''ஜெர்மனியின் ஃப்ராங்ஃபர்ட் ஏர்போர்ட். லண்டன் செல்லும் விமானம் தாமதமாகப் புறப்படும் என்ற அறிவிப்பு காரணமாக நொந்துபோய் அமர்ந்தேன். அட, என் கண்களை என்னால் நம்ப முடிய வில்லை. கொஞ்சம் தள்ளி தனிமையில் அமர்ந்திருந்தது ரஜினி. அவரைப் பார்த்ததும் நான் பதற்றத்தில் திக்குமுக்காடித் திண்டாடிவிட்டேன். ஆனால், அவரோ யாரோ எவரோ போல, 'ரஜினி'க்கும் தனக்கும் துளிகூட சம்பந்தம் இல்லை என்பது போல அமர்ந்திருந்தார். ரஜினியின் அபூர்வமான தனிமையைக் கெடுக்கலாமா என்று நான் தயங்கித் தயங்கிப் பார்க்க, என்ன நினைத்தாரோ... ரஜினியே என்னருகே வந்து பேசினார். அரை மணி நேரத்துக்குள் 4, 5 சிகரெட் பிடித்திருப்பார். 'ஏன் இவ்வளவு சிகரெட் பிடிக்கிறீர்கள்?' என்று கேட்டேன். 'நல்லா கவனிச்சுப் பாருங்க. ஒரு சிகரெட்டைப் பத்தவெச்சா ரெண்டு அல்லது மூணு பஃப்தான் இழுப்பேன். அப்புறம் தூக்கிப் போட்டுருவேன். எனக்கு சிகரெட் பத்தவைக்குறதுல ஒரு த்ரில். அதான்!'னாரு.
'தமிழ் சினிமாவுல நிறைய புதுப் பசங்க வந்துட்டாங்க. இனிமேலும் நாம நடிச்சுட்டு இருக்க முடியாது. எப்படா கழண்டுக்கலாம்னு நேரம் பார்த்துட்டு இருக்கேன்'னு மனசுவிட்டு ரஜினி பேசிட்டு இருந்தது 2001-ம் வருஷத்தில். ஆனா, அதுக்கப்புறம்தான் 'சந்திரமுகி', 'சிவாஜி'ன்னு அவரோட மாஸ் ஹிட் படங்களில் நடிச்சார் சூப்பர் ஸ்டார்!''
- ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசன், சென்னை-42.
''நானும் என் நண்பர்களும் தமிழ்நாடு - கேரளாவின் ஆல்டைம் வாய்க்கால் வரப்புத் தகராறான முல்லைப் பெரியாறு அணை அமைந்திருக்கும் தேக்கடிக்குச் சென்று இருந்தோம். டோல்கேட்டில் பாஸ் வாங்கக் காத்திருந்த கார் ஒன்றில் நடிகை சோனியா அகர்வால். '7ஜி ரெயின்போ காலனி' படப்பிடிப்புக்கு வந்திருப்பதாகக் கூறினார். காரில் டைரக்டர் செல்வராகவனும் இன்னொருவரும் அமர்ந்திருந்தார்கள். |