Published:Updated:

டாடா nano ரை ரைட்!

டாடா nano ரை ரைட்!

டாடா nano ரை ரைட்!

டாடா nano ரை ரைட்!

Published:Updated:

01-04-09
ஸ்பெஷல் 1
டாடா nano ரை ரைட்!
டாடா nano ரை ரைட்!
 
டாடா nano ரை ரைட்!
டாடா nano ரை ரைட்!
- பி.ஆரோக்கியவேல்

டாடா nano ரை ரைட்!
டாடா nano ரை ரைட்!

ஸ்கூட்டி பெப் பெண்கள் 'நேக்கு நானோ' என்று அப்பாவின் பேங்க் பேலன்ஸைக் கரைக்கலாம். 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கொரு நானோ கார் இலவசமாக அளிக்கப்படும்!' என்று 'அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி'த் தலைவர் கார்த்திக் வாக்குறுதி அளிக்கலாம் (அட! இந்தத் தேர்தல்ல அவர் கட்சியும் போட்டி போடுதுங்க!). தியேட்டர், ஷாப்பிங் மால்களில் 'இங்கு நானோ கார்களுக்கு பார்க்கிங் அனுமதியில்லை' என்று போர்டுகள் தொங்கலாம். அட! என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நானோ அறிமுகமாகிவிட்டதுங்க!

'லட்ச ரூபாய் கார் ஆட்டோ போலத்தான் இருக்கும்', 'அட! அதெல்லாம் சாத்தியமே இல்லைங்க... பத்தாவது நாள்ல விலையேத்திருவாங்க!' போன்ற விமர்சனங்களையும் அரசியல்வாதிகளின் போராட்டங்களையும் மீறி தனது லட்ச ரூபாய் லட்சியத்தைச் சாதித்துவிட்டார் ரத்தன் டாடா.

முதல் ஒரு லட்சம் நானோ கார்கள் லட்ச ரூபாய்க்கே விற்கப்படும் என்று மீண்டும் நானோ அறிமுகத்தின்போது அறிவித்தார் ரத்தன். (வரிகள் சேர்க்காத விலை) 'லட்ச ரூபாய்க்கு கார் ஓடுவதே பெரிய விஷயம் என்பதால், பாதுகாப்பு அம்சங்களைப் பெரிதாக எதிர்பார்க்க முடியாது. ரயில் வண்டி கணக்காகப் புகை கக்கும்!' போன்ற பிரசாரத்தை முறியடிக்கும் விதத்தில், 'பாரத் ஸ்டேஜ் மிமிமி' சான்றிதழ் பெற்றிருக்கிறது நானோ. ஐரோப்பாவுக்கும் நானோ ஏற்றுமதியாகஇருக்கிறது என்பது அதன் தரத்துக்கு இன்னொரு சான்றிதழ்.

குஜராத் நானோ தொழிற்சாலையில் முழு வீச்சில் உற்பத்தியைத் துவக்கும்போதுதான் வருடத்துக்கு மூன்றரை லட்சம் நானோ கார்கள் தயாராகும். அப்போதுதான் இன்னும் பல இந்தியர்கள் அதனை இயக்க முடியும். எல்லாம் சரி... அறிமுகமாகிஉள்ள நானோவில் என்னவெல்லாம் ஸ்பெஷல்?

பேஸிக் மாடலில் ஏ.ஸி, பவர் விண்டோஸ், சென்ட்ரல் லாக்கிங் போன்ற எந்த எக்ஸ்ட்ரா வசதிகளும் கிடையாது. இவையெல்லாம் பொருத்தப்பட்ட நானோவுக்கு விலை கிட்டத்தட்ட இரண்டு மடங்காகலாம். இன்ஜின் பின்புறம். முன்புற பானெட் திறந்துதான் பெட்ரோல் போட வேண்டும். அங்குதான் ஸ்டெப்னி டயரும் இருக்கிறது. காருக்கான பேட்டரி டிரைவர் ஸீட்டுக்கு அடியில். மைலேஜ் ஊருக்குள் 18 கி.மீட்டர், நெடுஞ்சாலைகளில் 20 கி.மீட்டர். அதிகபட்ச வேகம் 106 கி.மீட்டர். பெட்ரோல் டேங்க் கொள்ளளவு பதினைந்தே லிட்டர்தான். டாடா தயாரிப்பு என்பதால் இன்ஜின் தரம் ஓ.கே-வாகத்தான் இருக்கும். ஆனால், நம்மவர்களின் தடாலடி பயன்பாட்டுக்குத் தாங்கினால்தான், நானோ 'காரா' அல்லது 'கார் மாதிரி'யா என்று சொல்ல முடியும்!

 
டாடா nano ரை ரைட்!
டாடா nano ரை ரைட்!