Published:Updated:

பெண்கள் ஓட்டு யாருக்கு? விகடன் மெகா சர்வே.. பளீச் ரிசல்ட்!

பெண்கள் ஓட்டு யாருக்கு? விகடன் மெகா சர்வே.. பளீச் ரிசல்ட்!

பெண்கள் ஓட்டு யாருக்கு? விகடன் மெகா சர்வே.. பளீச் ரிசல்ட்!

பெண்கள் ஓட்டு யாருக்கு? விகடன் மெகா சர்வே.. பளீச் ரிசல்ட்!

Published:Updated:

01-04-09
ஸ்பெஷல் 1
பெண்கள் ஓட்டு யாருக்கு? விகடன் மெகா சர்வே.. பளீச் ரிசல்ட்!
பெண்கள் ஓட்டு யாருக்கு? விகடன் மெகா சர்வே.. பளீச் ரிசல்ட்!
 
பெண்கள் ஓட்டு யாருக்கு? விகடன் மெகா சர்வே.. பளீச் ரிசல்ட்!
விகடன் சர்வே டீம்

பெண்கள் ஓட்டு யாருக்கு? விகடன் மெகா சர்வே.. பளீச் ரிசல்ட்!
பெண்கள் ஓட்டு யாருக்கு? விகடன் மெகா சர்வே.. பளீச் ரிசல்ட்!
பெண்கள் ஓட்டு யாருக்கு? விகடன் மெகா சர்வே.. பளீச் ரிசல்ட்!

'பெண்கள் ஓட்டு யாருக்கு?'

''என் கையில் ஒரு ஓட்டு இருக்கு. யாருக்குப் போடணும்கிறதைவிட யாருக்குப் போடக் கூடாதுன்னு தெளிவா முடிவு பண்ணிட்டேன்!'' - பளிச்சென அசத்தினார் மதுரை மலர்விழி அக்கா. ''ஆரம்பத்துல ஓட்டு போடக் கூடாதுன்னுதான் நினைச்சேன். ஆனா, ஆயிரம் ரூபா தர்றாங்களாமே..? ஏறிக்கிட்டு இருக்கிற விலைவாசியில குடும்பச் செலவுக்காவது ஆகுமே!'' என்று அப்பாவியாகச் சொன்னார் தூத்துக்குடி இல்லத்தரசி. ''எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், நான் கடைக்கு வேலைக்கு வந்து சம்பளம் வாங்கினாத்தானே சாப்பாடு?'' என்று சலித்துக்கொண்டார், நாமக்கல் எலெக்ட்ரிக் கடையில் வேலை பார்க் கும் சத்யா.

தமிழகம் முழுவதும் நமது விகடன் டீம் 2,221 பெண்களிடம் சர்வே எடுத்தது. மொத்தம் 17 கேள்விகள்.

ஓட்டுப் போடுவதில் மிகப்பெரும்பான்மையோர் ஆர்வமாக இருக்கிறார்கள். அனைவரும் சுயமுடிவுடன் தாங்கள் நினைக் கும் கட்சிக்குத்தான் ஓட்டுப் போடுவேன் என்றது கம்பீரமான முடிவாக இருந்தது.

பெண்கள் ஓட்டு யாருக்கு? விகடன் மெகா சர்வே.. பளீச் ரிசல்ட்!
பெண்கள் ஓட்டு யாருக்கு? விகடன் மெகா சர்வே.. பளீச் ரிசல்ட்!

திருவாரூர் மாணவி ரேவதி, ''தேர்தலே தண்டச் செலவு. திருடர்களைத் தேர்ந்தெடுக்கும் திருவிழா. நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் விளையாட்டு!'' என்று ஆவேசக்குரல் எழுப்பினார்.

பெண்களின் கோபங்கள் அழுத்தமாகவும் ஆவேசமாகவும் இருந்தன. ''விலைவாசியை மத்திய அரசாங்கம் கட்டுப்படுத்தவே இல்லை. பெட்ரோல், டீசல் விலையை ஏத்தும்போது பலமடங்கு ஏத்துறாங்க. இறக்கும்போது கொஞ்சமா இறக்குறாங்க. கேஸ் சிலிண்டர் விலையை இன்னும் குறைச்சிருக்கணும். ஒட்டகத்தின் முதுகில் தாங்க முடியாத அளவுக்குப் பொதியை ஏத்திட்டு, சும்மா கண்துடைப்புக்காகச் சின்ன மூட்டையை இறக்கிப் போடுற மாதிரிதான் பண்றாங்க'' என்று வேலூர் மல்லிகா பொரிந்து கொட்டினார். அதே ஊரைச் சேர்ந்த பேராசிரியர் அம்சா, ''ஒரு ரூபாய்க்குப் போடுற அரிசி ரொம்ப மோசமா இருக்கு. அஞ்சு ரூபாய்க்கு நல்ல அரிசியைப் போட லாம். தரமான அரிசியை அடக்க விலைக்குக் கிடைக்கச் செய்யறதுதான் அரசாங்கத்தின் லட்சியமா இருக்கணும்'' என்றார் அழுத்தமாக.

திருவாரூர் ராஜேஸ்வரி இலவசங்களையே மறுக்கிறார். ''இலவசமே ஏமாத்துற வேலை. இது மக்களைச் சோம்பேறி யாதான் ஆக்கும். வெளிமார்க்கெட்டுல விலை ஏறுறதைத் தடுக்காம, சும்மா இலவசம் கொடுக்கிறதுனால யாருக்குப் பயன்?'' என்று கேட்கிறார்.

மத்தியதர வர்க்கத்துப் பெண்கள் இப்படிச் சொன்னாலும் அடித்தட்டு மக்களுக்கு ஆறுதலாகத்தான் ஒரு ரூபாய் அரிசி இருப்பதைப் பார்க்க முடிந்தது. தேனியில் நாம் சந்தித்த ஓர் ஏழைப் பெண், ''ஒரு ரூபாய் அரிசியால்தான் எங்களால் மற்ற வசதிகளை அனுபவிக்க முடியுது. வறுமையான வீடு நாங்க. சம்பாதிக்கிற பணம் சாப்பாட்டுக்கே செலவானா, எதை வெச்சுப் பையனைப் படிக்க வைக்கிறது? ஒரு ரூபா அரிசித் திட்டம் மட்டும் இல்லேன்னா, அவனை வேலைக்கு அனுப்பியிருப்பேன்'' என்று கண் கலங்கச் சொன்னார்.

பெண்கள் ஓட்டு யாருக்கு? விகடன் மெகா சர்வே.. பளீச் ரிசல்ட்!

கரூர் கல்லூரிப் பேராசிரியரான சுபத்ரா, ''மன்மோகன் சிங் நல்லவர்தான். ஆனால், அரசியலில் வல்லவராக இல்லை. அஞ்சு வருஷமும் பொம்மை ராஜாவாகத்தான் இருந்தார். அவருடைய நேர்மையை ஈழப் பிரச்னையில் அடமானம் வைத்துவிட்டார். வேறு கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தால், இலங்கைப் பிரச்னையைத் தீர்த்திருக்கும்'' என்றார் தீர்மானமாக.

'தி.மு.க. ஆட்சி எதைச் சரியாகக் கையாளவில்லை?' என்ற கேள்விக்கு மூன்று பதில்களுக்குமே டிக் அடித்தார் திருச்சி மாணவி பிரியதர்ஷினி.

பெண்கள் ஓட்டு யாருக்கு? விகடன் மெகா சர்வே.. பளீச் ரிசல்ட்!

'இந்த அம்மாவுக்கு ஓட்டு போடுறதுக்கு, அந்த அம்மாவுக்கு ஓட்டு போடலாம்' என்று ஜெயலலிதாவைவிட சோனியா மீது பாசம் தெரிவித்தார் ஒரு விழுப்புரம் பெண்மணி. ''பெண்களுக்காக இடஒதுக்கீடு வந்தாலும், அது அரசியல் வாதிகளின் மனைவிகளுக்கும் மகள்களுக்கும்தான் கிடைக்கும்'' என்று யதார்த்தமாகப் பதில் அளித்தனர் பல பெண்கள்.

பெண்கள் ஓட்டு யாருக்கு? விகடன் மெகா சர்வே.. பளீச் ரிசல்ட்!

காட்பாடியைச் சேர்ந்த தேன்மொழி, ''கருணாநிதி இத்தனை முதுமையிலும் தொடர்ந்து உழைப்பதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. ஆனால், உடல்நிலை சரியில்லாத நிலையிலும் நாற்காலியை விட்டு எழாமல் அடம்பிடிப்பது வருத்தமாக இருக்கிறது'' என்றார். 'கருணாநிதியின் இந்த வயது உழைப்பு அனைவருக்கும் வழிகாட்டும்' என்று பெண் கள் சொன்னாலும், அவர் மீதான விமர்சனங்களையும் வைக்கத் தவறவில்லை.

பெண்கள் ஓட்டு யாருக்கு? விகடன் மெகா சர்வே.. பளீச் ரிசல்ட்!

மத்திய அரசின் செயல்பாடு பரவாயில்லை என்று சொல்லும் இவர்கள், விலைவாசிப் பிரச்னையை காங்கிரஸ் அரசு சரியாகக் கையாளவில்லை என்கிறார்கள். மாநில அரசு மீதும் அதே புகார். மின்வெட்டு, ஈழப் பிரச்னையை தி.மு.க. அரசு சரியாகக் கையாளவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

மாநில அரசின் மிக முக்கிய சாதனையாக வர்ணிக்கப்படும் ஒரு ரூபாய் அரிசித் திட்டத்தைப் பெரும்பாலானோர் வரவேற்கவில்லை. சரியான விலையில் தரமான அரிசி தரலாம் என்று கோரிக்கை வைக்கிறார்கள். இலவசமாகத் தரப்படும் கலர் டி.வி., கேஸ் ஸ்டவ் போன்றவை தங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்று அதிகம் பேர் கையை விரிக்கிறார்கள்.

பெண்கள் ஓட்டு யாருக்கு? விகடன் மெகா சர்வே.. பளீச் ரிசல்ட்!

மாநில உள்ளாட்சித் துறை சார்பில் செயல்படுத்தப்படும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெண்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. மது, புகை ஒழிப்பு தொடர்பாக பா.ம.க. பேசி வருவதெல்லாம் உண்மையான பிரச்னையில் இருந்து கவனத்தைத் திசைதிருப்பத்தான் என்று நினைக்கிறார்கள் பெண்கள். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை மத்திய அரசுதான் கண்டிப்போடு தடுத்திருக்க வேண்டும் என்று பெண்கள் கட்டளையிடுகிறார்கள்.

பெண்கள் ஓட்டு யாருக்கு? விகடன் மெகா சர்வே.. பளீச் ரிசல்ட்!

கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகிய மூன்று பேர் குறித்தும் பெண்கள் நிலைப்பாடு ரசிக்கத்தக்கதாக இருந்தது. பெண் என்பதற்காக ஜெயலலிதாவுக்கு முக்கியத்துவம் கொடுக்க, இவர்கள் தயாராக இல்லை. விஜயகாந்த்தின் செயல்பாடுகளைப் பார்த்தால், அவர் மாற்றத்தைக் கொண்டுவருவார் என்று பெரும்பாலான பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். இத்தனை முதுமையிலும் தொடர்ந்து கருணாநிதி உழைப்பது குறித்த கேள்விக்கு, 'தானும் சிரமப்பட்டு எல்லோரையும் சிரமப்படுத்துகிறார்' என்றும், 'அவர் உழைப்பதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது' என்றும் ஓரளவு சரிசமமான கருத்துக்கள்தான் வந்தன. இது கருணாநிதியின் உழைப்புக்குக் கிடைத்த மரியாதைதான்.

'உங்கள் ஓட்டு யாருக்கு?' என்ற கேள்விக்குப் பெரும்பாலான பெண்கள், கூட்டணி முடிவாகட்டும் என்றார்கள்.

அங்கேதான் இருக்கு சூட்சுமம்!

பெண்கள் ஓட்டு யாருக்கு? விகடன் மெகா சர்வே.. பளீச் ரிசல்ட்!
பெண்கள் ஓட்டு யாருக்கு? விகடன் மெகா சர்வே.. பளீச் ரிசல்ட்!