வாசகர்களே... வாங்க கலக்கலாம்!

''எனக்கு இப்போது வயது 71. நான் ராஜபாளையம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 1955-ம் வருடம் எஸ்.எஸ்.எல்.சி. படித்துக்கொண்டு இருந்தபோது, எங்களது பக்கத்து வீட்டுக்காரர் எல்.ஐ.சி-யில் பணிபுரிந்த சிவப்பிரகாசம். அவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு நல்ல பழக்கம். ஒரு முறை அவர் வீட்டு விருந்துக்கு வர தேவர் இசைந்திருந்தார். தனிப்பட்ட அழைப்பு என்பதால், முத்துராமலிங்கத் தேவர் மட்டும் வந்திருந்தார். விருந்து உணவு வகைகள் ஏக அமர்க்களமாக இருந்தாலும், முருக பக்தர் என்பதால் சாம்பார் சாதம் மட்டும் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பத் தயாரானார். அப்போது அவரை அணுகி ஒருபுகைப் படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றேன். 'உனக்குப் போட்டோ எடுக்கத் தெரியுமா?' என்று கேட்டார். 'எனக்குத் தெரியாது. அப்பா எடுப்பார்!' என்றேன். (அந்தக் காலத்தில் போட்டோ எடுப்பது எல்லாம் நிலவுக்குப் போய் வருவதற்குச் சமமான சமாசாரம்!) சிரித்துக்கொண்டே என் முதுகில் தட்டிக்கொடுத்து தன் அருகில் நிறுத்திக்கொண்டார். இன்றும் என் நீங்கா நினைவுகளில் நிழலாடும் நாள் அது!''

- எஸ்.எம்.விவேகானந்தம், விருதுநகர்.

'' 'ஜி' படம் சூட்டிங் சமயம் அது. மூன்று நாட்களாக நான் அலைந்து திரிந்தாலும் அஜீத்துடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள முடியாமலே இருந்தது.

அன்று நான் காலை 7 மணிக்கே சென்று விட்டேன். 9 மணிக்கு அஜீத் வந்ததும்,

அவரை அருகில் பார்த்த பரவசத்தில், 'தல... நான் மூணு நாளா வந்துட்டே இருக்கேன் தல.. ஆனா, உங்ககூட போட்டோ எடுத்துக்கவே முடியலை!' என்று வருத்தமாகக் கூறினேன். உடனே அவர், 'நண்பா மூணு நாள் காத்திருந்ததுக்கே இவ்வளவு சங்கடப்படுறீங்களே... நான் இந்த இடத்துக்கு வர 11 வருஷமாச்சு!' என்று மட்டும் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். பின்னர் அரை மணி நேரம் கழித்து என்னை அருகில் அழைத்து என்னைப் பற்றி விசாரித்தவர் போட்டோ எடுத்துக்கொள்ள அனுமதி தந்தார். போட்டோ எடுத்த சந்தோஷத்தைக் காட்டிலும் அவர் சொல்லிய அந்த வாசகம் எனக்குள் ஏற்படுத்திய அதிர்வு பிரமிப்பானது... தேங்ஸ் தல!''

- ஏ.சேகர், கோயம்புத்தூர்.

''காந்திஜியின் மதுவிலக்குக் கொள்கைக்காக பெரியார் தன் தோட்டத்தில் இருந்த நூற்றுக்கணக்கான தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தார் என அறிந்த என் தந்தையும், தன் தோட்டத்தில் இருந்த தென்னை மரங்கள் அனைத்தையும் வெட்டிச் சாய்த்தார். அந்த அளவுக்கு எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பெரியார் மீது பாசமும் பற்றும். பெரியார் சத்தியமங்கலம் வந்தபோது, அவரோடு நெருங்கிய தொடர்புடைய ஜவுளிக் கடை கோவிந்தசாமி நாயக்கர், நான், என் தம்பி, இப்போதைய நகரசபைத் தலைவர் எஸ்.ஆர்.வேலுச்சாமி மற்றும் பலரும் சேர்ந்து பெரியாருக்கு எடைக்கு எடை வெங்காயம் கொடுத்தோம். (பெரியாரைத் தராசில் அமரவைத்து எடைக்கு எடை காசு, பழங்கள், வெல்லம், வெங்காயம் போன்ற பொருட்களை உற்சாகமாகக் கொடுக்கும் பழக்கம் இருந்தது!)

பிறகு ஒருமுறை பெரியாருடன் புகைப்படம் எடுக்க ஏற்பாடாகி இருந்தது. முன் எப்போதோ வெங்காயம் கொடுத்த நிகழ்ச்சி அவருக்கு ஞாபகம் இருக்காது என்று நினைத்திருந்தேன். 'வணக்கம் அய்யா!' என்று சற்று உரக்கக் குரல் கொடுத்தேன். என் முகத்தை நிமிர்ந்து பார்த்ததும் மின்னலடித்தது போல 'வாய்யா... வெங்காயம்!' என்று அவர் மெலிதாகச் சிரித்தது பிரமிப்பை ஏற்படுத்தியது. என்னை மிக அருகில் அமரச் செய்து அவர் போட்டோ எடுத்துக்கொள்ளச் செய்தது, என் ஆயுளுக்கு மான தித்திப்பு!''

- ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

வி.ஐ.பி-க்களுடன் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்திருக்கிறீர்களா நீங்கள்? அந்த புகைப்படத்தையும், அந்த அனுபவத்தையும் செம ஜாலியா எழுதி அனுப்புங்க. பிரசுரமானால், பரிசு ரூ.500.

அனுப்ப வேண்டிய முகவரி:
'வாசகர்களே... வாங்க கலக்கலாம்!',
ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2.
இ- மெயில்: av@vikatan.com