Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மகள் அக்ஷதா தன் எம்.பி.ஏ., வகுப்புத் தோழனான ரோஹனை அப்பா சம்மதத்தோடு கல்யாணம் செய்துகொள்ள இருக்கிறார். ரோஹன், ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் பி.ஹெச்டி., முடிக்கவிருக்கிறார். ஆகஸ்டில் இன்ஃபோசிஸ் இன்வைட்ஸ்!


'ஹாட்டி ஆஃப் தி இயர்' விருது வாங்க மேடை ஏறிய ஹாலிவுட் கிளாமர் கிளி மேகன் ஃபாக்ஸின் மேலாடை எதார்த்தமாக எக்கச்சக்கமாக நழுவிய தில் சூடானது கூட்டம். எல்லாம் செட்டப் என்று ஆளாளுக்கு ஆணியடித்தாலும், சம்பவத்தில் மேகனின் சிவந்த முகத்தை ஃபோகஸ் செய்த கேமராவுக்கு அடித்திருக்கிறது ஜாக்பாட்! சிவந்த முகத்தைக் காட்டுங்கய்யா!


நக்சலைட் அமைப்புகளை உற்சாகம் ஊட்ட எழுதப்பட்ட பாடலை ரீ-மிக்ஸ் செய்து 'மகாதீரா' படத்தில் சிரஞ்சீவி மகன் ராம்சரண் தேஜா ஹீரோயினுடன் குத்தாட்டம் போட்டது, படத்தின் வெற்றிச் செய்திகளுக்கு இடையில் திருஷ்டி. சினிமாவுல இதெல்லாம் சாதாரணமப்பா!


'குருசிஷ்யன்', 'சினம்' என்று மீண்டும் லொள்ளு தில்லு பக்கம் திரும்பினாலும், 'சே குவேரா பற்றிப் படமெடுத்தால் சம்பளம் வாங்காமல் கூட நடிக்கத் தயார்!' என்று கூறி இருக் கிறார் சத்யராஜ். இவரு கேரக்டரைப் புரிஞ்சுக்கவே முடியலையே!


இன்பாக்ஸ்

'உ.பி-க்கு அடுத்து என் ஸ்பெஷல் கவனம் தமிழகம் மீதுதான்!' என்று தன்னைச் சந்தித்த தமிழக ராஜீவ் விசுவாசி களிடம் உறுதியளித்திருக்கிறார் ராகுல் காந்தி. கூடிய விரைவில் தமிழக விசிட் இருக்குமாம். இப்பவே வரவேற்புக் குழுவுக்கு கோஷ்டிப் பூசல் ஆரம்பிச்சு இருக்குமே!


இன்பாக்ஸ்

2009-ம் வருடம் டென்னிஸ் புலி ரோஜர் ஃபெடரருக்குக் கொண்டாட்டமான வருடம். சிக்காத பிரெஞ்ச் ஓப்பனை எட்டிப் பிடித்தவர் இப்போ டபுள் அப்பா! மனைவி மிர்க்காவுக்குப் பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகளுக்கு சார்லீன் ரீவா, மைலா ரோஸ் என்று பெயரிட்டு, கொஞ்சிக்கொண்டு இருக்கிறார் சாம்பியன் அப்பா. ரெண்டுல எந்தப் பாப்பா டென்னிஸ் ஆடும் ரோஜர்!

இன்பாக்ஸ்

நாகர்ஜுனாவின் மூத்த மகன் நாகசைதன்யாவுக்கு ராதாவின் மகள் ஜோடியாக நடிக்கிறார். இப்போ இளைய மகன் அகிலுக்கு ஜோடியாக ஸ்ரீதேவி மகள் ஜான்வியைக் கேட்டிருக்கிறார்கள். மயிலும் 'டபுள் ஓ.கே' சொல்லியாச்சாம். 'குட்டி'ங்க 16 அடி பாயும்தானே!


'எலெக்ட்ரா' என்ற கிரேக்க நாடகத்தைத் தழுவி ஷியாமா பிரசாத் இயக்கும் மலையாள ஆர்ட் ஃபிலிமில் நடிக்க ஓ.கே. சொல்லி இருக்கிறார் நயன்தாரா. தமிழில் 'ஆதவன்' படத்துக்குப் பிறகு பெரிய வாய்ப்புகள் இல்லாததால் இந்த மனமாற்றமாம். நம்பர் ஒன் ரேங்க் போச்சே!


விரைவில் அறிவிப்பு வரலாமாம். கமலே தயாரித்து நடிக்கவிருக்கும் படத்தை இயக்கவிருப்பது மிஷ்கின். புத்தரின் இறப்புக்குப் பின் நிகழும் சம்பவங்கள்தான் கதைக் களமாம். புத்தர் சம்பந்தமான புத்தகங்களை வேட்டையாடிக்கொண்டு இருக்கிறார் மிஷ்கின். புத்தம் சரணம் கமல்சாமி!


எம்.எஸ்.வி - இளையராஜாவோடு காலாவதியானது ஆர்கெஸ்ட்ரா இசையமைக்கும் முறை. அதாவது எல்லா வாத்தியக் கருவிகளையும் ரெக்கார்டிங் தியேட்டரில் வைத்து இசையமைக்கும் முறை. 'மதராசபட்டணம்' படத்தில் அந்த முறையில் இசையமைத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். வரலாறு திரும்புகிறது!


இன்பாக்ஸ்

'என் வாழ்நாளில் இத்தனை தூய மனிதரைச் சந்தித்தது இல்லை!' நெல்சன் மண்டேலாவைச் சந்தித்துத் திரும்பிய பிறகு, இப்படி திருவாய் மலர்ந்து அருளியிருப்பது அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்ட்டன். உங்க ஹஸ்பென்ட் உத்தமர் இல்லைன்னு சொல்லாமச் சொல்றீங்க!


சென்னையைத் தாண்டி கவரப் பேட்டையில் தன் தந்தை பெயரில் மிகப் பெரிய யுனானி மருத்துவமனை ஒன்றைக் கட்டி வருகிறார் இசைப்புயல் ரஹ்மான். யுனானி ஹோ!


இன்பாக்ஸ்

கரீனா கபூருடனான பிரிவுக்குப் பின் ஷாகித் கபூரின் மனக் காயங்களுக்கு ஆறுதல் அளிப்பது பிரியங்கா சோப்ராவாம். இருவரும் இணைந்து நடித்த 'காமினே' படத்தில் அத்தனை அட்டகாச கெமிஸ்ட்ரியாம். பன்றிக் காய்ச்சல் சீஸன்பா... டச்சிங் டச்சிங்லாம் கூடாது!


இன்பாக்ஸ்

கடந்த வாரம் ஹாலிவுட்டில் ஒரு படத்தின் பிரீமியர் ஷோவுக்கு வந்திறங்கிய மல்லிகா ஷெராவத்தைப் பார்த்ததும் ஹாலிவுட் பார்ட்டிகளே அசந்து, கிறங்கி விட்டார்களாம். 'வேர் இஸ் த பார்ட்டி டு நைட்?' என ஆளாளுக்குத் தன்னிடம் வழிந்ததில், மல்லிகா செம உற்சாகத்தில். இந்த டிரெஸ்சுக்கு எப்படி அளவெடுத்து இருப்பாய்ங்க!


இன்பாக்ஸ்

வளைவுகளில் வசீகரிக்கும் ஜெனிஃபர் லோபசுக்கு வயசு 40. 'இதுவரை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதில்லை. இனிமேலும் செய்யும் ஐடியா இல்லை. இயற்கையான அழகை அப்படியே ரசியுங்களேன்!' என்று தன் ஜொள்ளு ரசிகர்களுக்குப் பிறந்த நாள் வேண்டுகோள் வைத்திருக்கிறார் ஜெ.லோ. ஹார்லிக்ஸை அப்படியேதான் சாப்பிடணும்!


இன்பாக்ஸ்

'சீக்ரெட் மில்லினியர்ஸ் கிளப்' என்ற அமைப்பு உலகம் முழுவதும் உள்ளபள்ளிக் குழந்தைகளுக்கு கார்ட்டூன் ரூபத்தில் பிசினஸ் பாடமெடுக்க யார் கரெக்ட் சாய்ஸ் என்று அலசி ஆராய்ந்து டிக் அடித்திருக்கும் மில்லியனர், உலகப் பணக்காரர்கள் லிஸ்ட்டில் இரண்டாவது இடத்தில் இருக்கும் வாரன் பஃப்பட். பபூன் பஃப்பட்!


இன்பாக்ஸ்

நீண்டநாள் நண்பராக இருந்த சந்திரசேகர் ராவை விட்டு விலகி, ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியுடன் திடீர் நட்பு பாராட்டுகிறார் விஜயசாந்தி. சீக்கிரமே அம்மணியை மையமாக வைத்து ஆந்திராவில் விறுவிறு காரசார மாற்றங்கள் வருமாம். ஆந்திர 'அம்மா'?

 
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்