Published:Updated:

இங்க பேட்டா... அங்க கோட்டா!

இங்க பேட்டா... அங்க கோட்டா!

இங்க பேட்டா... அங்க கோட்டா!

இங்க பேட்டா... அங்க கோட்டா!

Published:Updated:

01-04-09
ஸ்பெஷல் 1
இங்க பேட்டா... அங்க கோட்டா!
இங்க பேட்டா... அங்க கோட்டா!
 
இங்க பேட்டா... அங்க கோட்டா!
இங்க பேட்டா... அங்க கோட்டா!
- பா.பிரவீன்குமார்
இங்க பேட்டா... அங்க கோட்டா!

கல்வி, வாழ்க்கைத் தரம் போன்றவற்றில் தேர்ச்சி காட்டும் தென் மாநில மக்கள், 'ஓட்டுக்குத் துட்டு' விஷயத்திலும் 'உயர்' மதிப்பினர்தான். தேர்தலில் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்களிக்க தென் மாநில மக்கள்தான் அதிக அளவில் பணம் கேட்பதாகச் சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. ஆந்திராவில் 94, தமிழகத்தில் 78, கர்நாடகம் மற்றும் சட்டீஸ்கரில் 73 சதவிகிதத்தினர் 'ஓட்டுப் போட துட்டு வாங்குவது தப்பே இல்லை' என்று கருத்து தெரிவித்திருக்கின்றனர். கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் 'வாக்கு... காசாக்கு' என்ற கருத்து குறைவாக உள்ளதாம்!

முதல்வர் தகுதிக்கான சட்டமன்ற இடைத் தேர்தலில் தோல்வியடைந்து, ஜார்கண்ட் மாநில முதல்வர் பதவியில் இருந்து விலகியவர் சிபுசோரன். இப்போது அம் மாநில நாடாளுமன்ற,

இங்க பேட்டா... அங்க கோட்டா!

சட்டமன்றத் தேர்தல்கள் இரண்டிலும் போட்டியிடுகிறார். எம்.எல்.ஏ-வாகத் தேர்வானால் ஜார்கண்ட் முதல்வராகிவிடுவது, எம்.பி-யானால் கூட்டணி ஆட்சியில் எதையாவது உருட்டிப் புரட்டி மத்திய அமைச்சர் பதவி வாங்கிவிடுவது என்பது ஐயாவின் பிளான். ரெண்டுமே புட்டுக்கிட்டா?!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் தொகுதிக்கான தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் சாய்ஸ், அஜய் ஜடேஜாவும் அமீஷா பட்டேலும். சிலபல சுற்றுகளுக்குப் பிறகு, தொகுதியை அமீஷா பட்டேல் கைப்பற்றிவிட்டார் என்று செய்தி. ''எனக்கே ஆச்சர்யமா இருக்கு. ஏன்தான் இப்படி என்னைப் பத்தி மட்டும் தப்புத் தப்பா நியூஸ் பரப்புறாங்களோ (அட, இது நல்ல விஷயம்தானே!). எதிர்காலத்துல ஒருவேளை நான் அரசியலுக்கு வரலாம். ஆனா, இப்போ இல்லை. ஏன்னா, நான் ரொம்ப சின்னப் பொண்ணு!'' என்பது அமீஷாவின் ஸ்டேட்மென்ட்.

இங்க பேட்டா... அங்க கோட்டா!

வழக்கமான தேர்தல் சோதனைகளின்போது, பீகாரின் 6 மாவட்டங்களில் 26 'எலெக்ஷன் ஸ்பெஷல்' துப்பாக்கித் தொழிற்சாலைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் போலீஸார். இதுவரை ஆயிரக்கணக்கில் விற்றுள்ள துப்பாக்கிகளை எங்கே போய்க் கண்டுபிடித்துக் கைப்பற்றுவது? இங்கெல்லாம் தேர்தல் வேலைக்கு பேட்டா... அங்கே தோட்டா!

பஞ்சாப் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ரஜினிஷ் அரோரா, ஏழை மாணவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் கல்வி உதவித்தொகை அறிவித்தார். உடனே, தேர்தல் ஆணையம் 'தேர்தல் விதிமுறையை மீறியதாக' அவருக்கு நோட்டீஸ் அனுப்பிவிட்டது. ஆணையத்துக்கு என்ன பதில் அளிப்பது என்று பேராசிரியர்கள் துணையுடன் விவாதித்து வருகிறாராம் துணைவேந்தர். நல்லா யோசிங்க... எத்தனை பசங்களைக் கேள்வி கேட்டிருப்பீங்க!

செல் வேட்டைக்கும் வேட்டு வைத்துவிட்டது தேர்தல் ஆணையம். செல்போனில் அனுப்பப்படும் பிரசார எஸ்.எம்.எஸ்-களுக்கான செலவையும் வேட்பாளரின் தேர்தல் செலவில் சேர்க்க வேண்டும் என்று அறிவித்துவிட்டது தேர்தல் கமிஷன். மேலும், அப்படியான எஸ்.எம்.எஸ்கள் எவரையேனும் காயப்படுத்துகின்றன என்று புகார் வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் உப எச்சரிக்கை!

 
இங்க பேட்டா... அங்க கோட்டா!
இங்க பேட்டா... அங்க கோட்டா!