Published:Updated:

நானே கேள்வி.. நானே பதில்!

நானே கேள்வி.. நானே பதில்!

நானே கேள்வி.. நானே பதில்!

நானே கேள்வி.. நானே பதில்!

Published:Updated:
நானே கேள்வி.. நானே பதில்!
நானே கேள்வி.. நானே பதில்!
நானே கேள்வி.. நானே பதில்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நானே கேள்வி.. நானே பதில்!
கமல் கடவுளா?
நானே கேள்வி.. நானே பதில்!
நானே கேள்வி.. நானே பதில்!

''காலத்துக்கு ஏற்ப எல்லாமும் மாறி இருப்பதைப் போலக் காதலும் மாறி இருக்கிறதா?''

''நிச்சயமாக. 'நம்ம காதலுக்குக் குறுக்கே எங்க அப்பா இருக்கார்'னு சொன்னது அந்தக் காலம். 'நம்ம காதலுக்கு என் கணவன்தான் சிக்கல்'னு சொன்னது நேற்று. 'நம்ம காதலுக்குக் குறுக்கே என் பையன் இருக்கான்'னு சொல்லிச் சங்கடப்படுவது இன்று. அட்டகாச அபார மாற்றம்தானே!''

- கோ.சண்முகசுந்தரம், ஈரோடு.

''கொள்கைப் பற்று என்றால் என்ன?''

''எந்தக் காலத்தில் எதைக் கேட்கிறீர்கள்? சரி, உங்களுக்காக ஒரு பழைய கதை. வ.உ.சி. எவ்வளவு தீரமான சுதேசிப் பற்றாளர் என்பதற்கு இந்த சம்பவ மும் ஓர் உதாரணம். 1917-ம் ஆண்டில் வ.உ.சி. திருக் குறளுக்கு மணக்குடவர் எழுதிய உரையைப் புத்த கமாகப் பதிப்பித்து வெளியிட்டார். அந்தப் பதிப் பில் இப்படிக் குறிப்பிடுகிறார், 'இந்நூலின் காகிதம், அச்சு, மை, கட்டமைப்பு அனைத்தும் சுதேசியம்!' ''

- எம்.ஈஸ்வரன், திருப்பூர்.

''பதிலடி என்பது எப்படி இருக்க வேண்டும்?''

'' 'அழகா இல்லாததால்
அவள் எனக்குத்
தங்கையாகிவிட்டாள்!' கலாப்ரியாவின் இந்தக் கவிதைக்கு யாரோ எப்போதோ எழுதிய பதில் கவிதை என்ன தெரியுமா?
'அழகா இருந்தால்
உன் தங்கை
உனக்கு என்னவாகியிருப்பாள்?'''

- கி.தமிழ்பாரதி, சென்னை-26.

''அடக்கடவுளே' என்று சொல்லவைத்த செய்தி..?''

''சமீப நாட்களாக கமல்ஹாசன் குறித்து இணையத்தில் உலவும் செய்தி. 'கமல் 1978-ல் 'சிவப்பு ரோஜாக்கள்' படத்தில் கில்லராக நடித்திருந்தார். சரியாக ஒரு வருடம் கழித்து, அதே போல பெண் களைக் குறிவைத்துக் கொல்லும் சைக்கோ ராமன் என்ற கொலையாளி கைது செய்யப்பட்டான். 1988-ல் 'சத்யா'வில் வேலையில்லா இளைஞனாக நடித்தார் கமல். 90-கள் முழுக்க நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம். 1992-ல் ஃபைனான்ஸ் கம்பெனி ஏமாற்றி ஓடுவதாக 'மகாநதி'யில் கதை. 1996-ல் நிஜமாகவே ஃபைனான்ஸ் கம்பெனிகள் முதலீடுகளை லபக்கி ஓடின. 2000-ல் இந்து-முஸ்லிம் கலவரம் குறித்த 'ஹேராம்' படம் வெளியானது. 2002-ல் குஜராத் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீதான இனப் படுகொலை. 2003-ல் 'அன்பே சிவம்' படத்தில் ஒரு காட்சியில் கமல் சுனாமி பற்றி பேசுவார். 2004-ல் நிஜமாகவே வந்தது சுனாமி. 2006-ல் 'வேட்டையாடு விளையாடு' படம் இரண்டு சைக்கோ கொலைகாரர்களைப் பற்றியது. தொடர்ந்த நாட்களிலேயே நொய்டாவில் மொனீந்தர், சதீஷ் என்னும் தொடர் கொலைகாரர்கள் பிடிபட்டனர். இப்போது 'தசாவதாரம்' படத்தில் அமெரிக்காவில் இருந்து உலகை அழிக்கும் கிருமி இந்தியாவுக்கு இறக்குமதி ஆவதாகச் செல்லும் கதை. இப்போது அமெரிக்காவைத் தாக்கிய பன்றிக் காய்ச்சல் கிருமிகள்தான் உலகெங்கும் பரவுகின்றன!'

இதை எல்லாம் படித்ததும் மனதில் தோன்றியது. கமலைத் தீர்க்கத்தரிசி என்று சொல்வதா... அல்லது அவர் படம் வெளியானதும் நிச்சயம் ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் என்பதா? இந்தச் செய்தியைக் கமல் படித்தால், 'அடக் கடவுளே' என்று சொல்வாரோ!''

- வீரவிஜயன், மன்னார்குடி.

எழுதலாம் எல்லோரும்! கேள்வியும் பதிலும் உங்களுடையதே. தபாலில் அனுப்பலாம். அல்லது செல்போனில் QA (Space) உங்க சரக்கை 562636 நம்பருக்கு நறுக்குனு தட்டிவிடுங்க. பளிச் பரிசு நிச்சயம்!

 
நானே கேள்வி.. நானே பதில்!
நானே கேள்வி.. நானே பதில்!