Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

Published:Updated:
விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை

தமிழ் சமையல்! new.sashiga.blogspot.com

விகடன் வரவேற்பறை

மையல் குறிப்புகளால் மணக்கும் வலைப்பூ. மிக எளிதாக சமையல் செய்ய நினைப்பவர்களுக்கு உதவும். சைவம், அசைவம் என்று வகைப்படுத்தி அதில் குழம்பு, பொரியல், ஊறுகாய், சிக்கன், மீன், சாம்பார், முட்டை, ரசம், வறுவல், நண்டு, வடை, வற்றல், பலகாரம், இனிப்பு எனப் பல்வேறு பிரிவுகளாகப் பிரித்துள்ளார்கள். சமையல் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கும் சுவையாகச் சமையல் செய்ய விரும்புபவர்களுக்குமான வலைப்பூ!

..................................

சலகெருது ,இயக்கம்: எஸ்.முருகானந்தம்
17. அஜிஸ் முல்க் முதல் தெரு, ஆயிரம் விளக்கு, சென்னை-6.

ஒரு மனிதனுக்கும் மாட்டுக்கும் உள்ள பந்தம் சுவாரஸ்யமான குறும்படமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. உழவுத் தொழில் செய்பவர்களுக்கு மாடு தெய்வமாகவும், வியாபாரிகளுக்கு விற்பனைப் பொருளாகவும் இருப்பதன் வேறுபாட்டை இயக்குநர் முருகானந்தம் நெகிழ்ச்சியுடன் 20 நிமிடங்களில் சொல்லி இருக்கிறார்!

..................................

மும்பை மாநகரத் தமிழர்களின் வரலாறு ,அனிதா கு.கிருஷ்ணமூர்த்தி
வெளியீடு: அனிதா பதிப்பகம், லியோ லேபிள் கட்டடம், இடுவம்பாளையம், திருப்பூர். ,பக்கம்:1,016 ,விலை ரூ.500

மும்பையின் முன்னேற்றத்தில் தமிழர்கள் ஆற்றி இருக்கிற பணிகள் நிறைய. கிருஷ்ணமூர்த்தி மிகுந்த அக்கறையுடன் அத்தகையவர்களின் பணிகளைத் தொகுத்து இருக்கிறார். தமிழர்கள் எங்கு இருந்தாலும், அதைச் சொந்த இடமாகக் கருதி பணியாற்றும் விதம் அருமையாக விளக்கப்படுகிறது. தமிழர்களின் பணியையும் மும்பையின் வரலாற்றையும் சேர்ந்து தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு இந்தப் புத்தகம்!

..................................

ஈரம் இசை: தமன்.எஸ் ,வெளியீடு: திங்க் மியூஸிக் ,விலை ரூ.99

தமன், கீ-போர்டு-பியானோ வாயிலாக மழை எஃபெக்ட் கொடுத்திருக்கும் இசைக்கு எழுத்தில் ஈரம் சொட்ட வார்த்தைகள் தந்திருக்கிறார் விவேகா. 'மழையே... மழையே...', 'சாரல் என்...' என்ற இரண்டு பாடல்களையும் ரஞ்சித் அழகாகப் பாடி இருக்கிறார். குத்தாட்டப் பாடல்களின் ஸ்பெஷலிஸ்ட் சுசித்ராவை 'தரை இறங்கிய...' பாடலில் மெலடிக்குப் பயன்படுத்தியதை வரவேற்கலாம்.!

..................................

பன்றிக் காய்ச்சல் http://new.swineflu.co.in

பன்றிக் காய்ச்சல் சம்பந்தமான ஆல் இன் ஆல் வெப்சைட். ஸ்வைன் ஃப்ளூ எங்கே ஆரம்பித்தது? எப்படிப் பரவியது? அதற்கான அறிகுறிகள், தற்காப்பு நடவடிக்கைகள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை எப்படி அதிகரிப்பது? டாக்டர்களுக்கு ட்ரீட்மென்ட் பரிந்துரைகள், ஸ்வைன் ஃப்ளூ தாக்கிவிட்டால் நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? போன்ற அவசியமான தகவல்கள் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. உலகச் சுகாதார நிறுவனத்தின் மற்ற தொற்றுநோய்கள் குறித்த விழிப்பு உணர்வுப் பரிந்துரைகளும் இணைக்கப்பட்டுள்ள பயனுள்ள வெப்சைட்!

 
விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism