Published:Updated:

டூயட் கிளினிக் - பொய் வெடிகள்!

டூயட் கிளினிக் - பொய் வெடிகள்!


17-06-09
பொய் வெடிகள்!
டூயட் கிளினிக் - பொய் வெடிகள்!
டூயட் கிளினிக் - பொய் வெடிகள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 
டூயட் கிளினிக் - பொய் வெடிகள்!
டாக்டர் டி.நாராயணரெட்டி செக்ஸாலஜிஸ்ட் டூயட் கிளினிக்
டூயட் கிளினிக் - பொய் வெடிகள்!
டூயட் கிளினிக் - பொய் வெடிகள்!

''சார்... நான் ஒரு டாக்டரிடம் போனேன். 'நீ உன் உயிர்ச்சக்தியை நிறைய செலவு பண்ணிட்டே. உன் உடம்பு ரொம்ப பலவீனமா இருக் கு'ன்னு சொல்லி மருந்து கொடுத் தார். அதைச் சாப்பிட ஆரம்பிச்சதும் தூக்கம் தூக்கமா வருது. தப்பான ஆள்கிட்ட போயிட்டேன் சார்'' என்றார் வந்த அவசரத் தில்.

வந்தவர் உயிர்ச்சக்தி என்று சொன்னது விந்துவைத்தான்.இதைப் பற்றி ஏகப்பட்ட தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. அந்த அறியாமையைப் பயன்படுத்தி, போலி மருத்துவர்கள் நிறையப் பணம் பண்ணுகிறார்கள். விந்து வெளியேறினால், உடல் பலவீனப்படும், கண்ணில் டொக்கு விழும், நெஞ்சு படபடக்கும், நினைவாற் றல் குறையும், மனக் கோளாறுகள் ஏற்படும், உயிருக்குக்கூட ஆபத் தாகிவிடலாம் போன்றவை போலி மருத்துவர்கள் திரி கிள்ளிக் கொளுத்தும் பொய் வெடிகள்.

ஒரு சொட்டு விந்து 80 சொட்டு ரத்தத்துக்குச் சமம் என்பதும் கற்பனையே! எல்லா உறுப்புகளுக்கும் ரத்தம் மூலம் சத்துக்கள் போவது போலத்தான் ஜனன உறுப்புக்களுக்கும் சத்துக்கள் செல்கின்றன. எச்சில் போலத்தான் விந்துவும். எச்சிலை வேஸ்ட் பண்ணினால் உடம்பு பலவீனப்பட்டா போகிறது?

விந்து உற்பத்தி அந்தந்த மனிதனின் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயம். இயற்கையின் ஏற்பாடு. ஊறிக்கொண்டே இருக்கும். ஜனன உறுப்பில் பிறவிக் குறைபாடு, தொற்றுநோய், காயங்கள் போன்ற காரணங்களால் மட்டும்தான் விந்து உற்பத்தி தடைப்படும். மற்றபடி, விந்து உற்பத்திக்கு விடுமுறையே கிடையாது.

ஆண்களுக்கு விந்து தயாராவதே சேமிக்க அல்ல... செலவிடத்தான். அப்படி இருக்கும்போது வேஸ்ட் என்கிற பேச்சுக்கே இடமில்லை. இல்லற சுகம், சுய இன்பம், கனவில் வெளியேறுதல் என மூன்று நிலைகளில் விந்து வெளியேறும். திருமணமும் ஆகவில்லை, சுய இன்பப் பழக்கமும் இல்லாத ஆண் களுக்குக் கனவிலாவது விந்து வெளியேறித்தான் தீரும். 'எனக்கு எந்த வகையிலும் விந்து வெளியேறவில்லை' என்று ஒருவன் சொன்னால், பொய் சொல்கிறான் என்றோ அல்லது, அவன் உடம்பில் ஏதோ குறைபாடு என்றோதான் அர்த் தம்.

சிறுநீருடன் விந்து வெளியேறலாம் என்பதும் பலரது நம்பிக்கை. இதுவும் கற்பனையே! சிறுநீர் வெளியேறும்போது விந்து வெளியேறாத வகையிலும், விந்து வெளியேறும்போது சிறுநீர் வெளியேறாத வகையிலும் இயற்கை நமது உட லில் அற்புதமான ஏற்பாடுகளைச் செய்துவைத்துள்ளது. புராஸ்டேட் சுரப்பிக் கோளாறு உள்ள ஆண் களுக்கு மட்டும் சிறுநீருடன் விந்து வெளியேறலாம். மலச்சிக்கல்உள்ள வர்கள் முக்கும்போது 'பாரா யூரேத்ரல் கிளாண்ட்ஸ் செக்ரியே ஷன்ஸ்' என்கிற திரவம் சிறுநீரு டன் வெளியேறும். அதனைப் பார்த்து, அவர்கள் 'ஐயோ... சிறு நீருடன் விந்து வெளியேறுகிறது' என்று பதறலாம்.

சுய இன்பம் மூலம் விந்து வெளியேறுவது தவறல்ல. இதனால் உடல் நலம் கெடாது.

டூயட் கிளினிக் - பொய் வெடிகள்!

விந்துவைச் சேமித்துவைத்து சத்தாக மாற்றலாம், பலம் பெறலாம் என்பதெல்லாம் உடான்ஸ்.

இயற்கை, விந்துவைத் தவணை முறையில் (அ) ரேஷன் அடிப்படை யில் வழங்குவது இல்லை. எனவே, வேஸ்ட் பண்ணினால் ஸ்டாக் தீர்ந்து விடும் என்றெல்லாம் கற்பனை வேண்டாம்.

முருங்கைக்காய், பாதாம் பருப்பு, பேரீச்சை என்று எது சாப்பிட்டாலும் விந்து உற்பத்தியை அதிகரிக்க முடியாது. ஆம், இதற்கென்று பிரத்யேக உணவுகள் எதுவும் இல்லை!

 
டூயட் கிளினிக் - பொய் வெடிகள்!
-
டூயட் கிளினிக் - பொய் வெடிகள்!