Published:Updated:

நானே கேள்வி.. நானே பதில்!

நானே கேள்வி.. நானே பதில்!

நானே கேள்வி.. நானே பதில்!

நானே கேள்வி.. நானே பதில்!

Published:Updated:

01-04-09
ஸ்பெஷல் 2
நானே கேள்வி.. நானே பதில்!
நானே கேள்வி.. நானே பதில்!
 
நானே கேள்வி.. நானே பதில்!
நானே கேள்வி.. நானே பதில்!
நானே கேள்வி.. நானே பதில்!
'' 'குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதற்குச் சரியான உதாரணம்?''

''அழிப்பதற்கு ஆயுதம் கொடுத்து, அடிபட்ட மக்களுக்கு மருந்து போட பின்னாலேயே மருத்துவக் குழுவையும் அனுப்புவதுதான். கொடுமை என்ன வென்றால், அங்கே குழந்தைகள் கிள்ளப்படுவதில்லை; கொல்லப்படுகிறார்கள்!''

-காமாட்சிசுந்தரம், விருதுநகர்.

''இலங்கைத் தமிழருக்காக காங்கிரஸ் கட்சியும் நிதி திரட்டுவது எப்படி இருக்கிறது?''

''சதாம் உசேனுக்கு அமெரிக்கா நினைவு தபால்தலை வெளியிடுவதைப் போல!''

-ஆ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

''புதிய நீதிக் கதை ஏதாவது...''

''கம்மாக்கரைகிட்ட ஒரு பாட்டி வடை சுட்டுக்கிட்டு இருந்தா. அப்போ ஒரு காக்கா கபால்னு வந்து ஒரு வடையைப் பொத்துனாப்ல கொத்திட்டு ஒரு மரத்துல செட்டில் ஆயிருச்சு. அப்போ அங்கிட்டு வந்த ஒரு நரி 'காக்கா, காக்கா... நீ நல்லாப் பாடுவதானே..? ஜெய் ஹோ பாட்டு ஒரு தபா பாடிக்காட்டு'ன்னுச்சு. உடனே, அந்த ஆக்கங்கெட்ட காக்காவும் 'ஜெய்ய்'னு வாயத் தொறக்க, வடை கீழே விழுந்துடுச்சு. சுதாரிப்பா இருந்த நரிப்பய உடனே லபக்குனு வடைய லாவிட்டுப் போயிருச்சு. கதையோட நீதி: 'வட போச்சே!' ''

- கி.சிவா, மதுரை.

'' 'வசைமாரிப் பொழிவது யார்' என்று கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையில் ஒரு போட்டியே நடக்கிறதே?''

''ஹூம்! அந்தக் காலத்தில் 'மாதம் மும்மாரி மழை பொழிகிறதா?' என்று மன்னர்கள் கேட்பார்கள். இப்போது வசைமாரி!''

-எஸ்.முத்துச்செல்வி, மூலக்கரை.

''தி.மு.க, அ.தி.மு.க. என ராதாரவி அடிக்கடி கட்சி மாறிக் கொண்டே இருப்பது ஏன்?''

''நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மகன் ராதாரவி. ராதா எந்த அதிகாரங்களைக் கண்டும் அஞ்சாதவர். தன் மனதில் பட்டதைச் சொல்லும் சுபாவத்துக்குச் சொந்தக்காரர். அவர் இம்பாலா காரில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு ஊர்வலம் வந்த கதை பலருக்கும் தெரியும். அதே இம்பாலா காரை, அப்போதைய குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் சென்னை வந்தபோது, அவரை அழைத்து வருவதற்காக எம்.ஆர்.ராதாவிடம் சில அதிகாரிகள் கேட்டிருக்கிறார்கள். 'இந்த ராதாகிருஷ் ணன் போவதற்காகத்தான் கார். அந்த ராதாகிருஷ் ணனுக்காக இல்லை' என்று துணிச்சலாக மறுத்தவர். அண்ணா, பெரியாரைவிட்டுப் பிரிந்தபோது 'அண்ணாவின் அவசரப் புத்தி' என்று புத்தகம் எழுதி, அவரிடமே கொண்டுபோய்க் கொடுத்தார். 'நீங்களா எழுதினீர்கள்?' என்று அண்ணா கேட்க, 'எனக்குத்தான் எழுதத் தெரியாதே, நான் சொல்லச் சொல்ல எழுதினது. யார் எழுதினால் என்ன?' என்றார். அந்தக் காலகட்டத்தில் கட்சியில் இருந்தவர்களுக்கு ஒளி வட்டம் சூட்டப்படுவதைக் கடுமையாக எதிர்த்தவர் ராதா. அண்ணா, திராவிடர் கழகத்தில் 'தளபதி' எனத் தொண்டர்களால் அழைக்கப்பட்டவர். ஒருமுறை அவர் நாடகத்துக்கு அண்ணா வந்திருந்தபோது, மேக்கப் ரூமில் இருந்த ராதாவிடம் 'தளபதி வந்தி ருக்கிறார்' என்று அவசர அவசரமாகச் சொல்லியிருக் கிறார்கள். 'தளபதி குதிரையை எங்கே நிறுத்திட்டு வந்திருக்கார்?' என்று நக்கலாகக் கேட்டாராம் ராதா. ஓசியில் நாடகம் பார்க்கும் வி.ஐ.பி-க்களையும், 'காசு கொடுத்து டிக்கெட் வாங்கினவன்லாம் தரையிலே உட்கார்ந்திருக்கான். ஓசியிலே வந்தவன்லாம் சேர்ல உட்காந்திருக்கான்' என்று நாடக மேடையிலேயே கலாய்ப்பாராம். நடிகவேளிடம் இருந்த துணிச்சலும், அதிகாரங்களுக்காக வளையாத தன்மையும், இளைய வேளிடம் இல்லை!

-த.செல்ஷியா, ஆத்திக்காடு.

 
நானே கேள்வி.. நானே பதில்!
நானே கேள்வி.. நானே பதில்!