Published:Updated:

''2012 ல் இந்த உலகம் அழியுமா!''

''2012 ல் இந்த உலகம் அழியுமா!''

''2012 ல் இந்த உலகம் அழியுமா!''
பாரதி தம்பி,படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
''2012 ல் இந்த உலகம் அழியுமா!''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
''2012 ல் இந்த உலகம் அழியுமா!''
மதுரை ஆதீனத்தின் ஏடாகூட பேட்டி
''2012 ல் இந்த உலகம் அழியுமா!''
''2012 ல் இந்த உலகம் அழியுமா!''
''2012 ல் இந்த உலகம் அழியுமா!''
''2012 ல் இந்த உலகம் அழியுமா!''

''நீங்க முதலமைச்சர் ஆனால், முதலில் என்ன சட்டம் கொண்டுவருவீங்க?''

''ஃப்ளெக்ஸ் போர்டுவெச்சு ரோட்டை அடைக்கிறது, வால் போஸ்டர் ஒட்டி சுவர்களைக் கெடுக்கிற மாதிரியான வேலைகளை முதல்ல தடுப்பேன். ஏன்னா, ஆதீனத்துக்கு விளம்பரமே பிடிக்காது. முக்கியமா, இந்த செகண்ட் ஷோ சினிமாவையே கட் பண்ணிருவேன். அதனால் எக்கச்சக்கமான பிரச்னைகள் வருது!''

''பேட்டா செருப்பு எல்லாம் ஏன் 299 ரூபாய் 95 காசுன்னே விற்கிறாங்க?''

''நான் கட்டை செருப்பு போடுற ஆளு... இருந்தாலும் சொல்றேன். 300 ரூபாய்னு சொன்னா, பெரிய விலையாத் தெரியும். 'அடேயப்பா! 300 ரூபாயா'ன்னு தோணும்ல. அதனாலதான் அப்படிச் சொல்றான்!''

''நாட்டுல அடிக்கடி நிலநடுக்கம் வருதே... உண்மையிலேயே உலகம் அழியப்போவுதா?''

''குறிச்சுவெச்சுக்கங்க... 2012-வது வருஷம் டிசம்பர் 21-ம் தேதி உலகம் அழியப்போவுது. மிகப் பெரிய சுனாமி வரும், பனிமலை உருகும், கடல் கொந்தளிச்சு நாட்டுக்குள்ள வரும், பூகம்பம் உலுக்கும். யாரும் இதைத் தடுக்க முடியாது.''

''அழகிரியைப்பத்திச் சொல்லுங்களேன்...''

''அழகிரி யாரையும் சட்டை பண்றதே இல்லை. அவர் வழியில் போய்ட்டிருக்காரு. மனசுக்கு நினைச்சா எதுவும் பண்றார், இல்லேன்னா இல்லை. யார் சொல்றதையும் கேக்குறது இல்லை!''

''சிக்ஸ்பேக் பத்தி என்ன நினைக்கிறீங்க..?''

''இன்னிக்கு இருக்குற உடம்பு நாளைக்கு இருக்காது. ஓமக்குச்சியைக் குண்டாக்க முடியுமா? உசிலைமணியை ஒல்லியாக்க முடியுமா? ம்ஹூம்... ரெண்டு பேருமே இப்போ இல்லை. ஒவ்வொருத்தருக்கும் ஓர் உடம்பை ஆண்டவன் படைச்சு

''2012 ல் இந்த உலகம் அழியுமா!''

அனுப்பியிருக்கான். அதுதான் நல்லது. ஹியூமன் பாடியை நம்ம நினைச்ச மாதிரி எல்லாம் மாத்தக் கூடாது. தப்பு... தப்பு!''

''கொடநாடுங்கிற ஊர்ல என்ன ஸ்பெஷல்?''

''அது ஜெயலலிதா எஸ்டேட்... அதான் ஸ்பெஷல். ஜெயலலிதாவுக்கு அது ஸ்பெஷல் நாடு. இல்லேன்னா, நீங்க ஏன் இதை என்கிட்டக் கேட்கப் போறீங்க.''

''சிவப்பு ராணி, அவளைச் சுற்றி 32 சிப்பாய்கள்...' அவள் யார்?''

''என்ன இது... ஆதீனம்கிட்ட சின்னப் புள்ளை மாதிரி விடுகதை எல்லாம் கேக்குறீங்க... முதுகுத் தண்டுல தான் 32 எலும்பு இருக்கு. முதுகுத் தண்டா?''

''2012 ல் இந்த உலகம் அழியுமா!''

''இல்லை... நாக்கு! அது சரி, 'டாடி மம்மி வீட்டில் இல்லை, தடை போட யாரும் இல்லை'ங்கிற பாட்டு எந்தப் படத்தில் இடம்பெற்றது?''

''மம்மி மீன்ஸ் டெட்பாடி இன் இங்கிலீஷ். நம்முடைய தமிழ்க் குழந்தைகள் மம்மி என்ற வார்த்தையை உச்சரிப்பதே தப்பு. முதல்ல தமிழ் சினிமாவுலேர்ந்து மம்மிங்கிற வார்த்தையையே நீக்கணும்!''

''ஒசாமா, ஒபாமா... வித்தியாசம் சொல்லுங்க..?''

''ஒபாமா ஒரு ஜனநாயகவாதி, ஒசாமா ஒரு தீவிரவாதி!''

''2012 ல் இந்த உலகம் அழியுமா!''

''ஐயே... உங்க ஸ்டைல்ல பதில் சொல்லுங் களேன்...''

''ஒபாமா 'தலைவா, இங்க வா'ன்னு கூப்பிடுவான். ஒசாமா 'தலை இருக்காது, இங்க வாடா'ன்னு கூப்பிடுவான், அவ்வளவுதான் வித்தியாசம்!''

''ஒரு வாரத்துக்கு ஏன் 7 நாட்கள் இருக்கு?''

''ஏன்னா 7-ங்கிறது லக்கி நம்பர். வான வில்லில்கூட ஏழு வண்ணங்கள்தானே இருக்கு. என்ன நான் சொல்றது?''

''ஒரு படத்தில் நீங்கள் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால், யாரை ஹீரோயினாக செலெக்ட் பண்ணுவீங்க?''

''ம்... சொல்லிருவேன். அப்புறம் ஆதீனம் இதைச் சொல்லிட்டாரு, அதைச் சொல்லிட்டாருன்னு சொல்லுவாங்க. ஏன் அந்த வம்பு... அதை விடுங்க!''

 
''2012 ல் இந்த உலகம் அழியுமா!''
''2012 ல் இந்த உலகம் அழியுமா!''