Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:

01-04-09
ஸ்பெஷல் 2
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
 
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

இப்போது புல்லட் ப்ரூஃப் ஆடை அணிந்துதான் விளையாடுகிறார் சச்சின். தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்ட்டில் இருப்பதால், உளவுத் துறை கொடுத்த அறிவுரைதான் காரணம். ஹிட் ஆனாலே ஹிட் லிஸ்ட்தானா?

'களவாடிய பொழுதுகள்' - கவிதையான தலைப் போடு அடுத்த படத்துக்கு தங்கர்பச்சான் தயார். பிரகாஷ்ராஜ், பிரபுதேவா, பூமிகா என படா காம்பினேஷனில் களமிறங்குகிறார் தங்கர். வாங்க தமிழர்!

தன் 'பிங்க் ஸ்டோன்' நிறுவனத்துக்காக, 'நல்ல கதை இருந்தா சொல்லுங்கப்பா' என்று நண்பர்களிடம் கதை கேட்டு வருகிறார் யுவன்ஷங்கர் ராஜா. ஹீரோ? சாரேதான்! யுவன் மனசுல ஹீரோ!

இன்பாக்ஸ்

இந்த சர்தார்ஜி... கஜினிஜி! 'லகான்', 'மங்கள்பாண்டே', 'கஜினி' எனப் படங்களின் கெட்டப் மேனியாவை விளம்பரப் படங்களுக்கும் பரப்புவது அமீர்கான் ஸ்டைல். சேட்டிலைட் டி.வி. ஒன்றுக்காகத்தான் இந்த வயசான சர்தார்ஜி மிரட்டல். 'அந்த' சர்தார்ஜி ஜோக்குக்குப் பதில் தெரியுமா அமீர்?

'கோவா' பசங்களுக்கு வில்லி சினேகா. அவர் கேரக்டரை வெங்கட்பிரபு விவரித்த அழகிலேயே மயங்கி, 'அன்லிமிடெட் கால்ஷீட்டுக்கு ரெடி' என்றாராம். சிரிப்பு போலீஸ் மாதிரி சிரிப்பு வில்லியா..?

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

'அரசியலில் சிரஞ்சீவிதான் என் ரோல் மாடல்!' என்று அறிவித்திருப்பது அ.இ.ச.ம.க. கட்சித் தலைவர் சரத்குமார். ஹைதராபாத் பத்திரிகையாளர்களிடம், 'அவர் ஃபார்முலா வைத்தான் இந்தத் தேர்தலில் பின்பற்றப் போகிறேன். அவர் அழைத்தால் கூட்டணிக்கும் தயார்' என்றெல்லாம் சரத் சொல்ல, சிரஞ்சீவியிடம் நோ ரியாக்ஷன்! சாட் பூட் த்ரீ... சரத்காரு ஃப்ரீ!

சமீபகாலமாக கமல் தன் மெனுவில் கொள்ளு ரசத்தைச் சேர்த்துக்கொள்கிறார். ரசாவதாரம்!

'தலைவன் இருக்கிறான்' படத்தில் கமலுடன் கைகோக்கிறார் அஜீத். கூடவே மோகன்லாலும் நடிக்கச் சம்மதித்திருக்கிறாராம். 'தல'யும் இருக்கிறான்!

இன்பாக்ஸ்

சிரஞ்சீவியின் 'ஒன் மேன் ஷோ'வைச் சமாளிக்க முடியாமல் திண்டாடுகிறார்கள் ஆந்திர காங்கிரஸார். அட்டாக் நம்பர் ஒன்னாக தேர்தல் முடியும் வரை டி..வி-யில் சிரஞ்சீவி மற்றும் அவரது தம்பி பவன் கல்யாணின் படங்களை ஒளிபரப்பத் தேர்தல் கமிஷனிடம் தடை கோரியிருக்கிறார்கள். ரிமோட் பாலிடிக்ஸ்!

உதவியாளர் நானியும் புருஷன் பிராட் பிட்டும் ஏடாகூடமாக இருந்ததைப் பார்த்த ஏஞ்சலினா ஜோலி இருவரையும் புரட்டி எடுத்துவிட்டாராம். மேட்டர் மீடியாவுக்கும் கசிய... கோபத்தில் துடிக்கிறாராம் பிராட் பிட். ஃப்ராட் பிட்!

இன்பாக்ஸ்

உலகத் தர வரிசையில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஸ்டார் பிளேயர், மிதாலி ராஜ்! இதனால் மேடத்துக்கு இப்போ எக்கச்சக்க விளம்பர வாய்ப்புகள். 27 வயதான மிதாலிக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள். ஆனால், 'எனக்கு கிரிக்கெட் மேட்ச் தான் முக்கியம். லைஃப் மேட்ச்சுக்கு இன்னும் நாள் கள் இருக்கு!' என்று தட்டிக் கழித்து வருகிறாராம் மிதாலி. எனி மேட்ச் ஃபிக்ஸிங்?

இன்பாக்ஸ்

'சிக்கந்தர்' இந்திப் படத்தில் ஹீரோ மாதவனுக்கு ஜோடி ஆயிஷா கபூர். 'பிளாக்' படத்தில் சின்ன வயது ராணி முகர்ஜியாக நடித்து அசத்தியவர் என்பதால், இந்தப் படத்துக்கு அதுவே பெரிய எதிர்பார்ப்பாம். பொண்ணுக்கு சென்னையைக் காட்டுங்க மேடி!

இன்பாக்ஸ்

ஆன்மிக இதழொன்று ஆரம்பிக்கும் முஸ்தீபுகளில் கங்கை அமரன் பிஸி! அநேகமாக முதல் இதழ் அட்டைப் படத்தை அலங்கரிக்கப் போவது பாண்டிச்சேரி அன்னை. அன்னை அருளட்டும்!

குஜராத்தில் வானிலை மாற்றங்களைக் கணித்து அறிவிக்கவென தனி இலாகாவை உருவாக்கி, சர்வதேச ஷொட்டு வாங்கியிருக்கிறார் நரேந்திர மோடி. மத்திய அரசில்கூட இல்லாத துறையாம் இது. 'நீங்க நல்லவரா... கெட்டவரா?'

இன்பாக்ஸ்

ரூபினா அலி - அசார். 'ஸ்லம்டாக் மில்லியனர்' வாண்டுகளுக்கு இப்போ ஏக டிமாண்ட். 'ஜெய் ஹோ' பாடல் உரிமை வாங்கிய காங்கிரஸ், இந்த வாண்டு களையும் தங்களுடன் பிரசார வேனில் அழைத்துச் செல்ல 'ஓ.கே' வாங்கிவிட்டார்களாம். 'குழந்தை அரசியல்வாதி' தடுப்புச் சட்டம்லாம் கிடையாதா?

விஜய் நடிக்கும் 'வேட்டைக்காரன்' ஓப்பனிங் ஸாங் சென்சேஷனுக்காக ரொம்பவே யோசித்தவர்கள், 'பிடித்துப் போடுடா ஜூனியர் இளைய தளபதி'யை என்று அவரது ஏழு வயது மகன் சஞ்சய் கால்ஷீட் வாங்கியிருக்கிறார்களாம். டாடி பையன் ஆட்டம் பாரு!

முதல் படம் 'பல்லவி அனுபல்லவி'யில் தொடங்கி தற்போதைய 'அசோகவனம்' வரை மணிரத்னம் பென்சிலால்தான் ஸ்கிரிப்ட் எழுதுகிறார். பென்சில்மேனியா!

இன்பாக்ஸ்

அடுத்த பாலா படத்தின் புதுக் கூட்டணி சூர்யா +தனுஷ். கலகல படத்தை மளமளவென முடித்துக் கொடுக்க, தி.நகர் அலுவலகத்தில் பரபர டிஸ்கஷனில் பாலா பிஸி. அதில் நான் சக்கரவர்த்தியடா!

ஆசிய சினிமாவுக்கு மிகச் சிறந்த பங்களிப்பு அளித்ததற்கான இந்த வருடத் தேர்வு, பிரியங்கா சோப்ரா. 'இத்தனை குறுகிய காலத்தில், ஹிந்தி சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக உயர்ந்தது சாதாரண விஷயம் இல்லை' என்பது விருது கமிட்டியின் பாராட்டு. சோப்ரா... தமிழுக்கு மறுபடி ரா...ரா!

'ஸ்லம்டாக் அழகி' ஃப்ரீதா பின்டோ, பாலிவுட் வாய்ப்புகளைக் கண்டும்காணாமல் ஹாலிவுட் நோக்கியே தவமிருக்கிறார். வரமாக இப்போ ஜேம்ஸ்பாண்ட் பட வாய்ப்பு கைக்கெட்டும் தூரத்தில். வாய்ப்பு கிட்டினால், நிஜமாகவே 'ஃப்ரீ'தா பின்டோதான்!

இன்பாக்ஸ்

'82-வயதிலும் நண்பர்களுக்குக் கடிதம் எழுதிக்கொண்டு ஆரோக்கியமாகவே இருக்கிறார் என் நண்பர்!' என்று சொல்லி, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் வெனிசுலா அதிபரான ஹ்யூகோ சாவேஸ். இவரது நண்பர்... கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ. சிவப்பு நட்பு!

ஷூட்டிங் இல்லையென்றால், 'பறந்தோடி' வந்து தான் வளர்க்கும் விதவிதமான பறவைகளைக் கொஞ்சிக் கொண்டிருப்பது விக்ரம் விருப்பம். அதில் ஒரு கிளி 'கென்னி' என கிளுகிளுக்கும் அளவுக்குப் 'பாசக்கார பய'. கிளிய மட்டுமா கொஞ்சுறீங்க!

 
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்