Published:Updated:

டூயட் கிளினிக் - 'கல'வாடிய பொழுதுகள்!

டூயட் கிளினிக் - 'கல'வாடிய பொழுதுகள்!

பிரீமியம் ஸ்டோரி

24-06-09
'கல'வாடிய பொழுதுகள்!
டூயட் கிளினிக் - 'கல'வாடிய பொழுதுகள்!
டூயட் கிளினிக் - 'கல'வாடிய பொழுதுகள்!
 
டூயட் கிளினிக் - 'கல'வாடிய பொழுதுகள்!
டாக்டர் டி.நாராயணரெட்டி செக்ஸாலஜிஸ்ட் டூயட் கிளினிக்
டூயட் கிளினிக் - 'கல'வாடிய பொழுதுகள்!
டூயட் கிளினிக் - 'கல'வாடிய பொழுதுகள்!

"டாக்டர்... எங்களுக்குக் குழந்தை பொறந்து ஒரு மாசம் ஆகுது. டெலிவரிக்குப் பிறகு என் மனைவி செக்ஸ்ல ஆர்வமில்லாம இருக்கா. என்ன சார் காரணம்?" என்று கேட்ட பிரேம், குழந்தை பிறந்த சந்தோஷச் சாரலில் நனைவதற்குப் பதிலாக டல்லடித்துக் கிடந்தார்.

பிரசவத்துக்குப் பின், சில பெண்களுக்கு செக்ஸில் ஈடுபாடு கொஞ்சம் குறையலாம். அதற்கு Postpartum Depression என்று பெயர்.

அதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன. பருவத்தின் சறுக்கு மரங்களில் ஏறி, இறங்கி விளையாடிய பொழுதுகள் சட்டென்று அறுபட்டு... கல்யாணம், கணவன், குடும்பம் என்று நீண்டு இன்று குழந்தை வரை வந்துவிட்டதே என்கிற திடீர் திகைப்பு. தாய்மை என்ற சுகமான சுமையைச் சுமந்த அலுப்பு போன்றவை மனரீதியான காரணங்கள்.

பிரசவத்துக்குப் பிறகு சில பெண்களுக்கு முன்பு போல இல்லாமல் ஹார்மோன்கள் அளவு சமநிலை அற்றுப் போவதும் ஒரு காரணம். பொதுவாக எப்போதும் டென்ஷன், படபடப்பு என்றிருக்கும் பெண்களுக்கு டெலிவரிக்குப் பிறகு இந்த நிலை நேரலாம்.

சில பெண்களுக்குப் பிரசவ வலி பூசிய பய அனுபவம் காரணமாக, அதன் பிறகான உறவுகளின் போது ஜனன உறுப்பு தானாகவே இறுக்கமாகிக்கொள் ளும். இதனாலும் மனைவிக்கு உறவில் ஈடுபாடு இல்லையென்று கணவன் கண் கசக்கலாம்.

தாம்பத்ய உறவு இலகுவாக அமைய பிறப்பு உறுப்பில் சுரக்கும் vaginal secretions எனும் திரவம் பிரசவத் துக்குப் பிறகு குறைந்துவிடலாம். இதனால் உறவின் போது வலிக்கும். இதனாலும் செக்ஸில் ஆர்வமில்லாமல் போகலாம். தாய்ப் பால் தரும் சமயத்தில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சிறிது குறைந்துவிடலாம். இதனால் மார்பகம், ஜனன உறுப்புகளைத் தொட்டாலே வலிக் கும். இதுவும் உறவின் மீது கசப்பை ஏற்படுத்தும்.

'பிரசவத்துக்குப் பிறகு எப்போது தாம்பத்ய உறவில் ஈடுபடலாம்?' - பலர் மருத்துவர்களிடம் கேட்கக் கூச்சப்படும் கேள்வி இது. சுகப் பிரசவம் என்றால் 3 வாரங்களுக்குப் பிறகும், சிசேரியன் என்றால் 8 வாரங்களுக்குப் பிறகும் செக்ஸில் ஈடுபடலாம். சுகப் பிரசவங்களின்போது சில பெண்களுக்கு பிறப்பு உறுப்பில் Episiotomy என்ற சிறு தையல் போடப்படும். இதில் உரசாமல் உறவுகொள்ள முயற்சிக்க வேண்டும். சுகப் பிரசவங்களின்போது பெண்ணின் பிறப்புறுப்பு சிறிது விரிவடைந்துவிடலாம். இதனாலும் உறவில் தம்பதி களிடையே அதிருப்தி ஏற்படலாம். ஆனால், ளீமீரீமீறீ's மீஜ்மீக்ஷீநீவீsமீ என்ற எளிய பயிற்சி மூலம் பெண்கள் தங்கள் பிறப்பு உறுப்பை இயல்பு நிலைக்கு திரும்பச் செய்ய லாம்.

மேலும், பிறப்பு உறுப்பு வறண்டு காய்ந்துவிடாமல் இருக்க பல வகை க்ரீம்கள் உள்ளன. அவற்றையும் பயன்படுத்தலாம். எல்லாவற்றுக்கும் மேலாக தாய்மை அடைந்த பெண்ணுக்கு, கணவனின் அன்பான ஆதரவு கூடுதலாகத் தேவைப்படும். மனைவியின் வேதனைகளை அக்கறையோடு கணவன் பகிர்ந்துகொண்டாலே எந்தப் பிரச்னையும் இல்லை!

குழந்தைக்கு
தாயின் இடுப்பே இருக்கை
தோள்களே தொட்டில்
கால்களே கழிவறை!

- வி.மருதவாணன்

 
டூயட் கிளினிக் - 'கல'வாடிய பொழுதுகள்!
-
டூயட் கிளினிக் - 'கல'வாடிய பொழுதுகள்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு