பாரதி தம்பி

கீப் லெஃப்ட்!

'ஆல்ரைட்' என்கிறோம் எல்லோரும். 'ஆல்லெஃப்ட்' ஆட்களைப்பற்றிச் சிந்தித்து இருப்போமா எப்போதாவது? 'கம்ப்யூட்டர்ல மொத்தம் ரெண்டு என்டர் பட்டன் இருக்கு. ரெண்டுமே ரைட் சைடுதான் இருக்கு. லெஃப்ட் ஹேண்ட் யூஸ் பண்றவங்கவங்களுக்கு அது எவ்வளவு சிரமம்னு யாராச்சும் யோசிச்சீங்களா?' என்ற கேள்வி அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு ஒரு சாம்பிள்.

வலது கைப் பழக்கம் உள்ளவர்களை மனதில் வைத்தே தயாரிக்கப்படுகின்றன கத்தரிக்கோல், ஹாக்கி பேட், கிடார், கம்ப்யூட்டர், மவுஸ். இவற்றை இடது கைப் பழக்கம் உள்ளவர்கள் 100 சதவிகிதம் திருப்தியுடன் பயன்படுத்த முடியாது. வாட்டர் டேப், பூட்டு போன்றவைகூட வலது கை வசதிக்கு ஏற்றவாறுதான் இருக்கிறது!

கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஸ்டான்லி கோரன் ஓர் ஆய்வு நடத்தினார். அதன்படி, ஒவ்வொரு வருடமும் வலது கைப் பழக்கம் உள்ளவர்களைக் காட்டிலும், இடது கைப் பழக்கம் உடையவர்கள் ஒப்பீட்டு அளவில் அதிகம் விபத்துக்களில் சிக்கி உயிர் இழக்கின்றனர். காரணம் டூ-வீலர், கார் உள்பட அனைத்து வாகனங்களும் வலது கைப் பழக்கம் உள்ளவர்கள் பயன்படுத்த ஏற்றவாறுதான் தயாரிக்கப்படுகின்றன. ஒரு டூ-வீலரின் வலதுபுறம் ஆக்ஸிலேட்டர் இருக்கிறது. இடது கைப் பழக்கம் உள்ள ஒருவர் அதைப் பயன்படுத்தும்போது அவர் இரண்டு மடங்கு கவனமாக இருக்க வேண்டிஇருக்கிறது. கொஞ்சம் கவனம் சிதறினாலும் வாழ்க்கை தவறிவிடுகிறது!

'வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியக் கூடாது' என்றுதான் நம் ஊரிலும் பொன்மொழி சொல்கிறோம். எங்காவது மறந்துபோய் இடது கையைப் பயன்படுத்திவிட்டால், அது மரியாதைக் குறைவானதாகப் பார்க்கப் படுகிறது. வீட்டுக்கு வந்து இருக்கும் உறவினருக்கு இடது கையால் காபி கொடுத்தால், இடது கையால் கை குலுக்கினால், யாராவது பணம் கொடுக்கும்போது அதை இடது கையால் வாங்கினால், எல்லாமே இங்கு மரியாதைக் குறைவு. இதற்காக நாங்கள்

ஒவ்வொரு நொடியும் அலர்ட்டாக இருக்க வேண்டியிருக்கிறது. இடது கைப் பழக்கம் உள்ள ஒவ்வொருவரும் தினசரி பழக்கங்களில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியிருக்கிறது!'' என்பது லெஃப்ட் ஹேண்டர்ஸ் நியாயம்.

உலக மக்கள் தொகையில் 7 முதல் 10 சதவிகிதம் பேர் இடது கைப் பழக்கம் உள்ளவர்கள். 'இது நோய் இல்லை, அதனால், உங்கள் பிள்ளைகள் இடது கையைப் பயன்படுத்தினால் அதைத் திருத்துகிறேன் என்று முயற்சிக்க வேண்டாம். அது குழந்தைகளின் இயல்பான திறமைகளைப் பாதிக்கும்!' என்கிறார்கள் மருத்துவர்கள்.

திருந்த வேண்டியது யார் என்பதை உணர வேண்டியவர்கள் உணர வேண்டும்!