ரக உள்ளாடைகளையும் பல வகை செக்ஸ் டாய்ஸ்களையும் பயன்படுத்துகிறார்கள் என்றும் குறிப்பிடுகிறது. இதில் பெண்களும் அடக்கம்.

நமதுநாட்டிலும் இந்தத் தாக்கம் மெள்ள மெள்ள அதிகரித்து வரு கிறது.செக்ஸ் சாதனங்கள் இந்த நூற்றாண்டில் திடீர் என்று வந்து குதிக்கவில்லை. புராதனக்காலத்தில் இருந்தே இவை இருந்து வந்திருக்கின்றன. காமசூத்ரா 7-வது பாகத்தில் செயற்கை ஆணுறுப்பை எப்படித் தயாரிப்பது, அதனை எவ்வாறு

செக்ஸ் டாய்ஸ் !

பயன்படுத்துவது என்றெல்லாம் விளக்கப்பட்டு உள்ளது.

ஆனால், செக்ஸ் சாதனங்களைப் பயன்படுத்தும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை. இவை இன் பத்தை அதிகரிக்க உதவியாக இருக்குமே தவிர, இவை இருந்தால்தான் செக்ஸ் இன்பம் கிடைக்கும் என்கிற நிலைமையை எட்டிவிடக் கூடாது.

செக்ஸ் மருத்துவர்கள் சில பிரச்னைகளுக்கு இந்தச் சாதனங்களைச் சிபாரிசு செய்வது உண்டு. வயதானவர்களுக்கு உணர்ச்சி துண்டுதலுக்கு இது போன்ற சாதனங்கள் தேவைப்படலாம். இருந் தாலும் கணவன் - மனைவி இருவருக்கும் விருப் பம் இருந்தால்தான் இந்தச் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும். ஒருவருக்கு விருப்பம் இல்லாவிட்டால்கூட இதனைப் பயன்படுத்துவதில் அர்த்தமில்லை. மனகசப்புதான் ஏற்படும்!

ஐஸ்க்ரீம்
வரவழைத்துவிட்டுப்
பேசிக்கொண்டிருந்தோம்
உருகி
வழிந்துகொண்டிருந்தது
காதல்!

- இரவி நந்தபாலா

 
செக்ஸ் டாய்ஸ் !
செக்ஸ் டாய்ஸ் !