பிரீமியம் ஸ்டோரி

24-06-09
மிஸ்டர் மாஸ் பாஸ்!
மிஸ்டர் மாஸ் பாஸ்!
மிஸ்டர் மாஸ் பாஸ்!
 
எஸ்.கலீல்ராஜா
மிஸ்டர் மாஸ் பாஸ்!

மிர் மௌதேஷம் அலிகான் நின்றால் பொதுக்கூட்டம்; நடந்தால் ஊர்வலம்! 6 அடி உயரம், 100 கிலோ எடை, உடல் எங்கும் படிக்'கட்ஸ்'கள் என பிரமாண்டமாக மிரட்டும் கான்தான் இந்தியாவின் நம்பர் ஒன் பாடி பில்டர்.

மிஸ்டர் மாஸ் பாஸ்!

இந்திய கிரிக்கெட் மோகத்தில் கண்டு கொள்ளப்படாமல் போன திறமைசாலிகளுள் ஒருவர். கடந்த வருடம் கலிஃபோர்னியாவில் நடந்த உலக பாடி பில்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் ஹெவிவெயிட் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் கான். ஹைதராபாத்தில் இருந்து வந்திருக்கும் முதல் பாடி பில்டர் என்பதால் ஆந்திராவே கானை கொண்டாடுகிறது. ஆனால், ஆந்திராவைத் தாண்டி அவரை யாருக்கும் அடையாளம் தெரியாது என்பதுதான் சோகம்.

இந்த மாதம் ஃபுளோரிடாவில் நடக்க இருக்கும் மிஸ்டர் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொள்ளும் 6 பேர் கொண்ட குழுவுக்கு கான்தான் கேப்டன். ''இப்போ எனக்கு 33 வயசு. என் 16-வது வயசுல அர்னால்ட் மாதிரி உடம்பு வைக்கணும்னு முடிவெடுத்து, தினமும் 3 மணி நேரம் எக்சர்சைஸ் பண்ண ஆரம்பிச் சேன்.

மிஸ்டர் மாஸ் பாஸ்!

அதன்பிறகு 3 மிஸ்டர் சவுத் இந்தியா, 8 மிஸ்டர் சவுத் சென்ட்ரல் ரயில்வே, 11 மிஸ்டர் ஹைதராபாத்னு ஏகப்பட்ட பட்டங்கள். ரயில்வேயில் வேலை கிடைச்சுது. ஆனா, அதிலேயே செட்டில் ஆகிடக்கூடாதுன்னு தோணுச்சு. இன்னும் தீவிரமா வொர்க்-அவுட் ஆரம்பிச்சேன். தினம் ஒரு கிலோ சிக்கன், 30 அவிச்ச முட்டை, 12 ஆரஞ்சுப் பழம், 2 கிளாஸ் ஸ்வீட் லைம் ஜூஸ், ஒரு கப் ஸ்வீட் கார்ன், 200 கிராம் க்ரீன் சாலட், 250 கிராம் ஓட்ஸ் கஞ்சி, விட்டமின் பவுடர் கலந்த பால்னு தினசரி மெனு. ஒருநாள் சாப்பாட்டு செலவு மட்டும் 1,200 ரூபாய். செலவைப் பத்திக் கவலைப்படலை. ஸ்பெஷல் எக்சர்சைஸ் கருவிகள் வாங்கி ஒரு நாளைக்கு 4 மணி நேரம் பயிற்சி பண்ண ஆரம்பிச்சேன். அந்த உழைப்புக்கு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 2-வது இடம் கிடைச்சுது. லாலு பிரசாத்யாதவ் 5 லட்ச ரூபாய் பரிசும் புரமோஷனும் கொடுத்தார். 1986-ம் வருஷம், ப்ரேம்சந்த்னு ஒரு இந்தியர் 'மிஸ்டர் யுனிவர்ஸ்' பட்டம் வாங்கினார். அடுத்து யாருமே அந்த பட்டம் வாங்கலை. ஆனா, அதை நான் சாதிப்பேன்னு நம்பிக்கை இருக்கு. அரசாங்கம் எங்களைக் கண்டுக்கலைன்னாலும், நாங்க உலக அரங்கத்தில் இந்தியாவைக் கண்டுக்க வைப்போம்!'' என்று முஷ்டி முறுக்குகிறார் கான்.

 
மிஸ்டர் மாஸ் பாஸ்!
-
மிஸ்டர் மாஸ் பாஸ்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு