Published:Updated:

இது அனிமல் பிளானெட்!

இது அனிமல் பிளானெட்!

கார்த்திகா குமாரி
இது அனிமல் பிளானெட்!
இது அனிமல் பிளானெட்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இது அனிமல் பிளானெட்!
இது அனிமல் பிளானெட்!
இது அனிமல் பிளானெட்!
இது அனிமல் பிளானெட்!

சுற்றுச்சூழல் ஆய்வாளர்களின் சாதனைகளுக்கு அங்கீகாரமாக வழங்கப்படும் விருதுகளில் முக்கியமானது 'க்ரீன் ஆஸ்கார்' என்று செல்லமாக அழைக்கப்படும் 'விட்லே விருது'. இந்த வருடம் இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் இந்தியர், மைசூரைச் சேர்ந்த எம்.டி.மதுசூதன். மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான போராட்டம் சார்ந்த ஆய்வுகளுக்காகவும், செயல்களுக்காகவும் மதுசூதனுக்கு இந்த விருது. பரிசுத் தொகையாக வழங்கப்பட்ட சுமார் இரண்டு கோடி ரூபாயை வனவிலங்குகள் பாதுகாப்புக்கு நன்கொடையாக வழங்கிவிட்டார். மைசூர் 'நேச்சர் கன்சர்வேஷன் ஃபவுண்டேஷ'னில் சீனியர் சயின்டிஸ்ட்டாகவும் டிரஸ்டியாகவும் இருக்கிறார். பிரேசில் காபித் தோட்டங்களிலும், இந்தியாவின் பந்திப்பூர் காடுகளிலும் மேயும் விலங்குகளுக்கு இடையேயான ஒற்றுமையை இவர் கண்டுபிடிக்க, இங்கிருந்து விலங்குகளின் கழிவுகள் உரமாக பிரேசிலுக்கு ஏற்றுமதியாகின. 2004-ல் அருணாச்சல் மகா குரங்கினத்தை இவரது குழு கண்டுபிடித்தது.

''இயற்கையின் மீது உங்களுடையது ஆராய்ச்சி ஆர்வமா அல்லது நேசமா?''

''நான்கு புறமும் காடுகள் சூழ்ந்திருக்கும் மைசூரில் பிறந்து வளர்ந்ததால், என் சிறு வயதில் இருந்தே இயற்கை என்னை வசீகரித்தது. பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பை முன்னிலைப்படுத்தும் தொழிற்கல்வி எதையும் படிக்க விருப்பம் இல்லாமல், 'வைல்ட் லைஃப் பயாலஜி'யைத் தேர்ந்தெடுத்தேன். ஜேன் குட்ஆல், ஜான்சிங், உல்லாஸ்கரந்த் போன்ற சுற்றுச்சூழல் ஆய்வாளர்களும், ஜிம் கார்பெட் போன்ற வேட்டைக்கார ஆய்வாளர்களும் புத்தகங்கள் வாயிலாக என் ஆர்வத்தைத் தூண்டிக்கொண்டே இருந்தனர். எந்த உயிரினமும் உலகத்தின் சுழற்சிக்கு ஏதோ ஒரு வகையில் தன் பங்கைச் செலுத்திக்கொண்டே இருக்கும். ஆனால், மனிதர்கள் தங்களுக்குப் பயனளிக்கும் விலங்குகளுக்கு மட்டும்தான் அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். நான் இயற்கையைப் புரிந்துகொள்ள நினைப்பதில் மட்டுமே ஆராய்ச்சியாளன். மற்றபடி இயற்கையை ஆராதிக்கிறேன். என்னிலும் அதிகமாக நேசிக்கிறேன்!''

''உங்களுடைய முக்கிய ஆராய்ச்சி மனிதர்களுக்கும் வன விலங்குகளுக்குமான உரசலைப் பற்றித்தான். அது பற்றி...''

''வன விலங்குகளுக்கு ஏகாந்த சூழல் தேவைன்னு நாம சரணாலயம் கட்டிக்கொடுக்கிறோம். ஆனா, அதுக்குள் 30 லட்சம் மக்கள் சுற்றுலாப் பயணிகளாக வந்து போய்க்கிட்டே இருக்காங்க. சரணாலயம் என்று பெயர் வைத்துவிட்டோமே தவிர, அதை நாம முழுமையான சரணாலயமாக ஆக்கலை. காரணம், நாம் மனிதர்களாக இருந்து அதன் வடிவமைப்பு பற்றி யோசிப்பதுதான். விலங்குகளை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. கடன் வாங்கி விவசாயம் பண்ற ஒரு விவசாயியைச் சந்திச்சேன். விளைச்சலில் பாதியை நில உரிமையாளருக்குக் கொடுக்கணும். மிச்சம் இருக்குற காசுல கடனை அடைக்கணும். அதுக்கு மேல ஏதாவது மிஞ்சுனா வீட்டுக்கு எடுத்துட்டுப் போகலாம். அறுவடை சமயத்துல யானைகள் வந்து மேய்ஞ்சு மொத்த விளைச்சலையும் அழிச்சிருச்சு. பெரும்பாலானவங்க அந்த மாதிரி சமயத்துல யானைகளுக்கு விஷம் வெச்சுருவாங்க. ஆனா அவரு, 'நான் பொழைப்புக்காக விவசாயம் பார்க்கறேன். அந்த யானைகளும் இப்படி மேய்ஞ்சாதான் பொழைச்சுக்கிடக்க முடியும். போகட்டும் விடுங்க!'ன்னு அடுத்த வேலையைப் பார்க்கப் போயிட்டாரு.

அவருக்கு குளோபல் வார்மிங், உயிரியல் காடுகள் பத்தி என்ன தெரியும்? ஆனா, அந்த யானைக்கு என்ன தேவைன்னு யோசிக்கத் தெரிஞ்சிருக்கு. அந்த மனசு எல்லாருக்கும் வேணும்!''

இது அனிமல் பிளானெட்!

 
இது அனிமல் பிளானெட்!
இது அனிமல் பிளானெட்!