Published:Updated:

5 கேள்விகள்

5 கேள்விகள்


5 கேள்விகள்
5 கேள்விகள்
5 கேள்விகள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
5 கேள்விகள்

தமிழக சபாநாயகர் ஆவுடையப்பனிடம்...

" 'சட்டசபையில் நான் வணக்கம் தெரிவித்ததை சபாநாயகர் நன்கு கவனித்தும், பதில் வணக்கம் தெரிவிக்கவில்லை’ என்கிறாரே ஜெயலலிதா?"

"அந்த அம்மையார் உண்மைக்கு மாறாகப் பேசுகிறார். அவர் சட்டமன்றத்துக்குள் வந்ததும் வணக்கம் சொன்னார். நானும் பதிலுக்கு இரு கைகளையும் கூப்பி வணக்கம் சொன்னேன். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. சட்டமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்படும் விஷயம் அனைவருக்கும் தெரிந்ததே!"

உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியிடம்...

"வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டிய நிதியை இலவசத் திட்டங்-களுக்குப் பயன்படுத்தியது தொடர்பாக வெள்ளை அறிக்கை வேண்டும் என்று பி.ஜே.பி. கோரிக்கை வைத்துள்ளதே?"

"ஒரு பொதுநல அரசு, ஏழை எளிய மக்களின் துயர் துடைக்க வகுக்கும் திட்டங்கள் அனைத்துமே வளர்ச்சித் திட்டங்கள்தான். கல்விகூட நேரடியாகப் பார்த்தால் வளர்ச்சிப் பணியில் வராது. ஆனால், மனிதனின் அறிவை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், அதுவும் வளர்ச்சித் திட்டமே! அதேபோல் சாமானிய மக்கள் உலகை அறிந்துகொள்ள உதவும் இலவச டி.வி. திட்டமும் மாநில மக்களின் வளர்ச்சிக்காகச் செயல்படுத்தப்படும் திட்டமே!"

ஜெயக்குமார் எம்.எல்.ஏ-விடம்...

"2011-ல் அ.தி.மு.க-வே இருக்காது என்கிறாரே அழகிரி?"

" 'முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவதுபோல’ என்ற பழமொழிக்கேற்ப அழகிரியின் கனவும் பலிக்காது!"

என்.கே.கே.பி.ராஜா எம்.எல்.ஏ-விடம்...

"பதவிகள் போன பிறகும் உங்கள்மீது அடுத்தடுத்து நிலஅபகரிப்பு குற்றச்சாட்டுகள் எழுகின்றனவே?"

"பெருந்துறை நில அபகரிப்புதான் என்மீது வைக்கப்பட்ட முதல் குற்றச்சாட்டு. துளியும் உண்மை இல்லாத அந்த விவகாரம் கட்சியை விட்டே என்னை வெளியேற்றும் அளவுக்குக் கொண்டுபோய்விட்டது. ஆனால், இதுநாள் வரை என் மீதான குற்றச்சாட்டு சட்டத்தின் முன் நிரூபிக்கப்படவில்லை!"

5 கேள்விகள்

த்ரிஷாவிடம்...

"ஆந்திராவில் உங்கள் அப்பாவுக்காகக் கட்டியுள்ள ஹோட்டலைத் தெலுங்கானா விவகாரத்தால் திறக்க யோசித்து வருவதாகக் கூறுகிறார்களே?"

"ஹோட்டலே கட்டப்படாதபோது அதைத் திறப்பதில் எங்கே இருந்து பிரச்னை வரும்? அப்படிக் கட்டினால், நானே பத்திரிகை யாளர்-களை ஓரிடத்தில் கூட்டித் தகவல் சொல்லியிருப்பேனே?"

 
5 கேள்விகள்
5 கேள்விகள்