ப.திருமாவேலன், படங்கள்: கே.ராஜசேகரன்

இந்த வாரம்: டி.எம்.கிருஷ்ணா

எனக்கு பாட்டு பிடிக்கும்!

'எனக்குப் பிடிக்கும்' என்ற பொதுத்தலைப்பில் வாரம்தோறும் ஒருவர் தங்களது விருப்பங்களைச் சொல்கிறார்கள்!

டி.எம்.கிருஷ்ணா... கச்சேரியில் உட்கார்ந்தால், சாரீரம் முழுக்க சங்கீதம் பாயும். காரணம், அவரது குரலா அல்லது சாகித்யங்களைத் தேர்வு செய்வதில் உள்ள சாதுர்யமா என்று இன்னமும் முடிவுக்கு வரவில்லை. புதிய பாட்டுப் பிள்ளைகள் ஆதர்சமாக நினைக்கும் இளம் வாத்தியார் இந்த கிருஷ்ணா!'

''வீட்டில் இருந்த பெரிய குச்சியை எடுத்து வைத்து தம்புராவாக நினைத்து வாயை அசைத்த போது மூன்று வயது இருக்கும். அப்போது என் அம்மா, சீத்தாராம சர்மாவிடம் சங்கீதம் கற்றுக் கொண்டு இருந்தார். பையனுக்கும் சங்கீதம் கொஞ்சம் வரட்டும் என்று அதே சீத்தாராம சர்மாவிடம் சேர்ப்பித்தார்கள். என் முதல் குருநாதர் அவர்தான். அடுத்து செம்மங்குடி சீனிவாச ஐயரிடம் கற்றேன்.

மியூஸிக் அகாடமியில் இளம் பாடகர்களை ஊக்குவிப்பதற்காக என்னைப் போன்ற பையன்களுக்கும் பாட வாய்ப்பு கொடுத்தார்கள். அப்போது ஏழாம் வகுப்பில் இருந்தேன். குரு சொல்லிக்கொடுத்ததை அப்படியே பாடினேன் என்பதைத் தவிர மற்றபடி சங்கீத ஞானம் இருந்திருக்காது. ஆனால், பயமில்லாமல் பாடினேன். 'ஸ்ருதி' பட்டாபிராமன் என்பவர் ஓடி வந்து, கை கொடுத்தார். 'நல்லாப் பாடினே தம்பி' என்றபடி எதையோ கையில் கொடுத்தார். பிரித்துப் பார்த்தால் 100 ரூபாய். முதல் காசு. 'அட' என்று நினைத்தேன். மறுநாள் ஒரு பத்திரிகையில் விமர்சனம். 'போன ஜென்மத்துல இந்தப் பையன் சிவனுக்குத் தேனாபிஷேகம் செய்திருப்பான் போல' என்று வந்த பாராட்டுக்குப் பிறகுதான் நிறையப் பாட வேண்டும் என்று நினைத் தேன். என் நேரம், கச்சேரி செய்யநிறைய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

அப்படிக் கிடைத்திருந்தால் கலை நேர்த்தியைப் புரிந்துகொள்ளாமல் மேடைகளில் பாடிக்கொண்டு இருந்திருப்பேன். எங்கே கச்சேரி நடந்தாலும், அந்த நான்கு வருஷங்களும் போனேன். டிசம்பர் சங்கீத சீஸனின் காலையில் வீடுவிட்டுப் போனால், நள்ளிரவுதான் திரும்புவேன். 2002-ம் வருஷம் எனக்கான சீஸன் ஆரம்பித்தது. இன்று வரை தொய்வில்லாமல் தொடர்கிறது கச்சேரி.

முதல் தலைமுறையில் செம்மங்குடி, எம்.எஸ்.சுப்புலட்சுமி, பட்டம்மாள், ஜி.என்.பால சுப்பிரமணியம், அரியக்குடி, ப்ருந்தா ஆகியோர் என் மனம் கவர்ந்த சங்கீத மேதைகள். இதில் பலரது கச்சேரிகளை நான் கேட்டதில்லை.கேசட் டுகளாகக் கேட்கும்போதே மனதை லயிக்கவைக் கிறார்களே... நேரில் கேட்டவர்கள் பாக்கியசாலி கள். அடுத்த தலைமுறையில் கே.வி.நாராயண சாமி, நேதநூரி கிருஷ்ணமூர்த்தி, டி.கே.ஜெய ராமன் ஆகிய மூவரையும் எனக்குப் பிடிக்கும். மூன்றாவது தலைமுறையில் சங்கரநாராயணன், டி.என்.சேஷகோபாலன் ஆகியோரைச் சொல் வேன். இன்றைய என்னுடைய காலகட்டத்தில் சஞ்சய் சுப்பிரமணியன், உன்னிக்கிருஷ்ணன், விஜய்சிவா, சங்கீதா சிவக்குமார்(என் மனைவி!), பாம்பே ஜெயஸ்ரீ, சௌமியா ஆகியோரும் எனக்குப் பிடித்தவர்கள். இவர்களைச் சொல்வதற்குக் காரணம், மற்றவர் களைப் பிடிக்காது என நினைக்காதீர்கள். அதிகம் பிடித்தவர்கள் என்று வரவில் வையுங்கள். இசை என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்த உங்களுக்குக் கை கொடுப்பார்கள் இவர்கள்.

பாடும்போது என்னை மறக்கிறேன். அது என்னை மயக்குகிறது. நீ மயங் கினால்தான் அடுத்தவரை மயக்க முடியும் என்பது சங்கீதத்துக்கு அதிகமாகவே பொருந்தும். 'காலைத் தூக்கி நின்றாடும் தெய்வம்' என்ற மாரிமுத்தா பிள்ளையின் பாட்டு, நம்மைத் தூக்கி நின்றாடவைக்கிறது.பாரதி யின் 'பகைவனுக்கும் அருள்வாய் நன்நெஞ்சே' பாடும்போதுஅதன் சங்கீதத்தைவிட பாட்டின் உள் அர்த்தம் நம்மை வடிக்கிறது. அப்படி ஒரு நல்ல நெஞ்சத்தை அந்தச் சங்கீதம் பாடும் எனக்கும், கேட்கும் உங்களுக்கும் தரும் தியாகராயர் கீர்த்தனைகளில் 'ஓரங்கசாயி...' என்ற பாட்டு. இந்த மூன்று மணிகளை மட்டும் பிரித்து எடுத்து உங்கள் முன்னால் உருட்டிவிடக் காரணம், அதைப் பாடும்போது ஏற்படும் இன்பம் அலாதியானது. எல்லாப் பாடல் களும் மேன்மையானவை. அதில் பேதம் பார்க்க முடியாது. ஆனா லும், அதிகம் பிடித்தவை இவை.

வீட்டில் பாடும்போது பாடும் தோடி ராகமும் மேடைக்குப் போனதும் பாடுவதும் இயல்பில் ஒன்றுதான். இல்லை, வேறு வேறு என்றால் அது சங்கீதத்துக் குச் செய்கிற துரோகம். ரசிகர் களுக்குப் பிடித்த மாதிரி பாடுவது அல்ல கலை. எனக்குப் பிடித்த பாட்டை ரசிகர்களுக்கும் பிடித்த தாக மாற்றுவதில்தான் வெற்றி இருக்கிறது. கைத்தட்டல் கிடைத் தால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அடுத்த கைத்தட்டலுக் காகப் பாடக் கூடாது. சங்கீதக் காரனுக்குப் பெரிய டேஞ்சரே கைத்தட்டல்தான். சில நேரங் களில் கச்சேரிகளில் டிராமா செய்ய வேண்டிவரும். அந்த டிராமாவை உணர்ந்து செய்யலாம். மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்த வேண்டும் என்பதற்காக அவசியமற்ற வித்தியாசங்களைச் செய்ய வேண்டியது இல்லை. மூன்று வருஷத்துக்கு முன் நான் பாடியதற்கும் இன்றைக்கும் வித்தியாசம் இருக்கிறது. இது இயற்கையானதாக மட்டும்தான் இருக்க வேண் டும். வேண்டுமென்று செய்யப் பட்டதாக இருக்கக் கூடாது. இதை உணர்ந்திருக்கிறேன்.

இன்று நிறைய இளைஞர்கள் சங்கீதக்காரர்களாக வலம் வருகிறார்கள். திறமையான இளைஞர்களை இசையுலகம் அரவணைக்க என்றைக்கும் தயங்கியது இல்லை. அதற்கான உழைப்பு, சிரத்தை, மனோதர்மம், கற்பனை வளம், சாரீர வளம் இருந்தால் யாரும் கச்சேரிகளைக் கைப்பற்றலாம்.

புதியவர்களுக்கு நான் சொல் வது, குவியும் வாய்ப்புகளை வரிசையாக வாங்கிப் போடாதீர்கள். சங்கீதம் கற்றுக்கொள்வது சங்கீதத்துக்குத்தானே தவிர கச்சேரிகளுக்கு அல்ல. கச்சேரிகளில் கலக்குவதற்காகக் கற்றால், ஒவ்வொரு மேடைக்குப் போகும்போதும் பயம் பற்றிக்கொள்ளும். அதைத் தாண்டிய ஆர்வத்துடன் சங்கீதத்துக்கு அர்ப்பணித்துக்கொண்டால் இருக்கிற சரக்கை எல்லாம் தேவைப்பட்ட இடத்தில் தயக்கமே இல்லாமல்எடுத்து விடலாம்.

சங்கீதக்காரனுக்கு இருக்க வேண்டியது வெறித்தனம். அந்த வார்த்தைதான் சரியானது. பைத்தியம் பிடிக்கணும். ஒரு ராகம் சரியாக வரவில்லையென்றால், துடிக்கணும். இது இல்லாதவர்க்கு சங்கீதம் வசப்படாது. அவர்கள் கச்சேரி செய்யலாம். ஆனால், அது அவரது காலத்தைக் கடத்துவதாக மட்டும் இருக்குமே தவிர, ரசிகர்களை நமக்காகக் காத்திருக்கவைக்காது.

பாட்டு... ஒரு மகானுபவம். ஒவ்வொருவருக்கும் அது வேறுவேறு மாதிரியான எதிர்வினைகளைக் கொடுக்கும். நான் தருவதும் நீங்கள் பெறுவதும் என்ன செய்யும் மனதை? அன்றைய சூழ்நிலையைப் பொறுத்தது. பாட்டு என்பது சிலருக்கு மருந்து. சிலருக்கு மெடிடேஷன். சிலருக்கு மனம் இலகுவாகிறது. சிலர் சுகமாக நினைக்கிறார்கள் பொழுது போகிறது. கவலையை மறக்கவைக்கிறது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

இது எல்லாமே நல்ல விஷயங் கள்தான். ஆம், பாட்டு நல்லதை மட்டுமே தரும். 'எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பது' பாட்டும்தான். இசைக்கு மயங்காத இதயம் இல்லை. பாடத் தெரிந்தவன் அன்பை விதைக்கிறான். கேட்கத் தெரிந்தவன் அறுவடை செய்கிறான்!''