Published:Updated:

'ஜெயில்பவன்' அண்ணாச்சி!

'ஜெயில்பவன்' அண்ணாச்சி!

'ஜெயில்பவன்' அண்ணாச்சி!

'ஜெயில்பவன்' அண்ணாச்சி!

Published:Updated:

01-04-09
ஸ்பெஷல் 1
'ஜெயில்பவன்' அண்ணாச்சி!
'ஜெயில்பவன்' அண்ணாச்சி!
 
'ஜெயில்பவன்' அண்ணாச்சி!
'ஜெயில்பவன்' அண்ணாச்சி!
- பி.ஆண்டனிராஜ், ம.கா.செந்தில்குமார்

'ஜெயில்பவன்' அண்ணாச்சி!
'ஜெயில்பவன்' அண்ணாச்சி!

சென்னையை அறுசுவை உணவால் ருசிக்க வைத்த 'அண்ணாச்சி' ராஜகோபால், மொத்தத் தமிழகத்தையும் தன்னைப் பற்றிய செய்திகளால் கிறங்கவைத்தார். பிரின்ஸ் சாந்தகுமார் என்ற இளை ஞரைக் கடத்திக்கொண்டு போய் கொலை செய்து விட்டார் என்ற கிரிமினல் வழக்குதான் அவரை முதலில் வளைத்தது. ஆனால், சாந்தகுமாரின் மனைவி ஜீவஜோதியை அடையவே நடந்த கொலை என்றும், அண்ணாச்சிக்கு இது போன்ற க்ராஸ் ரூட்ஸ் அதி கம் என்றும் பரவிய செய்திகள் கிரிமினல் வழக்கைக் கிளுகிளுப்பாக்கின. கோர்ட்டா, ஜெயிலா... எங்கு போனாலும் போஸ் கொடுத்தார். எல்லாவற்றுக்கும் ஜோசியம் பார்த்தார். 'அடுத்த குருப்பெயர்ச்சி வந்தா சரியாப் போகும்' என்று சமாதானம் செய்துகொண் டார். குரு, சனி எது பெயர்ந்ததோ, சுற்றளவைச் சுருக்கி, செல்லுக்குள் வைத்துவிட்டது. அண்ணாச்சியை நவக்கிரகங்கள் படுத்தியதோ இல்லையோ, அவரைச் சுற்றி வந்த இந்த நவக்கிரகங்கள் சும்மா விடவில்லை என்பதுதான் நிஜம்.

பிரின்ஸ் சாந்தகுமார்: அண்ணாச்சியைப் பொறுத்த வரை அஸ்தமனச் சூரியன் இவர். மதுரை சிங்கம்புணரி யைச் சேர்ந்த கணக்குப் பட்டதாரி. ஜீவஜோதியின் தம்பி ராஜ்குமாருக்கு கணக்கு சொல்லிக் கொடுக்க வந்தவர், காதல் வலையில் விழுந்தார். ஜீவஜோதியின் அப்பா, சரவணபவன் நிர்வாகத்தை மலேசியாவில் கவனிக்க அனுப்பிவைக்கப்பட்டவர். இந்தக் குடும் பத்துக்கு அப்பா ஸ்தானத்தில் இருந்த அண்ணாச்சி வசம், ஜீவஜோதியின் காதல் பஞ்சாயத்து வந்தது. மனசு அவரை நீதிபதி ஸ்தானத்தில் இருந்து இறக்கி பங்காளியாக ஆக்கியது. ஒரு பக்கம் சாந்தகுமார், இன்னொரு பக்கம் ராஜகோபால். முடிவெடுக்க முடி யாமல் திணறினார் ஜீவஜோதி. அவருக்கு அதிக காலம் இடம் கொடுக்காமல், கொடைக்கானலில் சாந்தகுமார் சமாதி ஆக்கப்பட்டார் என்றது வழக்கு. வினை அங்குதான் விதைக்கப்பட்டது.

ஜீவஜோதி: 'ஜீவன் என்றால் சனி, ஜோதி என்றால் செவ்வாய். இரண்டுக்கும் ஆகாது. இரண்டு பேரையும் சேர்த்து வைத்துக்கொண்டால் பிராண அவஸ்தைதான்' என்று சில ஜோதிடர்கள் சொன்னதை ஆரம்பத்தில் கேட்கவில்லை அண்ணாச்சி. 'குளோபல் டிராவல்ஸ்' அமைக்க ஜீவஜோதிக்கு இரண்டு லட்சம் ரூபாய் கொடுக்குமளவுக்கு ராஜகோபாலின் ஆசை வளர்ந்தது. சாந்தகுமாரைத் தட்டிவைக்கும் பயணமும் அரங்கேறி யது. ஜீவஜோதி வாழ்க்கை இருண்டதற்கு நஷ்டஈடாக அண்ணாச்சி 55 லட்சம் தரவேண்டுமென்று கீழ்க் கோர்ட்டு சொன்னது. பிறகு உயர்நீதிமன்றம் என்ன நினைத்ததோ... அப்பீலின்போது நஷ்டஈடு பற்றி எது வுமே சொல்லவில்லை. இன்று மறுமணம் செய்து, குழந்தைச் செல்வத்தோடு வாழ்ந்தாலும், மர்ம முடிச்சு கள் முழுமையாக அவிழாத ஒன்றுதான் ஜீவஜோதியின் வாழ்க்கை!

வள்ளியம்மை: வளர்பிறையும் தேய்பிறையுமானசந்தி ரன்தான் அண்ணாச்சியின் மனைவி வள்ளியம்மை. திடீரென்று அண்ணாச்சிக்கு எதிராக ஆதங்கத்தைக் கொட்டித் தீர்ப்பார். அப்புறம் நமக்கென்ன என்பது மாதிரி அமைதியாக இருந்துவிடுவார். அடிமட்டத்தில் வாழ்க்கை துவங்கியபோது, முதல் கஷ்டங்களில் கைகொடுத்த அப்பாவிப் பெண்மணி. மூத்த மகன் சிவக்குமார், இளைய மகன் சரவணன். மூத்தவர் வெளி நாட்டு நிர்வாகத்தையும் இரண்டாமவர் இங்கே உள்ள ஹோட்டல் நிர்வாகத் தையும் கவனிக்கிறார்கள்.

கே.கே.நகர் ஹோட்டலுக்குப் பின்னால் உள்ள இல்லத்தில்தான் வள்ளியம்மை இருக்கிறார். 'கூட இருக்கவங்க கண்டிச்சுத் திருத்தியிருக்கணும். ஆனா, அவங்க அதைச் செய்யலை. நான் என்ன பண்ண முடியும்?' என்பதுதான் இயலாமையோடு வள்ளியம்மை அடிக்கடி சொல்வது!

கணபதி ஐயர்: அண்ணாச்சியின் ஆரம்ப காலத்து நண்பர். தன் வழிக்கு வந்தால் ஆதரித்து, வராவிட்டால் தன் வழியில் போய்விடும் சுக்கி ரன். ராஜகோபால், கணபதி ஐயர், ராமானுஜம் ஆகிய மூன்று பேர் சேர்ந்துதான் ஆரம்பத்தில் சரவணபவனை ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் பிறகு நண்பர்களுக்குள் சிறு மனத்தாங்கல் வந்து, பிரிவினைகள். கணபதி ஐயர் தனிக் கடை ஆரம்பித்து... அங்கும் கூட்டம் கட்டி ஏறியது. அண்ணாச்சி ஆட்களால் அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல், தொந்தரவுகளைத் தொடங்கினார்கள். கடையை மூடிவிடுமளவுக்கு நெருக் கடி. ஜீவஜோதி விவகாரம் முற்றிப்போய் ராஜகோபாலுக்கு நிம்மதியான வாழ்க்கை போனது. இதன் பின்னணியில் கணபதி இருப்பாரோ என்று பயந்த அண்ணாச்சி,பழைய பாச வலையை விரித்தார். மீண்டும் அவரைசரவணபவனுக் குக் கொண்டுவந்தார். ஐயர் வந்தும் தொல்லை ஓய வில்லை!

கிருத்திகா: அண்ணாச்சியின் வியாபாரம் பொன் னாகக் கொழித்த காலத்தில் அறிமுகமான புதன்தான் கிருத்திகா. ஏழைக் கணவர் கணேசனைப் பிரிந்து, அண்ணாச்சியோடே வந்து, தனி இல்லம் கண்டு தங்கி விட்டவர். முறுக்கு செக்ஷன்தான் இவர் ஸ்பெஷல். என்றாலும், காலப்போக்கில் எல்லா பிராஞ்ச்களுக்கும் போய் அத்தனை அயிட்டங்களையும் பதம் பார்த்து கூடுதல், குறைவு சொல்ல ஆரம்பித்தார். வசதியான வீடு, வாழ்க்கை என்று போய்க்கொண்டு இருந்தபோது இவருக்கும் ஒரு தனி அணி உருவாகி... அது அண்ணாச் சிக்குப் பிடிக்காமல் போய்... 'என் உயிருக்கு ஆபத்து' என்று திடீர் புகார் சொல்லிப் பிரிந்துவிட்டார் கிருத் திகா! 'சேர்ந்து வாழ நான் தயார்' என்று ராஜகோபால் சொல்லியும், இதுவரை கிருத்திகா ஏற்கவில்லை.சென்டி மென்ட் ஜெயிக்குமா? செட்டில்மென்ட் நடக்குமா? தெரியவில்லை!

டேனியல்: 'அண்ணாச்சியை இருட்டாக்கிய கேது' என்கிறார்கள் டேனியலை. கட்டிக்கொண்டு வா என் றால், வெட்டிக்கொண்டு வருகிற ரகம்! பிரின்ஸ் சாந்தகுமார் ஒரு இடையூறு என்றதும், ஆட்களைக் கூட்டிப் போய் அன்பாக மிரட்டியதில் ஆரம்பித்தது விவகாரம். 'சும்மா அவனை மிரட்டத்தானே சொன்னேன்? இப்படிப் பண்ணிட்டு வந்து நிக்கிறீங்களே' என்று அண் ணாச்சி பயந்து புலம்பியதாகவும் தகவல் உண்டு. சைதை, வேதாரண்யத்தில் வழக்கு என்று தொடர்ச் சியான வலைகள் விழ... டேனியல், டிரைவர் பட்டு ராஜன் அண்ட் கோ முக்கிய காரணம்!

மடிப்பாக்கம் ரவி: மனதுக்குப் பிடித்ததைச் செய்யத் தூண்டும் செவ்வாய் இது. அண்ணாச்சிக்கு ஆஸ்தான ஜோதிடராக இருந்ததால், பூந்தமல்லி கோர்ட் படியில் ஏறி இறங்கும் 'யோகம்' வந்தது. 'ஜீவஜோதிக்கும் அண்ணாச்சிக்கும் போன ஜென்மத்து முடிச்சு' என்று ரவி சொன்ன 'நெஞ்சம் மறப்பதில்லை' கதைதான் அத்தனைக்கும் ஆரம்பம் என்கிறார்கள் அண்ணாச்சி ஆட்கள் சிலர். தன்னிடம் வருபவர்களுக்குக் காலில் கறுப்புக் கயிறு கட்டிவிடுவது இவரது பரிகாரங்களில் ஒன்று. பிரச் னைகள் பூதாகரமாகி, அண்ணாச்சியின் கைக்கு விலங்கு வந்த பிறகு, இருவருக்குமான தொடர்பு முறிந்தது!

பரப்பாடி நாகரெத்தினம்: பிரின்ஸ் சாந்தகுமாருக்கும் ஜீவஜோதிக்குமான காதலை மறக்கடிக்க 'மருந்து எடுக்கிறேன்' என்று அண்ணாச்சி நாடியது இந்தப் பாட்டியைத்தான்! திருச்செந்தூர் போகிற வழியில் அப்படியே பரப்பாடிக்குக் காரைத் திருப்பி ஜீவ ஜோதியை இவரிடம் கூட்டிச் சென்றார் அண் ணாச்சி. 'மருந்து எடுத்தார்களா, அல்லது கொடுத்தார் களா?' என்பது இன்றுவரை கேள்விதான்! அசந்தால் ஆளை விழுங்கும் ராகுவாக இந்தப் பாட்டியும்அமைந்து போனார். குழல் ஒன்றை ஜீவஜோதியின் வாயில் வைத்து கிழவி இழுத்ததாகவும், மருந்து(!) வெளியே வந்துவிட்டதாக எதையோ எடுத்துக் காட்டியதாகவும்... அண்ணாச்சி அகமகிழ்ந்ததாகவும் போகிறது அந்தக் கதை!

ராமச்சந்திரன்: வழக்கின் குருவே இவர்தான். 'என்னைத் திட்டம் போட்டு மாட்டிவிட்டவர்' என்று இவரைப் பற்றி ராஜகோபால் இப்போதும் புலம்புகிறார். கிண்டி உதவி ஆணையராக இருந்த ராமச்சந்திரன்தான் எஃப்.ஐ.ஆரை இறுக்கியவர். பூந்தமல்லி கோர்ட்டுக்கு இவர் கொண்டுவந்த 42 சாட்சிகளில் 13 மாறினாலும், 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை வாங்கிக்கொடுக்க இன்ஸ்பெக்டர்கள் தெய்வசிகாமணி, சிவசங்கரன் டீம் காரணம். ராமச்சந்திரன் ஓய்வு பெற்றாலும், வழக்கின் கோப்புகளில் அவர் போட்டு வைத்த முடிச்சுகள்தான் ஹைகோர்ட்டில் இன்று அண்ணாச்சியின் அப்பீலை காலி செய்துவிட்டது!

 
'ஜெயில்பவன்' அண்ணாச்சி!
'ஜெயில்பவன்' அண்ணாச்சி!