பிரீமியம் ஸ்டோரி

24-06-09
ஹோம்மேட் சினிமா[A]!
ஹோம்மேட் சினிமா[A]!
ஹோம்மேட் சினிமா[A]!
 
கரு.முத்து,ம.கா.செந்தில்குமார்
ஹோம்மேட் சினிமா[A]!
ஹோம்மேட் சினிமா[A]!

'கல்லூரி மாணவியுடன் காதலன், கமிஷனர் ஆபீஸில் தஞ்சம்!', 'கள்ளக் காதலுக்காகக் கணவன் தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற மனைவி', '2011-ல் ஜெயித்துக் காட்டுகிறோம்!', 'அங்கு நாங்கள் கொடுத்திருக்கிறோமே... இங்கு எங்களுக்குக் கொடுத்தால் என்ன? - கதர் புள்ளிகள் ஆவேசம்!' போன்றவழக் கமான செய்திகளுடன் தற்போது தவறாமல் செய்திகளில் இடம்பிடிக்கும் வரிகள்... 'பாண்டிச்சேரியில் பரவிய செல்போன் லீலை!', 'திருச்சி காதலர்களின் ரகசிய சில்மிஷ வீடியோ வெளியானதால், காதலி தற்கொலை முயற்சி!'

ஸ்கேண்டல் வீடியோஸ்தான் (scandal videos) தற்போது ஆபாச மார்க்கெட்டில் தறிகெட்டு வியாபாரமாகும் சங்கதி. ஒரு சில நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய இந்த செக்ஸ் க்ளிப்பிங்ஸ் அனைத்தும் 'ஹோம்மேட் ஸ்பெஷல்!' அதாவது, முழுக்க முழுக்கத் தம்பதிகள், காதலர்கள், கள்ளக் காதலர்கள் இடையே யான அந்தரங்கங்கள் மட்டுமே! வீடு, அலுவலகம், கல்லூரி, பள்ளி(!), பஸ், கார், ஹோட்டல் அறைகள் போன்ற சராசரி இடங்கள் பின்னணியாக இருந்தால், அதன் மதிப்பே தனி. வாரா வாரம் இந்த 'ஹோம்மேட் ஸ்பெஷல் கலெக்ஷன்ஸ்' வாங்க ஆலாய்ப் பறக்கிறது 20 டு 60 வயதினரின் படை.

இந்த கிளிப்பிங்ஸ்களின் மார்க்கெட்டிங்கில் ஈடுபடும் முக்கியப் புள்ளி ஒருவரிடம் பேசியதில், "வீடியோ கேமரா செல்போன் வந்த பிறகுதான் இப்படி ஒரு சங்கதியே உருவாச்சு! லவ்வர்ஸ் அவங்களுக்குள்ள பண்ற சேட்டையைச் சும்மா ஜாலிக்காக எடுக்குறது, சில விவகாரமான பசங்க வேணும்னே கேர்ள் ஃப்ரெண்ட்ஸோடு தனிமையில் இருப்பதை எடுத்து வெச்சுக்குறது, ஹனிமூன் கொண்டாட்டங்கள்னு எப்படியோ செல்போனுக்குத் தப்பிச்சு வர்ற க்ளிப்பிங்ஸ்தான் ஹாட் ஹிட்! செல்லச் சீண்டல்கள், கிளுகிளுப்பான பேச்சுக்கள், குளியல், உடை மாற்றும் காட்சிகள்னு எல்லாத்துக்குமே டிமாண்ட்தான். குறிப்பா, தமிழ் வசனங்கள் தெளிவாகக் கேட்டால் டிரிபிள் டிமாண்ட். அந்த க்ளிப்பிங்சுக்கான பேர்களே அதன் பூர்வீகத்தைச் சொல்லிவிடும். 'சென்னை ஆன்ட்டி', 'மதுரை ஸ்டூடன்ட்', 'லேடி வித் சர்வன்ட்', 'டிரைவர் ஃபிகர்', '....பேங்க்'னு பேரே கிக் ஏத்துற மாதிரி இருக்கணும். தமிழ்நாட்டுல இருக்குற எல்லா முன்னணி காலேஜ், யுனிவர்சிட்டி பேரிலும் க்ளிப்பிங்ஸ் இருக்கும்.

'நேட்டிவிட்டியா இருக்கு. பொண்ணுங்க அப்பாவியா நிக்கு துங்க. குறுகுறுன்னு இருந்தாலும், ஒரு மாதிரி இருக்கு'ன்னு கேட்டு வாங்கிட்டுப் போறானுங்க. இப்படித்தான் தஞ்சாவூர் பிளஸ் டூ படிக்கிற பொண்ணு பாய் ஃப்ரெண்டோட இருந்தது அந்தப் பையனுக்கே தெரியாம லீக் ஆயிருச்சு. ஏரியா பசங்க கிண்டல் அடிச்சதுல, அந்தப் பொண்ணு வீட்டைவிட்டு வெளியே வரவே பயந்துக்கிட்டு பதுங்கிருச்சு. விஷயம் தெரிஞ்சு அந்தக் குடும்பம்ஊரையே காலி பண்ணிட்டுப் போயிருச்சு.

ஹோம்மேட் சினிமா[A]!

இன்னொரு கிளிப்பிங்ல கிட்டத்தட்ட 35 வயசு குடும்பத் தலைவி, தாலி கழுத்துல புரளப் புரள ஒரு விடலைப் பையன்கூட இருப்பாங்க. வீட்டு வேலைக்கு வந்த பையனாம். வீடியோ ரிலீஸ் ஆயிருச்சு. கண்ணியமான குடும்பத்தோட மருமகளாம் அவங்க. விஷயம் புருஷனுக்குத் தெரிஞ்சு, இப்போ ரெண்டு பேரும் பிரிஞ்சு வாழுறாங்க. சங்கடமாத்தான் இருக்கு... என்ன செய்யச் சொல்றீங்க!" என்று வேதனையுடன் முடித்தார் பார்ட்டி.

இந்த 'ஹோம்மேட் ஸ்பெஷல்ஸ்' கிளிப்பிங்ஸ்களை டவுன்லோட் செய்வதற்கென மட்டுமே இயங்கும் வெப்சைட்டுகளில் பல மாநில, பல கலாசார, பலான சங்கதிகள் குவிந்துகிடக்கின்றன. அத்தனையிலும் 'அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட்டுகள்!' செல்போன்களில் 'சும்மாச்சுக்கும்' எடுக்கும் படங்களை டெலிட் செய்தாலும் மீண்டும் மீட்டெடுக்கும் சர்வர்களும் உண்டு.

'இவற்றைத் தடுக்க முடியாதா, அந்தரங்கங்களில் ஈடுபடுபவர்களே அதை வெளியிட்டால் என்ன நடவடிக்கை எடுக்கலாம்' என்று சென்னை சைபர் க்ரைம் வட்டாரங்களில் விசாரித்தபோது...

"இதுபோன்ற கிளிப்பிங்ஸ்களை ப்ளூடூத் மூலம் பரிமாறிக்கொள்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கொடுக்க முடியும். தங்களுக்குள் அந்தரங்கமாகப் படம் எடுத்துக்கொள்வதைத் தடுக்க முடியாது. ஆனால், ஒருவருக்குத் தெரியாமல் மற்றவர் அந்த க்ளிப்பிங்ஸ்களைப் பரப்பினால் தண்டனை உண்டு. அவ்வாறு பதிவு செய்யும் வீடியோக்களை செல்போன் மூலமாகவோ, இன்டர்நெட் மூலமாகவோ ஃபார்வர்ட் செய்வதும் குற்றமாகும்!" என்பவர்கள் இறுதியாக, "என்னதான் சட்டதிட்டங்கள் போட்டாலும் பெண்கள் முன் னைக் காட்டிலும் அதிக எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டும்!" என்கிறார்கள்.

உஷார்... உஷார்... உஷார்!

 
ஹோம்மேட் சினிமா[A]!
-
ஹோம்மேட் சினிமா[A]!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு