Published:Updated:

பன்றிக் காய்ச்சல்... A to Z சந்தேகங்களுக்கு பதில்!

பன்றிக் காய்ச்சல்... A to Z சந்தேகங்களுக்கு பதில்!

பன்றிக் காய்ச்சல்... A to Z சந்தேகங்களுக்கு பதில்!
பா.பிரவீன் குமார்
பன்றிக் காய்ச்சல்... A to Z சந்தேகங்களுக்கு பதில்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பன்றிக் காய்ச்சல்... A to Z சந்தேகங்களுக்கு பதில்!
பன்றிக் காய்ச்சல்... A to Z சந்தேகங்களுக்கு பதில்!
பன்றிக் காய்ச்சல்... A to Z சந்தேகங்களுக்கு பதில்!
பன்றிக் காய்ச்சல்... A to Z சந்தேகங்களுக்கு பதில்!
பன்றிக் காய்ச்சல்... A to Z சந்தேகங்களுக்கு பதில்!

'பன்றிக்கு நன்றி சொல்லி, குன்றின் மீதேறி நின்றால் வென்றிடலாம் பன்றிக் காய்ச்சலை!' என்று சகட்டுமேனிக்கு எஸ்.எம்.எஸ்-கள் பறந்துகொண்டு இருக்கின்றன. பொதுவாக, அந்த நோய் குறித்து எழும் சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார் மருத்துவர் வி.டி.புகழேந்தி.

''பன்றிக் காய்ச்சல் பாதித்து இருப்பதற்கான அறிகுறிகள்?''

''காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி, இருமல், மூக்கில் நீர் ஒழுகல், சில நேரங்களில் வாந்தி, பேதி!''

''இந்த நோயைத் தவிர்க்க தடுப்பு ஊசி எதுவும் இருக்கிறதா?''

''இதுவரை எதுவும் இல்லை. இன்னும் ஒன்றிரண்டு மாதங்களில் கண்டுபிடிக்கப்படலாம்!''

''ஃப்ளூ காய்ச்சலுக்கும் பன்றிக் காய்ச்சலுக்கும் என்ன வித்தியாசம்?''

''சாதாரண ஃப்ளூ காய்ச்சலின்போது காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி, இருமல், மூக்கில் நீர் ஒழுகுதல் ஆகியவை இருக்கும். பன்றிக் காய்ச்சலின்போது கூடுதலாக வாந்தி, பேதி, தோலில் நீலம் மற்றும் சாம்பல் நிறம் தோன்றும்.''

''சளி, இருமல், காய்ச்சல் மூன்றும் இருந்தால் பன்றிக் காய்ச்சலா?''

''அவை அறிகுறிகள்தான். ஆய்வுக்குப் பிறகே அதை உறுதிப்படுத்த முடியும்!''

''பன்றிக் காய்ச்சல் தாக்கிய அனைவருக்கும் சுவாச உறுப்புக்கள் செயலிழக்குமா?''

''இயல்பாகவே நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும் வேறு ஏதாவது நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கும் அதற்கான சாத்தியங்கள் அதிகம்!''

''தோல் நீல நிறமாக மாறுமா?''

''உடல் முழுவதும் நீல நிறமாக மாறும் என்று கூற முடியாது. ஆனால் கை, கால் விரல் நுனிகள் சிறிது நீல நிறமாக மாறும்!''

''மாஸ்க் அணிவது பற்றி சில குறிப்புகள்...''

''3 லேயர் மாஸ்க் அணிவதன் மூலம் பாதிப்புகளில் இருந்து ஓரளவு தப்பிக்கலாம். பயன்படுத்தும் மாஸ்க்கை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். துணியால் ஆன மாஸ்க் என்றால் கிருமி நாசினியைப் பயன்படுத்தி துவைத்து உலர்த்தி, மீண்டும் பயன்படுத்தலாம். மாஸ்க் இல்லாதபட்சத்தில் கர்ச்சீப் மூலம் மூக்கு, வாய் நன்றாக மறையும்படி கட்டிக்கொள்ளலாம்!''

''கை கழுவுவது பற்றி...''

''சூடாக இருந்தாலும் குளிர்ச்சியாக இருந்தாலும் சுத்தமான தண்ணீரில்தான் கிருமிநாசினி சோப் போட்டுக் கை கழுவ வேண்டும்!''

''வீட்டைச் சுற்றி பிளீச்சிங் பவுடர், டெட்டால் போன்றவற்றைத் தெளித்தால் நோய் வராமல் தடுக்க முடியுமா?''

''அப்படிச் செய்வது காற்றில் கிருமியின் தாக்கத்தைக் குறைக்கும். நோய் வரவே வராது என்று உறுதி கூற முடியாது!''

''மார்க்கெட்டில் கிடைக்கும் சில மாத்திரைகளை உட்கொண்டால் நோய் வராமலே தடுத்துவிட முடியுமா?''

''அப்படி எதுவும் செய்துவிடாதீர்கள். ஸ்வைன் ஃப்ளூவுக்கான மாத்திரைகள் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கும். அதை நோய் தாக்குவதற்கு முன்னரே உட்கொண்டால், நோய் தாக்கிய பிறகு சாப்பிடும்போது பலன் அளிக்காது!''

''காய்ச்சல் வந்தாலே ஸ்வைன் ஃப்ளூ டெஸ்ட் எடுத்துவிட வேண்டுமா?''

''அவசியம் இல்லை. மேலே குறிப்பிட்டுள்ள மற்ற அறிகுறிகளும் இருந்தால்தான் மருத்துவர் ஆலோசனைக்குச் செல்லலாம்!''

''நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் இருந்தால் இந்த நோய் தாக்கவே தாக்காது என்கிறார்களே... உண்மையா?''

பன்றிக் காய்ச்சல்... A to Z சந்தேகங்களுக்கு பதில்!

''யாரையும் எங்கேயும் எப்போதும் இந்த நோய்க் கிருமிகள் தாக்கலாம். நோய் எதிர்ப்புச் சக்தி பலமாக இருந்தால் பாதிப்பு இருக்காது!''

''நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?''

''வைட்டமின் சி சக்தி நிறைந்த பழங்களை அதிக அளவில் சாப்பிடுங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிவிடும்!''

''பன்றிக் காய்ச்சல் பாதித்தவர் நம்மைத் தொட்டாலே காய்ச்சல் தொற்றிக்கொள்ளுமா?''

''அப்படிப் பரவாது. ஆனால், அவர் தொட்ட இடத்தை நாம் தொட்டு அப்படியே வாய், மூக்கு, கண்ணைத் தொட்டால் நமக்கும் பரவும். எனவே, குறைந்தது 2 மீட்டர் இடைவெளி தேவை!''

''பன்றிக் காய்ச்சலுக்குச் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சென்று பார்க்கலாமா?''

''மாஸ்க் அணிந்து தூரமாக நின்று பார்க்கலாம். பாதிக்கப்பட்டவர் தனிமையில் இருக்க வேண்டியது அவசியம். ஆனால், அவரை அந்த நிலையில் நீங்கள் சந்திக்க வேண்டுமென்று என்ன அவசியம்? ஒரு வாரம்தான் காத்திருங்களேன்!''

''என் வீட்டில் ஒருவருக்கு பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறி இருந்தால் என்ன செய்ய வேண்டும்?''

''முதலில் மாஸ்க் அல்லது கர்ச்சீப்பால் முகத்தைக் கட்டிக்கொள்ளுங்கள். பாதிக்கப்பட்டவரைத் தாமதிக் காமல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங் கள்!''

''இந்தக் காய்ச்சலின் பின்விளைவுகள் பலமாக இருக்குமா?''

''ஒருமுறை வந்து சரியான பிறகு எந்தப் பின் விளைவுகளும் இருக்காது. பயப்பட வேண்டாம்!''

''ஒருமுறை பாதித்துக் குணம் அடைந்தவர்களை மீண்டும் பன்றிக் காய்ச்சல் தாக்குமா?''

''முதல் தடவை பாதிக்கப்பட்ட பிறகு எடுத்துக்கொள்ளப்படும் சிகிச்சை தரும் எதிர்ப்புச் சக்தி காரணமாகக் குறைந்தபட்சம் ஆறு முதல் ஒரு வருடம் வரை மீண்டும் பன்றிக் காய்ச்சல் தாக்காது. அதற்குப் பிறகு சளி, காய்ச்சல் போல மீண்டும் வர வாய்ப்பு உள்ளது!''

''எந்த வெப்பநிலையில் இந்தக் கிருமி பரவாது?''

''வெப்பநிலை அதிகம் இருந்தால் இந்தக் கிருமி தானாகவே அழிந்துவிடும். ஆனால், தற்போது மழை பெய்து பருவ நிலை மாறி உள்ளதால் கிருமி யின் ஆயுட்காலம் அதிகமாக இருக்கும்!''

பன்றிக் காய்ச்சல்... A to Z சந்தேகங்களுக்கு பதில்!

டான் ரட்ஸ். அமெரிக்காவில் 'சிஞிசி' எனப்படும் தேசிய நோய்த் தடுப்பு மையத்தின் தலைவர். ஸ்வைன் ஃப்ளூ (பன்றிக் காய்ச்சல்) தொடர்பான சந்தேகங்களுக்கு இன்று உலகமே இவரது ஆலோசனைகளைத்தான் எதிர்நோக்கி நிற்கிறது. ஸ்வைன் ஃப்ளூ முதலில் தாக்குதல் நடத்திய மெக்ஸிகோ, கனடா போன்ற வட அமெரிக்கா நாடுகளில் பாதிப்புகளை அருகில் இருந்து பார்த்தவர்.

''பன்றிகள் மூலம்தான் இந்த நோய் முதலில் பரவியதா?''

''ஸ்வைன் என்றாலே பன்றி என்றுதான் பொருள். ஆனால், பன்றிகளை மட்டும் தாக்குவதாலேயே இந்த நோய்க்குப் பன்றிக் காய்ச்சல் என்ற பெயர் வந்தது. ஆனால், பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு இந்த நோய் பரவும் என்று சொல்ல முடியாது. மனிதர்களிடம் இருந்துதான் மனிதர்களுக்குப் பரவும். அதனால்தான் பன்றிக் கறி சாப்பிடும் வழக்கம் உள்ள எங்கள் நாட்டில் கூட அவற்றைத் தவிர்க்கச் சொல்லி நாங்கள் அறிவுறுத்தவில்லை!''

''பயந்து மிரண்டு வீட்டுக்குள்ளேயே பதுங்கிக்கொள்ளும் அளவுக்கு இந்த நோய் பயங்கரமானதா?''

''தாக்கியவர்களைக் கொன்று அழிக்கும் உயிர்க் கொல்லி நோய் அல்ல ஸவைன் ஃப்ளூ. ஆனால், எளிதாக எவரையும் தாக்கும் வாய்ப்பு இருப்பதால், முன் எச்சரிக்கையாக இருக்கச் சொல்லத்தான் இத்தனை பிரமாண்ட பிரசாரங்கள். அமெரிக்காவில் பல்லாயிரம் பேர்களை இந்த நோய் தாக்கினாலும், சில ஆயிரம் பேர்கள் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை எடுக்கும் அளவுக்கு பாதிக்கப்பட்டார்கள். இறந்து போனவர்கள் சில நூறு பேர் மட்டுமே. ஆனால், ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள், இதய நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள், மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த நோய் அதிகசிக்கல்களை உண்டாக்கும். அவர்கள் 2 மடங்கு கவனமாகஇருக்க வேண்டும்!''

''இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தங்களின் அறிவுரை...''

''மருத்துவர் கூறும் மருந்து மாத்திரைகளைச் சாப்பிடுவதுடன் உடலில் நீர்ச் சத்து குறைவு ஏற்படாத அளவுக்குத் தண்ணீர் குடியுங்கள். போதும் போதும் என்ற அளவுக்கு நன்றாகத் தூங்கி ரெஸ்ட் எடுங்கள்!''

- பி.ஆரோக்கியவேல்

 
பன்றிக் காய்ச்சல்... A to Z சந்தேகங்களுக்கு பதில்!
பன்றிக் காய்ச்சல்... A to Z சந்தேகங்களுக்கு பதில்!