டாக்டர். டி.நாராயணரெட்டி, செக்ஸாலஜிஸ்ட்,.

டூயட் கிளினிக்

அவளுடைய அவள்... அவனுடைய அவன்!

ஒரு பத்திரிகையின் வாசகர் கடிதம் பகுதியில், 'ஓரினச் சேர்க்கையாளர்களுக்குச் சாதகமான தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. இது தவறானது. நாட்டில் இதனால் ஓரினச் சேர்க்கையாளர்களின் அட்டகாசம் அதிகரிக்கும். இதன் காரணமாகக் குழந்தைகளை வன்புணர்ச்சிக்கு ஈடுபடுத்துவது, கற்பழிப்பு, எய்ட்ஸ் போன்றவை வேக வேகமாக அதிகரிக்கும்' என்று சொல்லப்பட்டு இருந்தது.

மக்களின் தவறான நம்பிக்கைக்கு இந்த வாசகர் கடிதம் ஓர் உதாரணம். செக்ஸைப் பற்றிய அறியாமைதான் இதற்கெல்லாம் காரணம். செக்ஸ் ஈர்ப்புக்கும் - குற்றங்களுக்கும் தொடர்பே கிடையாது. இரண்டையும் தொடர்புபடுத்துவதே தவறு.

ஓர் ஆண் ஒரு பெண்ணைப் பார்த்து (அ) ஒரு பெண் ஓர் ஆணைப் பார்த்து உணர்ச்சிவசப்படுவது
போலவே ஓர் ஆண் இன்னோர் ஆணைப் பார்த்து (அ) ஒரு பெண் இன்னொரு பெண்ணைப் பார்த்து உணர்ச்சிவசப்படுவதும் இயல்பானதே.

இருபால் சேர்க்கையாளர் (Hetro Sexuals) போலவேதான் ஓரினச் சேர்க்கையாளர்களையும் (Homo Sexuals) கருத வேண்டும்.

ஓரினச் சேர்க்கை பழக்கம் எந்தவிதத்திலும் படிப்பு, திறமை, புத்திசாலித்தனம், பணி எதையுமே பாதிக்காது. மற்றவர்களைப் போலவே அவர்களும் எல்லாவற்றிலும் ஜொலிக்க முடியும். அதைப் போல ஓரினச் சேர்க்கையாளர்கள் அத்தனை பேரும் கெட்டவர்கள் என்று கூறிவிட முடியாது. கெட்டவர்கள் எங்கும் எதிலும்தான் இருப்பார்கள். உலக அளவில் ஓரினச் சேர்க்கையாளர்களைவிட இருபால் சேர்க்கையாளர்கள்தான் குற்றவாளிகளாக இருக்கிறார்கள்.

ஓரினச் சேர்க்கையாளர்கள் குழந்தைகளை வன்புணர்ச்சிக்கு ஆளாக்க நேரிடும் என்கிற கருத்தும் தவறானதே. ஒரு குழந்தையை அப்படித் தீண்டுபவர்கள் அந்தக் குழந்தைக்கு நெருக்கமானவர்களாகத்தான் பெரும்பாலும் இருப்பார்கள். தன்னம்பிக்கையற்ற, மனப்பக்குவம் அற்றவர்கள்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.

மனநலக் குறைபாடு இருப்பவர்கள்தான் கற்பழிப்பில் ஈடுபடுவார்கள். ராபர்ட் ஹெஜல்வுட் என்ற ஓர் ஆராய்ச்சியாளர் சொல்கிறார், 'தான் ஆண்மை நிரம்பியவன்' என்று தனக்குத்தானே நிரூபித்துக்கொள்ளத் துடிப்பவன், பெண்கள் பழிவாங்கப்பட வேண்டியவர்கள் என்று நினைப்பவன், பிறரைத் துன்புறுத்தி இன்பம் காண்பவன், நான் ஓர் ஆண்... நான் எதையும் செய்வேன் என்று ஆங்காரம்கொண்டவன்தான் கற்பழிப்பில் ஈடுபடுவான்' என்கிறார். எனவே, ஓரினச் சேர்க்கையாளர்களால் கற்பழிப்புக் குற்றம் அதிகமாகும் என்பதும் தவறான கருத்து.

'உலகம் முழுதுமே இருபால் சேர்க்கையாளர்களால்தான் ஹெ.ஐ.வி. அதிகமாகப் பரவுகிறது. ஓரினச் சேர்க்கையாளர்களால் அல்ல' என்கிறது இன்னோர் ஆய்வு.

இன்றைய மதிப்பீட்டில், சமூகப் பார்வை என்கிற கண்ணாடி போட்டுக்கொண்டு ஓரினச் சேர்க்கையாளர்களைப் பார்த்தால், அவர்கள் குற்றவாளிகளாகத்தான் தெரிவார்கள். விஞ்ஞான முன்னேற்றம், பாலியல் கல்வி போன்றவை இன்னும் இன்னும் உயரம் தொடும்போது நிச்சயம் ஓரினச் சேர்க்கையாளர்களும் நம்மைப் போன்றவர்களே என்கிற கருத்து பரவலாகும்!