Published:Updated:

எலி கிலி

எலி கிலி


17-06-09
எலி கிலி
எலி கிலி
எலி கிலி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 
பா.பிரவீன்குமார்
எலி கிலி
எலி கிலி

உலகத்தைப் பன்றிக் காய்ச்சல் படுத்தியெடுக்க, இந்தியாவைக் காய்ச்சிக் கொண்டு இருக்கிறது எலிக் காய்ச்சல். இக்காய்ச்சலைப் பரப்பும் கிருமியின் பெயர் லெப்டோஸ்பைரா (leptospira). இது பாக்டீரியாவும் இல்லாமல் வைர சும் இல்லாமல் இரண்டுக்கும் இடைப் பட்ட இனமான ஸ்பைரோசீட் வகை யினைச் சேர்ந்தது. இத்தகைய கிருமி நாய், பூனை, மாடு, எலி போன்ற மிருகங் களின் உடலில் இருக்கும். சில சமயங் களில் மட்டுமே அவை மனிதர்களிடம் தொற்றிக்கொள்ளும். எலியின் கிட்னிதான் லெப்டோவின் அபார்ட்மென்ட். இதனால் எலிக்கு எந்தப் பாதிப்பும்வருவது இல்லை. எலிகளின்சிறுநீர் வழியாக வெளியேறும் லெப்டோ நமது உடலில் பட்டாலோ, தண்ணீர் வழியாக உடலுக் குள் சென்றாலோ ஜுரம் சூடு பிடிக்கும். இந்த எலிக் காய்ச்சலைஉடனடியாகக் கண்டுபிடிக்கவும் முடியாது. வழக்க மான மற்ற காய்ச்சல் பரிசோதனைகள் முடிந்த பிறகு 'எம்.எஸ்.ஏ.டி' என்று ஒரு டெஸ்ட் எடுத்து உறுதிப்படுத்த வேண்டும்.

எலி கிலி

''இந்தக் காய்ச்சலின் முதல் அறிகுறி 104 டிகிரி காய்ச்சல். முறுக்கிப் போடுவது போல உடம்பு வலிக்கும். கூடுதலாக வாந்தியும் தலைவலியும் இருக்கும். சாதாரண பென்சிலின் ஊசி மூலம் இந்தக் காய்ச்சலைக் கட்டுப்படுத் தலாம். சில சமயங்களில் இது பென்சிலி னையே எதிர்க்கும் அளவுக்குச் சக்தியை உருவாக்கிக்கொள்ளும். இதனால் 'டாக்சிசைக்ளின்' என்ற மாத்திரையை மருத்துவர்கள் பரிந்து ரைப்பார்கள். இந்தக் கிருமி கழிவு நீர் தேங்கி சாலைகளில் வழிந்தோடும்இடங் களில் தங்கி காய்ச்சலைப் பரப்பும். குளம், கிணறு, பொது நீச்சல்குளங்களில் குளிப்பவர்களுக்கு இந்தக் காய்ச்சல் வேகமாகப் பரவ வாய்ப்பு இருக்கிறது. செருப்பு அணியாமல் செல்வதாலும் காய்ச்சல் தொற்ற வாய்ப்பு உண்டு. இந்தக் கிருமி காய்ச்சலோடு நிற்காமல், கல்லீரலையும் பாதித்து மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும். அதன் பிறகும் தீவிர மாக இருந்து மூளைக்குப் பரவினால் மூளைக்காய்ச்சல் வரவும் வாய்ப்பிருக்கிறது. மருந்து மாத்திரைகளை டாக்டர்கள் அறிவுறுத்தும் வரை எடுத்துக்கொண்டால் மட்டுமே லெப்டோவின் பாதிப்பில் இருந்து முழுமையாகத் தப்பிக்க முடியும். சுத்தமாக இருப்பது மட்டுமே இந்த எலிக் காய்ச்சலில் இருந்து தப்பிக்க ஒரே வழி!'' என்கிறார் நுண்ணுயிரியல் துறைப் பேராசிரியர் சுரேஷ்குமார்.

சுத்தம் சோறு போடுமோ இல்லையோ... லெப்டோவில் இருந்து காப்பாற்றும்!

 
எலி கிலி
-
எலி கிலி