Published:Updated:

மூட்டுவலிக்கு முற்றுப்புள்ளி! : ஜாசன்

மூட்டுவலிக்கு முற்றுப்புள்ளி! : ஜாசன்

பிரீமியம் ஸ்டோரி

24-06-09
மூட்டுவலிக்கு முற்றுப்புள்ளி!
மூட்டுவலிக்கு முற்றுப்புள்ளி! : ஜாசன்
மூட்டுவலிக்கு முற்றுப்புள்ளி! : ஜாசன்
 
ஜாசன்
மூட்டுவலிக்கு முற்றுப்புள்ளி! : ஜாசன்

டலின் அனைத்து இயக்கங்களுக்கும் மடங்கி, விரிந்து ஒத்துழைக்கும் மூட்டுகளைப் பாதுகாத்துப் பராமரிப்பதற்கான டிப்ஸ்...

மூட்டுவலிக்கு முற்றுப்புள்ளி! : ஜாசன்

கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதன்மை பேராசிரியர் மற்றும் ராயப்பேட்டை மருத்துவமனை எலும்பு முறிவு - மூட்டு நோய் பிரிவு மருத்துவர் கே.நாகப்பன்.

உடல் எடையைத் தாங்குவதோடு அதிக உராய்வுகளுக்கும் ஆளாவது முழங்கால் மூட்டுகள்தான். எனவே, அவை அதிக அளவில் பாதிப்புகளுக்கு உள்ளாகலாம்.

அதிக உடல் எடைதான் பெரும்பாலான மூட்டுவலிகளுக்குக் காரணமாக இருக்கிறது. எனவே, உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

மூட்டுக்கு வலு சேர்க்கும் குருத்து எலும்புகளில் உள்ள சில புரதங்கள் குறையும்போது, அது மூட்டுக்களிலும் தேய்மானத்தை ஏற்படுத்தும்.

சம்மணமிட்டு அமர்ந்து எழச் சிரமப்படுவது போன்ற மூட்டுவலிக்கான ஆரம்ப அறிகுறிகளின்போதே மூட்டுகளைப் பரிசோதித்து, மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

மூட்டுவலியால் பாதிக்கப்பட்டவர்கள் தரையில் அமர்வதையும் படுப்பதையும் தவிர்ப்பது நல்லது.

மூட்டுவலிக்கு முற்றுப்புள்ளி! : ஜாசன்

வலி நிவாரணிகள், பிசியோதெரபி போன்ற மருத்துவ முறைகளின் மூலம் மூட்டுவலியை எளிதில் குணப்படுத் தலாம்.

தீவிர மூட்டுவலியில் இருந்து மீள முடியாதவர்கள் நவீன மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மூலம் நிரந்தரமான தீர்வு காணலாம்.

மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிறகு, வலி இல்லாமல் வேகமாக நடக்கவும், படிக்கட்டுகள் ஏறி இறங்கவும் முடியும்.

அதிகக் கொழுப்புச் சத்து உள்ள உணவுகளைத் தவிர்ப்பது, மூட்டுகளுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தாமல் இருக்கும்.

அளவான உடல் எடை, முறையான உடற்பயிற்சி போன்றவை மூலம் மூட்டுவலி வராமல் தற்காத்துக்கொள்வதுடன் மூட்டு தேய்மானத்தையும் தடுக்கலாம்!

 
மூட்டுவலிக்கு முற்றுப்புள்ளி! : ஜாசன்
-
மூட்டுவலிக்கு முற்றுப்புள்ளி! : ஜாசன்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு