Published:Updated:

டூயட் கிளினிக்

டூயட் கிளினிக்

டூயட் கிளினிக்

டூயட் கிளினிக்

Published:Updated:

01-04-09
ஸ்பெஷல் 1
டூயட் கிளினிக்
டூயட் கிளினிக்
 
விதவிதமா, வித்தியாசமா...
டூயட் கிளினிக்
டூயட் கிளினிக்
டூயட் கிளினிக்

''தினமும் ஒரே மாதிரி இல்லாம விதவிதமா, வித்தியாசமா செய்யலாம்னு என் மனைவியிடம் சொல்றேன். ஆனா, அவ அதுக்கு மறுக்கிறா. நீங்கதான் அவளுக்கு நல்ல புத்தி சொல்லணும்!'' என்ற வேண்டு கோளுடன் வந்தார் ஒருவர். அவரது மனைவியை விசாரித்தேன். ''சார், நீங்க என்னை விசாரிக்கிறதுக்குப் பதிலா, அவருக்கு 'நல்ல' புத்தி சொல்லுங்க. ரொம்ப அப்நார்மலா நடந்துக்கச் சொல்றார்!'' என்றார் சங்கடத்துடன்.

மருத்துவரீதியாக இதுவரை உலக அளவில் செக்ஸில், 'இது நார்மல்... இது அப்நார்மல்' என்று எதையும் தீர்மானிக்கவில்லை. ஒரு சமுதாயத்தில் ஒன்றை நார்மல் அல்லது அப்நார்மல் என்று சொல்வது, அவரவர் அறிவை வைத்து முடிவு செய்யப் படுவதாகவே இருக்கிறது. ஒரு காலத்தில் நார்மல் என்று முடிவு செய்திருந்த ஒரு விஷயத்தை இன்னொரு காலத்தில் அப்நார்மல் என்று மாற்றிக்கொள்ளவும் வேண்டியிருக்கும்.

உதாரணமாக, முன்பு சுய இன்பத்தைப் பாவ காரியமாக நினைத்தார்கள். சில காலம் கழித்து அதனை நோய் என்றார்கள். இன்றைய நாளில் அது பாவமுமல்ல, நோயுமல்ல! அதே போல சமூகம் பாவச் செயலாகக் கருதிய ஓரினச் சேர்க்கையை, மருத்துவ உலகம் மனநோயாகப் பட்டியலிட்டது. 1978-க்குப் பிறகு, இது மனநோய் கிடையாது, செக்ஸ் செயல் பாடுகளில் ஒன்று என்ற முடிவுக்கு வந்தனர்.

ஒரு செக்ஸ் நடவடிக்கையை மருத்துவரீதியில், புள்ளிவிவர அடிப்படையில், சமூகக் கண்ணோட்டத்தில் 'நார்மலா அல்லது அப்நார்மலா' என்று முடிவு செய்யலாம் என்றாலும், அதுவே இடியாப்பச் சிக்க லாகத்தான் இருக்கும். உதாரணமாக, சுய இன்பத்தை மருத்துவரீதியிலும் புள்ளிவிவர அடிப்படையிலும் நார்மல் என்று ஏற்றுக்கொண்டாலும், சமுதாயம் இன்னமும் சுய இன்பத்தை நார்மல் என்று ஏற்றுக் கொள்ளாததைக் குறிப்பிடலாம். எனவே, வார்த்தை அளவில் ஒன்றை நார்மல் அல்லது அப்நார்மல் என்று சொல்வதே தவறாகும்.

செக்ஸ் நடவடிக்கையை நார்மல்/அப்நார்மல் என்று சமூகப் பார்வையில் பார்க்காமல், அது ஆரோக்கியமானதா/ஆரோக்கியமற்றதா என்று மட்டுமே பாருங்கள்.

மருத்துவரீதியில் ஒரு கணவனும் மனைவியும் விருப்பத்துடன் படுக்கையறையில் ஈடுபடும் செக்ஸ் நடவடிக்கை அனைத்துமே நார்மல்தான். ஆனால், ஒரே நிபந்தனை... அது இருவருக்கும் சந்தோஷம் தரக் கூடியதாக, ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.

படுக்கையறையில் கணவனுக்குப் பிடித்தது மனைவிக்குப் பிடிக்கவில்லை என்றால், கணவன் மனைவியை அதில் ஈடுபட வற்புறுத்தக் கூடாது. ஒரு செக்ஸ் செயல்பாட்டில் ஒருவரது விருப்பத்துக்கு இன்னொருவர் மறுப்புத் தெரிவிக்கிறபோது, தனது துணைக்கு முறையாகப் புரியவைக்க மருத்துவரிடம் அழைத்துச் சென்று தெளிவு பெறலாம்.

டூயட் கிளினிக்

 
டூயட் கிளினிக்
டூயட் கிளினிக்