Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

Published:Updated:

01-04-09
ஸ்பெஷல் 2
விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை
 
விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை

ஒரு அமர கதை

எம்.
குமார்
தமிழில்: குளச்சல் மு.யூசுப்
வெளியீடு: தென்திசை பதிப்பகம்,
52. தென்மேற்கு போக் சாலை,
தியாகராய நகர், சென்னை-17.
பக்கம்: 256
விலை ரூ.140

லையாளத்தின் மிகவும் புகழ்பெற்ற எம்.

குமாரின் 'ஒரு அமர கதை' தமிழில் வெளிவந்திருக்கிறது. நுட்பமான அழகு உணர்வுகளைத் தூண்டச் செய்து, இதுவரை நாம் அவ்வளவாகப் பயணித்தறியாத எல்லைக்கு இழுத்துச் செல்கிறது. ஆன்மிக மரபில் கதை நகர்ந்து, வேறு தளத்துக்கு இட்டுச் செல்வதால், இந்த மொழிபெயர்ப்பு மிகவும் அவ சியமாகிறது. தத்துவ மரபுகளில் ஈடுபாடுகொண்ட எம்.

குமாரின் பார்வைகள் மறுவாசிப்பைத் தூண்டுகின்றன. நிதானமாக உள் வாங்கிகொண்டு, மொழிபெயர்ப்பை அர்த்தமுள்ளதாக்கி இருக்கிறார் குளச்சல் மு.யூசுப். தேர்ந்த வாசகர் களுக்கான புத்தகம்!


விகடன் வரவேற்பறை


க்ளிக் கைட்!

new.whatsonwhen.com

சென்னையில் ஆரம்பித்து, உலகின் முக்கிய நகர நிகழ்ச்சிகளைச் சொல்லும் வெப்சைட். சுற்றுலாப் பயணங்களில் நாம் எதிர்கொள்ளும் நகரத்தின் இசை, விளையாட்டு, அறிவியல், குடும்பம் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை முன்னரே தெரிந்துகொள்ளலாம். நிகழ்ச்சி நடக்கும் இடங்களைப் பற்றிய குறிப்புகளும் இருப்பதால் அலைந்து திரிந்து கால் தேயாமல் சேருமிடம் சென்று சேரலாம். ஊர் சுற்றும் வாலிபர்களுக்கு இணையத் துணைவன்!


விகடன் வரவேற்பறை


புனிதப் போர்

இயக்கம்: எஸ்.சரவணன்
வெளியீடு: 1/11. அண்ணாஜி நகர் முதல் தெரு,
மேற்கு கே.கே.நகர், சென்னை-78.

பெண் விடுதலையின் அவசியம் பற்றிப் பேசுகிற குறும்படம். ஆண், பெண் இருபாலரும் சமம் எனக் காலங்காலமாகச் சொல்லப்பட்டா லும், உண்மை அதுவல்ல என்பதை விவரிக்கிறது இது. பெண்களின் மீதான சிறந்த அக்கறையை முன் வைக்கிறார் இயக்குநர் சரவணன். பெண்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்புவது நல்லதுதானே!


விகடன் வரவேற்பறை


அல்ட்ரா வயலெட்!

new.youngfeminists.wordpress.com

னந்திதா சென்குப்தா, அபர்ணா சிங், சரண்யா மணிவண்ணன், மீனா கந்தசாமி போன்ற இளம் பெண்ணியவாதிகள் மற்றும் படைப்பாளிகள் தொடுத்த வலைப்பூ. பெண்களுக்கான பிரத்யேகப் பிரச்னைகள் குறித்தும், பெண்கள் எதிர்கொள்ளவேண்டிய வாழ்க்கைச் சவால்கள் குறித்தும் எழுதியுள்ள கட்டுரைகள் வசீகரம். மங்களூரில் பெண்கள் மீது மதவாதச் சக்திகள் நடத்திய தாக்குதல், பாலியல் தொழிலாளர்களின் இருப்புப் பிரச்னைகள், தொடர்ச்சியாகப் போர் நடைபெறும் காஷ் மீரில் பெண்களின் நிலைமை என அலசல் விவாதங்கள்! பெண்களுக்கான சட்டங்கள், சர்வதேச மற்றும் இந்திய அளவிலான பெண்கள் ஆணையம் குறித்த செய்திகளும் காணப்படுவது இதன் சிறப்பு!


விகடன் வரவேற்பறை


ஆறுபடை - ராகம் தானம் பல்லவி
வெளியீடு: ராஜலட்சுமி ஆடியோ

விலைரூ.195

குன்றுதோறும் நின்றாடும் குமரனின் ஆறுபடை வீடுகளைப் பற்றிய பாடல்கள். அருணா சாய்ராமின் குரலில் பாடல்களைக் கேட்டு முடிக்கும்போது, முருகனே கண் முன் நிற்கும் உணர்வு. கனமான பைரவி ராகத்தில் ராகம், தானம் பாடிவிட்டு, 'முருகனே குகனே உனது பாதம் துணையே வடிவேலனே வள்ளி மணவாளனே...' என்கிற பல்லவியை, அசுர வாத்தியத்துக்கு இணையான தன் காந்தர்வக் குரலில் பாடுகிறார் அருணா சாய்ராம். அறுபடை வீடுகளுக்கும் சுநாதவிநோதினி, அடாணா, ரஞ்சனி, தர்பாரி கானடா, செஞ்சுருட்டி, ஆபேரி ஆகிய ராகங்களில் தலா நான்கு வரிகள் பாடியிருக்கிறார். என்னென்னவோ பெயரெல்லாம் சொல்கிறீர்களே என்று கேட்பவர்களுக்கு மாத்திரம்... கவலையே படாதீர்கள்! அது என்ன ராகம் என்பதெல்லாம் அநாவசியம். காதில் தேனாகப் பாய்கிறதல்லவா... அதுதான் விஷயம்!

 
விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை