08-07-09

காக்கி காலேஜ்!

ம.கா.செந்தில்குமார், படங்கள்: கே.கார்த்திகேயன்

நாடி நரம்புகளை அதிரச் செய்யும் டிரம் பீட்டுக்குத் தகுந்தாற்போல் ஒருசேரத் தரையில் மோதி எழும்பும் பூட்ஸ் ஒலியோடுதான் ஊனமாஞ்சேரியின் பொழுது தினமும் விடிகிறது. சென்னையில் இருந்து 35 கி.மீ தொலைவில் வண்டலூரை அடுத்துள்ள இந்தக் கிராமத்தில்தான் தமிழ்நாடு போலீஸ் அகாடமி எனப்படும் 'காவல் உயர் பயிற்சியகம்' செயல்படுகிறது.

சப்-இன்ஸ்பெக்டர் தொடங்கி ஐ.பி.எஸ். அதிகாரிகள் வரையிலான உயர் அதிகாரிகளுக்கு, 129 ஏக்கரில் பிரமாண்டமாகப் பரந்து விரிந்து இருக்கும் இங்குதான் போலீஸ் பணிக்கான அடிப்படைப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இப்பயிற்சியகத்தின் இயக்குநரும் கூடுதல் டி.ஜி.பி-யுமான அமீத் வர்மா, "2008 மார்ச்சில் இந்த அகாடமி துவங்கி முதல் பேட்ச்சில் 757 சப்-இன்ஸ்பெக்டர்களுக்குப் பயிற்சியளித்தது இந்திய சாதனை. எங்களுடன் இணைந்து செயல்பட பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் போட்டி போடுகின்றன. சைபர் க்ரைம், சட்ட விதிகள் மட்டுமல்லாமல், பொதுமக்களிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற பெர்சனாலிட்டி பண்புகளும் இங்கு அளிக்கப்படும் பயிற்சியின் முக்கிய அம்சங்களாகும்!'' என்று பெருமிதமாகச் சொல்கிறார்.

நடுநாயகமாக நிர்வாகக் கட்டடம் அமைந்திருக்க... அதைச் சுற்றிலும் வாசிக்கும் அறைகளுடன் அமைந்த நூலகம் (ஒரு லட்சம் புத்தகங்கள்), உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய சைபர் குற்ற ஆய்வகம், வயர்லெஸ்-ஜி.பி.எஸ். சிஸ்டம் தொடர்பான டெக்னாலஜி பிளாக், டேபிள் டென்னிஸ், பாட்மின்டன் விளையாட்டு அரங்குகளுடன் கூடிய மாடர்ன் ஜிம், திறந்தவெளித் திரையரங்கம், நீச்சல்குளம், ஒரு மாடல் காவல் நிலையம், ஆயுதக் கிடங்கு, 34 அறைகளைக்கொண்ட விருந்தினர்கள் கட்டடம் என்று சுற்றிப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அகாடமியைச் சுற்றிலும் 12 ஆயிரத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

இண்டோர் டி.எஸ்.பி. ஆறுமுகச்சாமி உற்சாகமாக நம்முடன் உலா வந்துகொண்டே பேசுகிறார். "அடுத்த பேட்ச் சப்-இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி-க்கள் தேர்வாகி வரத் தாமதமாவதால், சமீபத்தில் தேர்வான பெண் கான்ஸ்டபிள்களுக்கு இப்போது பயிற்சி அளிக்கிறோம். காலை 6 மணிக்குள் கவாத்து மைதானத்துக்கு வந்துவிட வேண்டும். அணிவகுப்பு பயிற்சியைத் தொடர்ந்து கேம்ஸ் முடித்து, குளித்துத் தயாராகி 9.30 மணிக்கு வகுப்பறைக்கு வந்துவிட வேண்டும். 45 நிமிடங்கள் அடங்கிய வகுப்புகள். மாலை மீண்டும் அணிவகுப்பு, விளையாட்டு. இடையிடையே லைப்ரரி, ஜிம், நீச்சல்குளம் என அனைத்தையும் பயன்படுத்த வேண்டும்.

வகுப்பறையில் ஐ.பி.சி, சி.ஆர்.பி.சி. சட்டங்கள், இந்திய அரசியல் அமைப்பு, உளவியல் என மொத்தம் 12 பாடங்கள். ஆண்டுக்கு நான்கு தேர்வுகள். பயிற்சியின் கடைசி மாதத்தில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தலைப்பின் கீழ் புராஜெக்ட் ரிப்போர்ட் சமர்ப்பிக்க வேண்டும். பயிற்சியில் முதல் மதிப்பெண் பெறுபவருக்கு வெள்ளி வாள் பரிசு. பயிற்சி மதிப்பெண்களைப் பொறுத்துதான், அவர்கள் பதவி உயர் வுக்கான சீனியாரிட்டி நிர்ணயிக்கப்படும். 0.5 மதிப்பெண் வித்தியாசம் இருந்தால்கூடப் பதவி உயர்வு ஓரிரு ஆண்டுகள் தாமதமாகும். இந்த மதிப்பெண் காரணமாக ஒரே பேட்ச்சில் சேர்ந்தவர்களில் ஒருவர் டி.எஸ்.பி-யாகவும் மற்றொருவர் எஸ்.ஐ.ஆகவே இருப்பதற்கும் வாய்ப்பு உண்டு!

பயிற்சி கடினம்தான். ஆனால், தமிழகக் காவல் துறையை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் தளமாக இருப்பதால், அந்த உயரத்தை எட்டித் தொடத்தான் வேண்டும்!'' என்று முடிக்கிறார் ஆறுமுகச்சாமி.

அங்கே பரேட் மைதானத்தில், துப்பாக்கி ஏந்திய பெண் கான்ஸ்டபிள்கள் விறைப்பாக நிற்க, சீஃப் டிரில் இன்ஸ்பெக்டர் பக்தன் மைக்கில் உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார்... "பூட்ஸ் காலைத் தூக்கித் தரையில் அடிச்சா, பூமி அதிர, தீப்பொறி பறக்கணும். மறுபடியும் எல்லாரும் அசெம்பிள் ஆகுங்க. கமான் க்விக் க்விக்..!'' அடுத்த அணிவகுப்பில் பூட்ஸ் கால்கள் எழுப்பும் ஒலி இடியோசையாக எதிரொலித்து எதிர்காலம் சொல்கிறது!