Published:Updated:

ஊட்டி குதிர! குளிரில் எதிர...

ஊட்டி குதிர! குளிரில் எதிர...


17-06-09
ஊட்டி குதிர! குளிரில் எதிர...
ஊட்டி குதிர! குளிரில் எதிர...
ஊட்டி குதிர! குளிரில் எதிர...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 
கி.கார்த்திகேயன் படங்கள்: வி.ராஜேஷ்
ஊட்டி குதிர! குளிரில் எதிர...

மு.கு: இந்தக் கட்டுரையில் ஒரு மெசேஜ் இருக்குப்பா!

'ஹார்ஸ் பவர்... ஹார்ஸ் பவர்' என்பார்களே... ஊட்டியில் குதிரை ரேஸைப் பார்த்தபோதுதான் எனக்கு அது புரிந்தது. 1,400 மீட்டர்களை 1 நிமிடம் 30 விநாடிகளில் புயலெனப் பாய்ந்து கடக்கின்றன ரேஸ் குதிரைகள். சராசரியாக 100 மீட்டருக்கு எட்டே விநாடிகள்!

ஊட்டி குதிர! குளிரில் எதிர...

கான்க்ரீட் கட்டடங்களாக அடுக்கி அத்தனை அழுத்தம் கொடுத்தாலும், இன்னும் கொஞ்சம் பரிசுத்தத்தைத் தன்னுள் ஒளித்துவைத்திருக்கிறாள் மலைகளின் ராணியான ஊட்டி. பள்ளிக் கூடங்களின் மணியோசை சுற்றுலாவாசிகளின் கூட்டத்தைக் காலி செய்திருக்க, பேருந்து நிலையத் துக்கு எதிரிலேயே பச்சைப் பசேலெனப் பரந்து விரிந்திருக்கிறது ஊட்டி ரேஸ்கோர்ஸ். வருடத்தில் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் மட்டும் சென்னை, கிண்டியில் நடக்கும் குதிரை ரேஸ்கள் இங்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்படுகின்றன. காரணம், குதிரைகளுக்கும், குறிப்பாக அதன் உரிமையாளர்களுக்கும் சென்னை வெயில் தாங்காதே!

குதிரை ரேஸ் பந்தயங்களில் 'அருணாச்சலம்' ரஜினி கணக்காக லட்சங்களில், குறைந்தபட்சமாக ஆயிரங்களில்தான் பெட் கட்டப்படும் என்று நினைத்தால், ஆச்சர்யம்! ஐந்து ரூபாயில் இருந்தே பந்தயம் கட்டலாமாம். உடனே உள்ளுக்குள் சின்ன ஃபிளாஷ்... 'நாம் கட்டும் முதல் ஐந்து ரூபாய் ஐம்பதாகி, ஐம்பது ஐந்நூறாகி, ஐந்நூறு ஐயாயிரமாகி...' என்று உள்ளுக்குள் விக்கிரமனின் 'ஒரே பாடலில் ஓஹோ வளர்ச்சி' மியூஸிக் பிட். ஆனாலும், கடமையே கண்ணாகப் பணியாற்றியபடி கிடைக்கும் கேப்புகளில் மட்டும் பந்தயம் கட்டிக் கொண்டு இருந்தோம். ('பந்தயத்தில் விட்ட கதை... பிடித்த கதை' பிறகு.)

ஒரு நாளில் மழை குறுக்கிடாமல் இருந்தால், மொத்தம் 10 ரேஸ்கள் நடக்கின்றன. டால்பின் பே, கிங்ஸ் டிலைட், கோல்டன் கேலக்ஸி, ஓஷன் சில்க், ரெயின்போ வியூ, சீ ஈகல், ராயல் மெரைன், கேண்டி மேன், லார்ட் அட்மிரல் என்று ஒவ்வொரு குதிரைக்கும் ஜபர்தஸ்தான பெயர்கள். நாலு வயதிலிருந்து ஒன்பது வயதுக்குள்ளான குதிரைகள். ஒரு நாளில் ஒரு குதிரை, ஒரு ரேஸ்தான் ஓடும். அதிலேயே அன்றைக்கான எனர்ஜி செலவாகிவிடும். அப்புறம், அடுத்த ரேஸ் தொடங்கும் வரை ராஜ உபசாரம்தான். ஒவ்வொரு குதிரைக்கும் பயிற்சி அளிக்கும்போதே குறிப்பிட்ட ஜாக்கியுடனேயே பழகவைக்கின்றனர். ஜாக்கிக்கும் குதிரைக்குமான கெமிஸ்ட்ரி அத்தனை முக்கியமாம் ('கலா மாஸ்டர்!)! அந்த கெமிஸ்ட்ரியை உண்டாக்குவதுதான் பயிற்சியாளரின் சாதனை. அறிமுகம் இல்லாதவர் அருகில் சென்றாலே, மிரண்டு கனைக்கும் குதிரை, பழகிய ஜாக்கி சுளீரென்று அடித்தாலும் செலுத்தப்பட்டது போல ஓடுவதுதான் அந்த மிஸ்ட்ரி... கெமிஸ்ட்ரி!

ஊட்டி குதிர! குளிரில் எதிர...

ரேஸின்போது குதிரை சுமக்கும் எடையும் அதன் வெற்றியைத் தீர்மானிக்கும். ஜாக்கி, அவரது ஹெல்மெட், ஷூ, ரேஸ் ஜாக்கெட் முதலான உடைகள், ஜாக்கி அமரும் சேணம் ஆகிய அனைத்தும் சேர்த்தே அதிக பட்சமாக 60 கிலோவைத் தாண்டாது. அதில் சிலர் 48.5 கிலோவுக்குள்ளேயே மொத்த சங்கதிகளையும் அடக்கிவிடு கிறார்கள். இதனால் ஜாக்கிகளாக இருக்க வேண்டும் என்றால், அதிகபட்சம் 50 கிலோ உடல் எடையைத் தாண்டாமல் இருக்க வேண்டும். ஒரு ரேஸ் ஓட்டினால் ஜாக்கிக்கு 1,250 ரூபாய் கிடைக்கும். அதில் முதல் மூன்று இடங்களுக்குள் வந்தால், குதிரைக்கு அள்ளி வழங்கப்படும் பரிசுத் தொகையில் ஏழரை சதவிகிதத்தை அதைச் செலுத்திய ஜாக்கிக்கு கிள்ளிக் கொடுப்பார்கள். (முதல் ரேஸில் 'டிஸ்கோ ஸ்டார்' மேல 30 ரூபாய் பந்தயம்... ஜெயிச்சுடுடா கண்ணு... கேரட் வாங்கித் தரேன்!')

குதிரைகள் அடைத்து நிறுத்தப்பட்டிருக்கும் சேம்பரின் கதவுகள் முழுக்கத் திறப்பதற்குள்ளாகவே துப்பாக்கித் தோட்டாக்களாகச் சீறிப் பாய்கின்றன குதிரைகள். 1,400 மீட்டருக்கான ரேஸ். 300 மீட்டருக்குள் லீட் எடுத்து முதல் மூன்று இடங்களுக்குள் வர வேண்டும். வெற்றிக் கோட்டுக்கு 200 மீட்டர் இருக்கையில் பொளேரென்று குதிரையின் முதுகில் (முதுகுதானே அது!) ஒரு இழுப்பு இழுக்கிறார்கள். புரிந்துகொள்ளும் குதிரைகள் சக்தியைஎல்லாம் திரட்டி தடாலென ஒரு பாய்ச்சல் காட்டுகின்றன. குபீர் வேகம். நல்ல லீட் எடுத்து முதலில் ஓடும் குதிரைக்கு அவ்வளவாக அடிகள் விழாது. ஜாக்கி மட்டும் குதிரையின் மேல் முழு பாரத்தையும் கொடுத்து அமராமல் எழுந்து நின்றபடியே குதிரைக்கு இசைவாக ஒத்துழைக்கிறார். ஆனால், அடுத்தடுத்த இடங்களில் வரும் குதிரைகளுக்குப் பளீர், சுளீரென அடிகள்விழுந்து கொண்டே இருக்கின்றன. ('கமான் டிஸ்கோ... கமான்!') அந்தக் கடைசி மீட்டரில் எந்தக் குதிரை மூக்கு நீட்டி முந்துகிறதோ அல்லது முதலிடத்தைத் தக்கவைக்கிறதோ அதுதான் வின்னர். ('டிஸ்கோ டான்ஸ் ஆடிடுச்சுப்பா!') குதிரைகள் மிக நெருக்கமாக பந்தயக் கோட்டைத் தாண்டினால் 'போட்டோ ஃபினிஷ்' மூலம் மூக்கு நீட்டிய குதிரையைக் கண்டுபிடிக்கிறார்கள்.

ஊட்டி குதிர! குளிரில் எதிர...

அந்தக் கடைசி 200 மீட்டரில் தாங்கள் பணம் கட்டிய குதிரையை உற்சாகப்படுத்துவது பார்வையாளர்களின் பணி. ரேஸ் துவங்குவதற்குச் சில நிமிடங்கள் முன் அதில் கலந்துகொள்ளும் குதிரைகள் எந்தெந்த இடங்களைப் பிடிக்கும் என்று ஒரு கணிப்புக் கையேடு அறிவிக்கப்படுகிறது. குறிப்பிட்ட குதிரை முந்தைய ரேஸ்களில் எவ்வாறு பாய்ந்திருக்கிறது, ஜாக்கியின் திறமை, அவருக்கும் குதிரைக்குமான கெமிஸ்ட்ரி, குதிரையின் வயது, சுமக்கும் எடை எனப் பல அம்சங்களைச் சரசரவென அலசி ஆராய்கிறார்கள் பந்தயம் கட்டவிருப்பவர்கள்.

குதிரைகள் சேம்பருக்குள் அடைக்கப்படும் முன் பந்தயம் கட்டப்பட வேண்டும். ('இரண்டாவது ரேசுக்கு 'பி மை ஹீரோ' மேல 30 ரூபாய்... வெற்றி நிச்சயம்.. இது வேத சத்தியம்!')

அதிகம் பேர் பந்தயம் கட்டிய குதிரை ஜெயித்தால், பரிசுக்குப் பலர் போட்டியிடுவதால் 'கொஞ்சூண்டு' காசுதான் கைக்கு வருகிறது. அதே, யாரும் கவனம் செலுத்தாத குதிரை மீது நாம் காசு கட்டி, அது ஜெயித்தும்விட்டால் லம்ப்பான தொகை கிடைக்கும். ஜாக்பாட், ட்ரிபிள், டபிள் எனப் பந்தயங் களிலும் பலப்பல பிரிவுகள். ('அட... ஹீரோ ஜீரோவாப் பூடுச்சுப்பா!')

''இது ஏதோ சூதாட்டம்னு நினைச்சுராதீங்க. முறைப்படி அரசாங்கத்துக்கு வரி செலுத்தி நேர்மையாக நடத்தப்படும் பந்தயம் இது. போறபோக்குல யாரும் ஜெயிச்சுட முடியாது. அதுக்கு அபார கணிக்கும் திறமை வேண்டும்!'' என்கிறார் அமானுல்லா கான். மெட்ராஸ் ரேஸ் கிளப்பின் செயலாளரான இவர்தான் ஊட்டி ரேஸ்களுக்கும் இன்சார்ஜ். ''கிட்டத்தட்ட 450 குதிரைகள் ஊட்டி ரேஸில் கலந்துக்கும். சீஸன் சமயங்களில் இந்த ரேஸ் மூலம் நூற்றுக்கணக்கானவங்களுக்கு வேலை கிடைக்கும். இந்தியாவின் தலைசிறந்த ஜாக்கிகள், பயிற்சியாளர்கள்லாம் இங்கே வருவாங்க. எம்.ஏ.எம்.ராமசாமி போன்ற உரிமையாளர்கள் இந்த ரேசுக்குக் கொடுக்கும் மரியாதை அபாரமானது. அவரைப் போன்ற ஆர்வலர்களும் அரசாங்கத்தின் ஆதரவும்தான் குதிரைகள் நிக்காம ஓடுறதுக்குக் காரணம்!'' என்று கூறியவர், ரேஸ் தொடங்கவும், பைனாகுலரைக் கண்களுக்குக் கொடுத்தார்.

அதற்கும் மேல் பொறுக்க முடியாமல், ரேஸ் கவுன்ட்டர் அருகிலேயே பழியாகக் கிடந்து மாய்ந்து மாய்ந்து பந்தயம் கட்டியதில்... கடைசியில் 15 ரூபாய் ஜெயிக்க முடிந்தது!

என்னாது... மொத்தம் எவ்வளவு ரூபாய்க்குப் பந்தயம் கட்டுனோமா? அடப் போங்கப்பா... விக்கிரமன் படப் பாட்டை நம்பாதீங்க!

பி.கு: மனசு... வலிக்குது... இதாங்க மெசேஜ்!

 
ஊட்டி குதிர! குளிரில் எதிர...
-
ஊட்டி குதிர! குளிரில் எதிர...