Published:Updated:

பாஸ்போர்ட்

பாஸ்போர்ட்

பாஸ்போர்ட்

பாஸ்போர்ட்

Published:Updated:

01-04-09
ஸ்பெஷல் 1
பாஸ்போர்ட்
பாஸ்போர்ட்
 
தண்ணீர் யுத்தம்!
பாஸ்போர்ட்
- மருதன், பாஸ்போர்ட்

பாஸ்போர்ட்

ங்கு சென்றாலும் புகைப்படம் ஒன்றைக் கையோடு கொண்டுசெல்கிறார் அந்த விவசாயி. ஒரு வீடு, தோட்டம், மூலையில் மேயும் செம்மறி ஆடுகள், ஒரு தாத்தா, ஒரு சிறுவன் என மிகச் சாதாரண ஒரு படம்தான் அது. ஆனால், சோகமும் துக்கமும் பொங்க ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டிப் பேசுவார் அந்த விவசாயி. ''இவர் என் தாத்தா. இப்போது உயிரு டன் இல்லை. இந்தச் சிறுவன் நான்தான். இந்த வீடு விற்கப்பட்டுவிட்டது. பெரும்பாலான ஆடுகள் இறந்து விட்டன. தோட்டமும் வயலும் அழிந்துவிட்டன. இழந்த பசுமை இனி மீளப்போவதில்லை. குடிக்கும் தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கினால், கட்டுப்படி ஆகுமா ஐயா?''

உலகின் மிக வறட்சியான பிரதேசம் க்வில்லாகுவா (Quillagua). விவசாயிகளில் பெரும்பாலோர் வெளி யேறிவிட்டனர். ஏற்கெனவே வறண்டுபோன அவர்களின் நிலம் இப்போது பாளம் பாளமாக வெடித்துக்கிடக்கிறது. கிட்டத்தட்ட சிலி முழுவதும் இதுதான் நிலைமை. தண்ணீர் அங்கே தனியார் நிறு வனங்களின் சொத்து. காசு இருந்தால்தான் நீர் வாங்க முடியும். காசு கொடுத்து லாரியில் நீர் வாங்கி, வயலில் ஊற்றி விவசாயம் செய்யும் அளவுக்கு அங்கே யாரிட மும் வசதி இல்லை. கடைகள் மூடப்பட்டுவிட்டன. ரயில் நிலையத்தில் ஈ, காக்காய் இல்லை.

இதற்கிடையில், டை கட்டிய நபர்கள் அவ்வப்போது வந்து மிரட்டுகிறார்கள். ''இந்த இடத்தைக் காலி செய்யுங்கள், அணை ஒன்றைக் கட்டப்போகிறோம். இதோ ஆர்டர். ஹைட்ரோ எலெக்ட்ரிக் ப்ராஜெக்ட். 3 மில்லியன் டாலர். 2,750 மெகா வாட்!''

கொதித்துவிட்டார்கள் மக்கள். பருக ஒரு சொட்டு நீர் இல்லை; இருக்கும் ஏரி, குளம் அனைத்தையும் வளைத்துப்போட்டுவிட்டீர்கள்; இப்போது இருப்பிடத் தையும் பிடுங்கிக்கொள்ளப்போகிறீர்களா?

இன்றைய சிலியில் இதுதான் நிலைமை. நீர்நிலைகள் அனைத்தும் தனியார்மயம் ஆகிவிட்டன. ஏரி, குளம், ஆறு மாத்திரமல்ல, பனி மலையில் இருந்து சொட்டும் பனி நீர்கூட தனியார் நிறுவனங்களுக்குத்தான். அவர்கள் தங்கள் விருப்பம்போல் அணைகள் கட்டிக்கொள்ளலாம். புட்டியில் நீரை அடைத்து, இஷ்டப்பட்ட விலைக்கு விற்கலாம். ஏன், எதற்கு என்று கேள்வி கேட்க ஒருவருக்கும் அதிகாரம் இல்லை... அரசாங்கம் உள்பட.

தனியார்மயத்தை பிரிட்டனில் பெரிய அளவில் கொண்டுவந்தவர் மார்க்கரெட் தாட்சர். அதற்காக அவர் கடுமையான எதிர்ப்புகளைச் சந்திக்கவேண்டி வந்தது. என்றாலும், தாட்சர் சிறிதும் அசைந்துகொடுக்கவில்லை. தாட்சர் தனியார்மயத்தை அறிமுகம் செய்வதற்கு முன்பே, அதாவது 1980 மத்தியிலேயே சிலி இந்த விஷயத்தைக் கையில் எடுத்துக்கொண்டுவிட்டது. அரசாங்கம் என்பது இயேசுநாதர் அல்ல, வருத்தப்பட்டு எல்லாப் பாரங்களையும் சுமக்க! எனவே, தனியார் நிறுவனங்களை வரவழைத்துப் பேசி, ஒப்பந்தம் போட்டனர். ''இந்தா மின்சாரம். இந்தா தொலைத் தொடர்பு. இந்தா தொழில்நுட்பம். போய் வாருங்கள். மங்களம் உண்டாகட்டும்.'' 1990-ம் ஆண்டுவாக்கில் இரண்டே இரண்டு துறைகள் மட்டும்தான் அரசாங் கத்திடம் எஞ்சியிருந்தன. நீர் மற்றும் சுகாதாரத் துறை.

நீர்..? நிச்சயம் இது பிரச்னைக்குரிய ஏரியாதான். விவசாயத்துக்கு, சரக்கு உற்பத்திக்கு, தொழில் வளர்ச்சிக்கு, மக்கள் தேவைக்கு என நீர் தேவை. ஏரியில், குளத்தில், ஆற்றில் உள்ள நீரைச் சரியாக நிர்வாகம் செய்தால்தான் அனைவருக்கும் பிரித்து, வகுத்துக் கொடுக்க முடியும். எதற்கு வீண் குடைச்சல்?

1998-ல் ஆரம்பித்தார்கள். மொத்தமுள்ள ஐந்து பெரிய தண்ணீர் நிறுவனங்களில் மூன்றை பிரிட்டன் நிறுவனங்களிடம் ஒப்படைத்தது சிலி. இரண்டை மட்டும் வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தது. முடியவில்லை. பாரம் அழுத்தியது. இந்தா பிரான்ஸ், உனக்கு ஒன்று. அங்கே யார்? ஸ்பெயினா? எடுத்துக்கோ!

மூன்றே ஆண்டுகளில் சிலியின் முக்கால்வாசி நீர் வளம் தனியார் நிறுவனங்களிடம் சென்றுவிட்டது. சாண்டியாகோ, வால்பரைஸோ, கான்செப்ஷியன் ஆகிய நகரங்களில் முழுக்க முழுக்கத் தனியார் நிறுவனங்களே நீரை நிர்வாகம் செய்தன. அத்துமீறுபவர்களுக்குத் தண்டனையாம். எது அத்துமீறல்? தாகம் என்றால் குனிந்து, இரு கைகளாலும் நீரை அள்ளிப் பருகுவதா? கால்நடைகளைக் குளத்துக்குத் தண்ணீர் காட்ட அழைத்துச் செல்வதா?

'ஆமாம்!' என்றன நிறுவனங்கள். ''அனைத்தையும் நாங்கள் வாங்கி விட்டோம். உங்களுக்குத் தண்ணீர் வேண்டுமென்றால், காசு கொடுத்து வாங்கிச் செல்லுங்கள்.'' நிலைமை மோசமடைந்தது. பெட்ரோல், டீசல் கணக்காக நீரின் விலையும் ஏற ஆரம்பித்தது. சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியை நீருக்குக் கொடுக்க வேண்டும் என்பதை சிலி மக்க ளால் ஏற்க முடியவில்லை. அசைந்துகொடுக்கவில்லை அரசாங்கமும், நிறுவனங்களும். ஏப்ரல் 2001-ல் சாண்டியாகோ பகுதிவாசிகள் வீதியில் இறங்கினார்கள். அதிபரின் மாளிகைக்கு முன்னால் நின்று கோஷம் போட்டார்கள். ''இயற்கையாகக் கிடைக்கும் நீருக்கு அநியாய விலை விதிப்பது மனிதாபிமானமற்ற செயல். உலகம் முழுவதும் பாருங்கள். எங்காவது இதுபோல் நடந்ததுண்டா? அரசாங்கம் ஒழிக!'' என்று அவர்கள் கத்த ஆரம்பிப்பதற்குள், காவலர்கள் வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்துக் (அதாவது, காசு கொடுத்து வாங்கிய தனியார் தண்ணீரை) கூட்டத்தைக் கலைத்துவிட்டார்கள்.

2030-ம் ஆண்டில், உலகில் பாதிப் பேருக்கு நீர் கிடைக்காது. தண் ணீரை மையமாகக்கொண்டு நாடுகள் ஒன்றோடொன்று அடித்துக் கொள்ளக்கூடும். இஸ்ரேல், சூடான், மத்திய ஆசியா என்று உலகம் முழுவதும் நீர் யுத்தம் பரவப்போகிறது. சரி, இதற்கென்ன மாற்று? மழை நீர் சேகரிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற வழவழா வெண்டைக்காய் யோசனைகளை மட்டுமே வழங்குகிறது ஐ.நா.

தண்ணீருக்கான அரசியல் போராட்டம் சிலியில் தீவிரமடைந்து கொண்டே இருக்கிறது. அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என்று கோஷம் எழுப்புகிறார்கள் மக்கள். அந்த விவசாயி தன் பயணத்தைத் தொடர்ந்துகொண்டே இருக்கிறார். பருகும் நீர் எங்காவது இலவசமாகக் கிடைக்காதா? அந்தப் புகைப்படம் பழுப்பேறிவிட்டது என்றாலும், விடாப்பிடியாகத் தன்னுடனே வைத்திருக்கிறார்!

 
பாஸ்போர்ட்
பாஸ்போர்ட்