நானே கேள்வி... நானே பதில்!

''புரியாத புதிர்..?''

''விஜய், ராகுல் காந்தியைச் சந்தித்தைப்பற்றி பேட்டியில் கூறுகிறார், 'நான் ராகுல் காந்தியைச் சந்தித்தபோது சினிமா பற்றித்தான் பேசினேன்' என்று. ராகுல், விஜய்யின் 'வில்லு' படத்தைப்பற்றி பேசினார் என்பதைக் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியவில்லை!''

- பா.ரங்கன், சென்னை-16.

''சீரியஸான விஷயங்களையும் நகைச்சுவையாகக் கூற முடியுமா?''

''சென்ற நூற்றாண்டின் சிறந்த நாவல்களில் ஒன்றாகக் கருதப்படுவது காப்காவின் 'விசாரணை'. கே என்னும் மனிதன் திடீரென போலீஸாரால் கைது செய்யப்படுகிறான். ஆனால், தான் எதற்காகக் கைது செய்யப்பட்டோம் என்பது அவனுக்குத் தெரியாது. பல நாட்கள் விசாரணைக்குப் பின் அவன் விடுதலை செய்யப்படுகிறான். 'என்னை இப்போது ஏன் விடுதலை செய்கிறீர்கள்?' என்று கே கேட்க, 'தெரியாது. தலைமையகத்திலிருந்து வந்த

உத்தரவு!' என்கிறார்கள் அதிகாரிகள். 'சரி, அந்த தலைமையகம்தான் யார் அல்லது எது?' என்கிற கேள்விக்கும் பதில் இல்லை. நீதி மன்றம், போலீஸ், விசாரணை போன்றவற்றின் அதிகாரத்தைப் பகிடி செய்வதாக அமைந்தது இந்த நாவல். இப்போது யோசித்துப் பாருங்கள், 'பில்லா கறுப்பா பயங்கரமா இருப்பான், நீ பயங்கர கறுப்பா இருக்கே' என்ற வடிவேலுவின் காமெடியோடு இந்நாவலை இணைத்துப் பார்க்க முடியும்தானே! அதிகாரத்துக்கு எதிரான கேள்விகள் வரலாற்றில் வெவ்வேறு வகையில் சுழன்றுகொண்டுதான் இருக்கின்றன!''

- ச.பத்மா, சிதம்பரம்.

''சமீபத்தில் மனம் கசியவைத்த வார்த்தைகள்..?''

''ஈழப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் உருவான தமிழ் இளைஞர் பேரவை என்னும் அமைப்பைச் சேர்ந்த புஷ்பராணியை 'எது வரை' என்னும் இதழுக்காக நேர்காணல் செய்திருந்தார் ஷோபா சக்தி. அதில் புஷ்பராணியின் வார்த்தைகள்... ''பொலிஸ் நிலையம் போவதற்காகத் தெரிந்த ஒரு பெண்ணிடம் சேலை இரவல் வாங்கி உடுத்திப் போயிருந்தேன். விசாரணையின் ஆரம்பமே எனது சேலையை உரிந்தெடுத்ததில்தான் தொடங்கியது. மிருகத்தனமாக நான் தாக்கப்பட்டேன். என்னை அடித்த

தடிகள் என் கண் முன்னேயே தெறித்து விழுந்தன. அரை நிர்வாணமாக, அரை மயக்க நிலையில் கிடந்தேன். அடித்த அடியில் எனக்கு உரிய நாளுக்கு முன்னமே மாதவிடாய் வந்துவிட்டது. ஒரு பொலிஸ்காரர் அழுக்கால் தோய்ந்திருந்த ஒரு பழைய சாரத்தை என்னிடம் கொண்டுவந்து தந்தார். அதில் துண்டு கிழித்து நான் கட்டிக்கொண்டேன். கல்யாணி என்னிடம் அந்தத் துணியைப் பத்திரமாக வைத்திருக்குமாறும் தனக்கு மாதவிலக்கு வரும்போது அது தேவைப்படும் என்றும் கேட்டுக்கொண்டார். அந்தத் துணியைத் துவைத்துத்தான் பின்பு கல்யாணி உபயோகிக்க வேண்டியிருந்தது!'

ஒரு பெண், பெண்ணாக இருப்பதாலேயே பிரத்யேகமான பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. அதுவும் போராளியாக இருந்தால் எவ்வளவு பிரச்னைகளைச் சந்திக்க வேண்டி உள்ளது?''

- சா.தேவதாஸ், திருமுல்லைவாயில்.

எழுதலாம் எல்லோரும்!

கேள்வியும் பதிலும் உங்களுடையதே. தபாலில் அனுப்பலாம். அல்லது செல்போனில் QA (space) உங்க சரக்கை 562636 நம்பருக்கு நறுக்குனு தட்டிவிடுங்க. பளிச் பரிசு நிச்சயம்!