Published:Updated:

''எனக்கும் மேடை பிடிக்கும்!'' -இந்த வாரம் நாஞ்சில் சம்பத்

''எனக்கும் மேடை பிடிக்கும்!'' -இந்த வாரம் நாஞ்சில் சம்பத்

''எனக்கும் மேடை பிடிக்கும்!'' -இந்த வாரம் நாஞ்சில் சம்பத்
ப.திருமாவேலன்,படங்கள்:சு.குமரேசன்
''எனக்கும் மேடை பிடிக்கும்!'' -இந்த வாரம் நாஞ்சில் சம்பத்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
''எனக்கும் மேடை பிடிக்கும்!'' -இந்த வாரம் நாஞ்சில் சம்பத்
இந்த வாரம் நாஞ்சில் சம்பத்
''எனக்கும் மேடை பிடிக்கும்!'' -இந்த வாரம் நாஞ்சில் சம்பத்
''எனக்கும் மேடை பிடிக்கும்!''
''எனக்கும் மேடை பிடிக்கும்!'' -இந்த வாரம் நாஞ்சில் சம்பத்

'எனக்குப் பிடிக்கும்' என்ற பொதுத் தலைப்பில் வாரம்தோறும் ஒருவர் தங்களது விருப்பங்களைச் சொல்கிறார்கள்!

மாதம் 30 நாட்களும் முழங்குவார். மைக் பிடித்தால் அவர் ஒரு மாயாவி. மேடை ஏறினால் சூறாவளி. நாற்காலி ஆசைகள் இல்லாத நாவுக்கரசர் நாஞ்சில் சம்பத். வைகோ சூட்டிய பெயர் திக்விஜயன். தமிழக மேடைகளில் எட்டுத்திக்கும் சுழன்றடிக்கும் தென்றலும் அவரே... புயலும் அவரே!

''எனக்கும் மேடை பிடிக்கும்!'' -இந்த வாரம் நாஞ்சில் சம்பத்

''தாயின் கருவறையில் இருந்து வெளியில் குதித்தபோது கைது செய்யப்பட்டு, தமிழ்நாட்டு மேடைகளில் அடைக்கப்பட்ட நான், இன்று வரை விடுதலை ஆகவில்லை. 'முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தி, சண்டமாருதமாக முழங் கியவர் ஈ.வே.கி. சம்பத். அவரது பெயரை என்னுடைய அப்பா வைக்கக் காரணம், சம்பத் போலத் தன் மகனும் மேடைகளை ஆள வேண்டும் என்பதற் காகத்தான். மூன்றாம் வகுப்பு படித்தபோது சுதந்திர தினத்தன்று பேச, எமிலி டீச்சர் எழுதிக் கொடுத்தார். அடுத்த ஆசிரியை கமலம். உயர்நிலைப் பள்ளி படித்த காலத்தில் ஆசிரியர்கள் மரிய அற்புதமும், மேரி அல்பினாவும். கல்லூரிக் காலத்தில் பேராசிரியர் தெ.நா.மகாலிங்கம். மாநிலம் தழுவிய எல்லாப் பேச்சுப் போட்டிகளிலும் முதல் பரிசு வாங்கவைத்தவர் கல்லூரி முதல்வர் கே.சி.தாணு. பாடப் புத்தகங்களைவிட மற்ற புத்தகங்களைக் கணக்குப் பார்க்காமல் வாங்கித் தந்தார் என் தந்தை பாஸ்கரன். நான் இன்று ஒரு பேச்சாளனாக வந்ததற்கு வாசக்கால் அமைத்து அழகு பார்த்தவர்கள் இவர்கள்.

''எனக்கும் மேடை பிடிக்கும்!'' -இந்த வாரம் நாஞ்சில் சம்பத்

ஆரம்பத்தில் இலக்கிய மேடைகள்தான் எனக்கு இன்பமாக இருந்தன. தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் ஐந்து நாட்கள் நிகழ்ச்சியிலும் என் சித்தப்பா நாராயணனுடன் அசையாமல் இருப்பேன். பேராசிரியர் திருச்சி ராதாகிருஷ்ணன், பெரும்புலவர் நடேச முதலியார், திருக்குறள் முனுசாமி, பேராசிரியர் நமசிவாயம், இளம்பிறை மணிமாறன், எட்டையபுரம் துரைராஜ் போன்றோர் பேச்சைக் கேட்கும்போது அவர்கள் இடத்துக்கு நானும் வர வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. இந்தச் சூழ்நிலையில், நெல்லையில் 'நெருக்கடியில் நாம்' என்ற தலைப்பில் கலைஞர் பேச்சைக் கேட்டேன். அவரது உரையைவிட அன்று வைகோ பேச்சைக் கேட்டுத்தான் மிரண்டுபோனேன். உலக வரலாற்றை உணர்ச்சியால் குழைத்து எரிமலை வார்த்தைகளால் கொப்பளித்த வைகோ, அன்று என்னை ஆட்கொண்டார். இன்று வரை என்னைக் கட்டிப்போட்டு வைத்திருக்கும் வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர் அவர்தான். அவர் எங்கே பேசினாலும் கேட்கப் போவேன். ஒருமுறை நாகர்கோவிலில் இருந்து திருச்சிக்கு வந்து பேச்சைக் கேட்டுவிட்டுத் திரும்பினேன்.

இலங்கைத் தமிழர் பிரச்னைக்காகத் தடை மீறி பேசிய குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டு, பாளை சிறையில் அடைக்கப்பட்டேன். வைகோவும் உள்ளே இருந்தார். சிறைச்சாலையை மாலை நேரக் கல்லூரியாக மாற்றிக் காட்டினார் வைகோ. 'நிறம் மாறாத பூக்கள்', 'அலைகள் ஓய்வதில்லை', 'தப்புத் தாளங்கள்', 'புதிய வார்ப்புகள்' என்று அப்போது வந்திருந்த படங்களைத் தலைப்புகளாகக் கொடுத்து என்னைப் பேசச் சொன்னார். வெளியில் வந்ததும் என்னை தி.மு.க-வின் சிறப்புச் சொற்பொழிவாளனாக ஆக்கி, சுரண்டையில் முதல் கூட்டம் பேசவைத்தார் வைகோ. உலக உருண்டையில் எங்கு போய் முழங்கினாலும் நான் அந்த சுரண்டையை மறக்க மாட்டேன்.

குமரி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளில் 300 கூட்டங்கள் பேசவைத்து நாற்றாங்கால் அமைத்தார் அண்ணன் ஜஸ்டின். 86-ம் ஆண்டு கோவையில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு மாநாட்டில் பாரதிதாசன் படத்தைத் திறந்துவைத்துப் பேசினேன். அடுத்த நாள் என்னை அழைத்த கலைஞர், 'உனக்குத்தான் முதல் பரிசு' என்றார். அன்று முதல் நிர்வாகிகள் என்னிடம் தேதி வாங்க ஆரம்பித்தார்கள். அன்று முதல் எந்த நாளும் எனக்குச் சொந்த நாள் இல்லை. கட்சிக்குச் சொந்தமானது. இலக்கியக் கழகங்களுக்குச் சொந்தமானது.

முன்னாள் அமைச்சர் அண்ணன் தங்கபாண்டியனை ஆதரித்து, காரியாபட்டியில் பேச கலைஞர் வருகிறார். அவர் இரவு 10 மணிக்கு வர வேண்டும். அவர் வரும் வரை பேசச் சொன்னார்கள். ஆரம்பித்தேன். இரவு 1 மணி ஆனது... மூன்றைத் தொட்டது... அதிகாலை ஐந்து ஆனது. கலைஞர் வந்தது காலை ஏழரை மணிக்கு. ஒன்பதரை மணி நேரம் நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருந்தேன். என்னுடைய திருமணத்தை நடத்திவைக்க கலைஞர் ஒப்புக்கொண்டதற்கு அந்த ஒன்பது மணி நேரம்தான் காரணம். கடற்கரையில் இருந்த கண்ணகி சிலை சிதைக்கப்பட்டபோது, ராமாயாணம், மகாபாரதம் மாதிரி சிலப்பதிகாரத்தையும் தொடர் சொற்பொழிவு செய்தால் என்ன என்று நினைத்து, விருத்தாசலம் முதுகுன்றம் தமிழ் மன்றத்தில் 10 நாட்கள் பேசினேன். மணிவாசகர் பதிப்பகம் மெய்யப்பன், 'இலக்கியச் சித்தர்' என்று வார்த்தைகளால் வருடினார். இப்படி, இலக்கியம், அரசியல் இரண்டிலும் ஒருசேர ஆட்சி செய்யும் இன்பம் அலாதியானது.

ஒரு சொற்பொழிவாளன் என்பவன் கூலிக்கு மாரடிப்பவன், காசுக்கு விலை போகிறவன், ஆதாயம் தேடும் பேராசைக்காரன் என்று பேசப்படும் இந்தக் காலத்தில், கொண்ட கொள்கையில் சமரசம் செய்யாமல், அதிகாரவர்க்கத்தின் எந்த அடக்குமுறைகளுக்கும் அடங்காமல், கறுப்புச் சட்டங்கள் பற்றிக் கலங்காமல் களத்தில் நிற்பவன்தான் உண்மையான பேச்சாளன். 91-ம் ஆண்டு என் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பதிவானது. இன்று 40 நீதிமன்றங்களில் என் மீது வழக்குகள் இருக்கின்றன. பல்வேறு ஊர்களில் நான் பேசிக்கொண்டு இருக் கும்போதே தாக்கப்பட்டேன். தாக்கப்பட்ட என்னையே கைது செய்து மதுரை சிறையில் வைத்தார்கள். அங்கு சிறைக்குள் கொலை செய்யவும் முயற்சி நடந்தது. ஆட்கொணர்வு மனுவை வைகோ தாக்கல் செய்தார். வழக்கறிஞர்கள் அஜ்மல்கான், தேவதாஸ், சுப்பாராஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் வாதாடி வெற்றிபெறாமல் போயிருந்தால், இந்தக் கதையைச் சொல்ல இன்று நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன். பேச்சாளனது தொழில் சுகமானதல்ல என்பதற்காகத்தான் இதைச் சொல்கிறேன். சொற்பொழிவாளர் வரலாற்றில் என்னளவு அடக்குமுறைகளை வேறு யாரும் அனுபவித்ததுஇல்லை. ஆனாலும், எனக்குப் பயம் இல்லை. கூட்டம் இல்லாத நாளில்தான் பயமாக இருக்கும்.

எந்த மேற்கோளும் இல்லாமல் பேசி எனக்குள் பிரமிப்பு கொடுத்தவர் பேரறிஞர் அண்ணா. துணுக்குத் தோரணங்கள் இல்லாமல்ஆடம் பரமான வார்த்தைகளால் மேடைகளை ஆட்சி செய்த ஈ.வெ.கி. சம்பத். இருவரையும் பார்த்ததில்லை. ஆனால், என்னை அவர்கள் பாதித்திருக்கிறார்கள். சாகாவரம் பெற்ற சங்க இலக்கியங்களைப் பல நூற்றாண்டு இடைவெளிக்குப் பிறகு மேடைகளில் நடனமாடவைத்த நாவலர் நெடுஞ்செழியன், தந்தை பெரியாரின் தத்துவங்களை லாகவமாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும் நடையில் சொல்லிச் சொக்கவைக்கும் திருச்சி செல்வேந்திரன், புள்ளிவிவரங்களையும் ஆங்கில மேற்கோள்களையும் அநாயாசமாக அள்ளியெறிந்து பேசும் விடுதலை விரும்பி, ஒரு நவசர நாயகன் போல் மேடைகளை வசப் படுத்தி உரைமுருகனாக உலவி வந்த துரைமுருகன்... இவர்கள் எல்லாம் தொடக்க காலத்தில் என்னைப் பாதித்தவர்கள். இவர்கள் யார் சாயலும் இல்லாத ஒரு நடையை நான் பின்பற்ற விரும்பினேன். நகைச்சுவைத் துணுக்கு, கற்றறிந்த அறிஞர்களின் மேற்கோள், சமய இலக்கியங்களில் இருந்து உதாரணம், உணர்ச்சியின் முகட்டுக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து அப்படியே உருகவைப்பது என எல்லாம் கலந்த கதம்ப மாலைதான் என் பேச்சு என்று விமர்சகர்கள் சொல்வார்கள். அது உண்மைதான். எல்லாம் கலந்ததுதான் எல்லாரையும் ஈர்க்கும்.

''எனக்கும் மேடை பிடிக்கும்!'' -இந்த வாரம் நாஞ்சில் சம்பத்

தொடர்ந்து 65 நாட்கள் வெவ்வேறு ஊர்களில் பேசியிருக்கிறேன். இரண்டரை மாதங்கள் கழித்துத்தான் வீட்டுக்கே போனேன். ஒரு சொற்பொழிவாளனுக்கு எதுவெல்லாம் ஆகாதோ, அதுதான் என் ஆகாரம். பேசுவதற்கு முன் ஜில்லென்று ஒரு பாட்டில் ஃபேன்டா குடித்துவிட்டுத்தான் மேடை ஏறுவேன். முடித்து இறங்கியதும் இன்னொரு ஃபேன்டா. ஐஸ் வாட்டர், ஐஸ் மோர், கரும்பு ஜூஸ் இவைதான் எனக்கு அதிகம் பிடித்தது. கோவை 'ஃப்ரெண்ட்ஸ் கேட்டரிங்' ராதாகிருஷ்ணன், ராஜபாளையம் நவபாரத் நாராயண ராஜா ஆகிய இருவரும்தான் எனக்கு ஞானக் கடவுள்கள். நான் கேட்கும் புத்தகங்களை வாங்கித் தரும் வள்ளல்கள். நான் கேள்விப்பட்டுச் சொன்னால், அவர்கள் தேடிப் பிடித்துத் தருவார்கள். எந்த ஊரில் இறங்கினாலும் பேப்பர் கடையைத்தான் என் கண் தேடும். எல்லா மக்களும் வாங்கும் பத்திரிகை முதல், எவனுமே வாங்காத பத்திரிகை வரை வாங்கும் ஒரே ஆள் நான்தான். எதையாவது படித்தால், அதை மேடைக்குத் தகுந்த மாதிரி மாற்றிக்கொண்டே இருக்கிறது மனம்.

சிலருக்குப் பேச்சு நா வாணிபம். சிலருக்கு அது அரசியல். சிலருக்கு அதுதான் வாழ்க்கை. எனக்குப் பேச்சுதான் மூச்சு. உண்ணாமல், உறங்காமல், உறவுகளுடன் பழகாமல் இருக்க முடியும். ஆனால், மேடையை என்னால் மறக்க முடியாது. இந்த மேடைகள், என்னை எப்போது நிராகரிக்கின்றவோ, அப்போது நான் பாடையில் இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் ஏதாவது ஒரு தெருவில், ஒரு மேடையில் பேசிக்கொண்டு இருக்கும்போது உயிர் பிரிய வேண்டும் என்பது என் கனவு. அதை நிறைவேற்றுவாயா தமிழ்த் தாயே!''

 
''எனக்கும் மேடை பிடிக்கும்!'' -இந்த வாரம் நாஞ்சில் சம்பத்
''எனக்கும் மேடை பிடிக்கும்!'' -இந்த வாரம் நாஞ்சில் சம்பத்