Published:Updated:

எக்ஸ்பிரஸ் குக்கிங்!

எக்ஸ்பிரஸ் குக்கிங்!

ராம்கி, படங்கள்: கே.கார்த்திகேயன்
எக்ஸ்பிரஸ் குக்கிங்!
எக்ஸ்பிரஸ் குக்கிங்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
எக்ஸ்பிரஸ் குக்கிங்!
எக்ஸ்பிரஸ் குக்கிங்!
எக்ஸ்பிரஸ் குக்கிங்!
எக்ஸ்பிரஸ் குக்கிங்!

யர்தர சைவ உணவகங்களில் பரோட்டா அல்லது சப்பாத்தி 30 அல்லது 40 ரூபாய் வரை விற்கப் படுகிறது. இதே பரோட்டா சப்பாத்திகளைப் பிய்த்துப் போட்டு கிரேவியுடன் கலந்து தயாரிக்கப்படும் சில்லி பரோட்டா, சப்பாத்தி நூடுல்ஸ் போன்றவை 80ரூபாய் வரை விற்கப்படுகிறது. இது போன்ற சில்லி பரோட்டா வகைகள் செய்வது மிகவும் எளிது.

எக்ஸ்பிரஸ் குக்கிங்!

மிச்சமான பரோட்டா, சப்பாத்திகளைவைத்தே இவற்றைச் செய்து அசத்தலாம். இதே தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தித்தான் நம்மூரில் உள்ள சில ஹோட்டல்கள், கையேந்திபவன்கள் பணத்தை அள்ளுகின்றன. வெளியில் சாப்பிடப் பிடிக்காதவர் கள்கூட பரோட்டா, சப்பாத்தி, இட்லி, வடையை ஹோட்டல்களில் வாங்கி வந்து நிமிடத்தில் சுடச்சுட, ருசியாக இந்த அயிட்டங்களை எளிதாகச் சமைக்கலாம். வெங்காயம், தக்காளி, மசாலா சேர்த்து கிரேவி தயார் செய்து, அதனுடன் கடையில் வாங்கிய அல்லது மீந்துபோனவற்றைச் சேர்த்துக் கிளறினால் போதும்.

கிரேவி செய்முறை:

வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய்விட்டு, ஒரு கை நறுக்கிய வெங்காயம், சிறிது இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். அரைக் கை நறுக்கிய தக்காளி, 2 சிட்டிகை உப்பு, மிளகாய்த் தூள், கரம் மசாலா சேர்த்து 5 நிமிடங்கள் கிளறி இறக்கவும். உப்பு, காரம், மசாலா ருசிக்கேற்ப கூட்டியோ, குறைத்தோ கொள்ளவும்.

முட்டை பரோட்டா

2 பரோட்டாக்களைக் காய் நறுக்குவது போன்று சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு நறுக்கிய பரோட்டா துண்டுகளைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். ஒரு முட்டையைப் பரோட்டாவில் உடைத்து ஊற்றிக் கிளறவும். பிறகு, ஒரு கரண்டி கிரேவி சேர்த்து மேலும், இரண்டு நிமிடங்கள் கிளறி இறக்கவும். பரோட்டாவுடன் முட்டை சேர்க்காமல் வெறும் கிரேவி மட்டும் சேர்த்தால் அது கொத்து பரோட்டா. முட்டை சேர்த்தால் அது முட்டை பரோட்டா அவ்வளவு தான்.

வடகறி

இரண்டு மசால் வடைகளை உதிர்த்துக்கொள்ளவும். வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு ஒரு சிட்டிகை சோம்பு, 2 கிராம்பு, ஒரு துண்டு பட்டை, ஒரு ஏலக்காய் சேர்க்கவும். உதிர்த்த வடையைப் போட்டு 2 கரண்டிகள் கிரேவி சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு ஐந்து நிமிடங்கள் கிளறி இறக்கவும்.

சப்பாத்தி/பரோட்டா நூடுல்ஸ்

இரண்டு பரோட்டா அல்லது சப்பாத்திகளைக் குழல் போல் சுருட்டிக்கொள்ளவும். ஒரு முனையில் இருந்து மெலிதாக நறுக்கி வந்தால் நூடுல்ஸ் போன்று விரிந்துவிழும். வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு சப்பாத்தி நூடுல்ஸை ஒரு நிமிடம் வதக்கவும். 2 கரண்டிகள் கிரேவியைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி இறக்கவும்.

எக்ஸ்பிரஸ் குக்கிங்!

காக்டெயில் இட்லி/சில்லி இட்லி

இரண்டு இட்லிகளைச் சிறு சிறு துண்டு களாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் 3 ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து இட்லித் துண்டுகளைப் போட்டு இருபுறமும் பொன்னிறம் ஆகும் வரை வறுக்கவும்.பின்னர் இவற்றுடன் ஒரு கரண்டி கிரேவி சேர்த்து ஒரு நிமிடம் கிளறி இறக்கவும்.

சாம்பார் வடை/ரச வடை/தயிர் வடை

மெதுவடைகளை வெந்நீரில் ஐந்து நிமிடங் கள் ஊறவைத்துப் பிழிந்து எடுக்கவும். சாம்பார் அல்லது ரசம் அல்லது தயிரில் ஊறவிடவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லி, துருவிய கேரட் தூவிப் பரிமாறவும்.

சென்னா மசாலா/பீஸ் மசாலா

பானி பூரி அல்லது பேல் பூரி கடைகளில் கிடைக்கும் சுண்டலை ஒரு பாக்கெட் வாங்கி, கிரேவியுடன் கலந்து ருசிக்கு ஏற்ப உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கிளறினால் சுவையான சைட் டிஷ் நொடியில் ரெடி. தேவைக்கு அதிகமாகச் செய்யும் உணவு வகைகள் ஆறிப்போச்சே, மீந்துபோச்சே என்ற கவலை இனி இல்லை!

 
எக்ஸ்பிரஸ் குக்கிங்!
-சமையல் மணக்கும்...
எக்ஸ்பிரஸ் குக்கிங்!