Published:Updated:

களிமண் கதகளி!

களிமண் கதகளி!


17-06-09
களிமண் கதகளி!
களிமண் கதகளி!
களிமண் கதகளி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 
எஸ்.கலீல்ராஜா
களிமண் கதகளி!
களிமண் கதகளி!

பிரெஞ்ச் ஓப்பன் 2009-ல் ஆச்சர்யங்களும் அதிர்ச்சிகளும் அதிகம்!

'களிமண் தரைப் போட்டிகளில் மன்னன்' என்று அழைக்கப்படும் ரஃபேல் நடால் இந்த வருடம் 4-வது சுற்றிலேயே வெளியேறினார். கடந்த 3 வருட பிரெஞ்ச் ஓப்பன் இறுதிப் போட்டிகளில் அவரைச் சமாளிக்க முடியாத ரோஜர் ஃபெடரருக்கு அதைவிட நல்ல செய்தி உலகத்திலேயே இருந்திருக்க முடியாது. துள்ளிக் குதித்து விளையாட ஆரம்பித்தவர், ஒருவழியாக தனது வாழ்நாள் கனவான பிரெஞ்ச் ஓப்பனைத் தட்டிவிட்டார். கோப்பை பெற்ற கையோடு, 'டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றால், எந்த வருத்தமும் இன்றி நிம்மதியாக அந்த முடிவை அறிவிப்பேன்!' என்று சந்தோஷித்திருக்கிறார். இதுவரை 14 கிராண்ட்ஸ்லாம்பட்டங் களை வென்றிருக்கும் ஃபெடரர், அடுத்த கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றால், பீட் சாம்ப்ரஸின் சாதனையை மிஞ்சிய உலக சாதனை அது!

களிமண் கதகளி!
களிமண் கதகளி!

பெண்கள் பிரிவில் யாரும் எதிர்பார்க்காத ஸ்வெட்லனா குஸ்னட்சோவா சாம்பியன். சென்ற முறை பட்டம் வென்ற அனா இவானோவிக், நம்பர் ஒன் ரேங்கில் இருக்கும் டினாரா சஃபீனா, ஸ்டார் பிளேயர்களான வீனஸ்-செரீனா வில்லியம்ஸ் சகோதரிகள், மரியா ஷரபோவா என அனை வரும் ரசிகர்களை ஏமாற்றினார்கள். ஃபெடரரின் ராசி டினாராவிடம் இடம் மாறிவிட்டது போல. சென்ற வருடம் இறுதிப் போட்டி வரை அனா இவானோவிக்கிடம் கோப்பையைப் பறிகொடுத்தார் டினாரா. இந்த வருடம் நம்பர் ஒன் ரேங்குடன் வந்து தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் நம்பிக் கையுடன் இருந்தார். ஆனால், இந்த வருடமும் இறுதிப் போட்டியில் காலி. இந்தியர்களுக்கு இனிப்பான வெற்றி லியாண் டர் பயசுடையது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் செக் குடியரசின் லூகாசுடன் இணைந்து கோப்பை தட்டியிருக்கிறார். ஒற்றையர் பிரிவில் அவ்வளவாக சோபிக்காவிட்டாலும் இரட்டையர் பிரிவு ஆட்டங்களில் பின்னியெடுப்பார் பயஸ். அதிலும் மகேஷ் பூபதி துணையென்றால், பயஸின் ஆட்டம் எதிராளிகளைப் பதறவைக்கும். பூபதியை விட்டுப் பிரிந்த பின் பலரோடு இணைந்து இரட் டையர் ஆட்டங்களில் விளையாடி வருகிறார் பயஸ். முதல் முறையாக லுகாஸோடு களமிறங்கி பிரெஞ்ச் ஓப்பனை ஜெயித்திருப்பது பயசுக்கு ரொம்பவே ஸ்பெஷல். காரணம், மகேஷ் பூபதி இல்லாமல் பயஸ் பெற்றிருக்கும் முதல் பிரெஞ்ச் ஓப்பன் வெற்றி இது!

 
களிமண் கதகளி!
-
களிமண் கதகளி!