பாரதி தம்பி

கலைந்த கனவு!

''வாழ்க்கையும் ஒரு சினிமாதான். எனக்கான க்ளைமாக்ஸை இப்போ கடவுள் எழுதிட்டு இருக்கார். கடவுளுக்கும் எனக்கும் சண்டை நடந்துட்டு இருக்கு. அதில் நிச்சயம் நான் ஜெயிப்பேன்!'' உமிழ்நீர் சுரப்பியில் வளர்ந்திருந்த புற்றுநோய்க் கட்டிகள் உயிரை விலையாகக் கேட்டு நின்றபோதும் வெங்கட் தாயுமானவனிடம் நம்பிக் கையின் சொற்கள் மிச்சம் இருந் தன. ஆனால்... வெங்கட் தாயுமான வன் இப்போது இல்லை!

'கதை திரைக்கதை, வசனம், இயக்கம், வெங்கட் தாயுமானவன்' என்ற தலைப்புடன் 29.07.09 தேதியிட்ட ஆனந்த விகடனில் அந்தக் கட்டுரை வெளிவந்தது. காவேரிப்பூம்பட்டினத்தில் இருந்து இயக்குநர் கனவுடன் சென்னைக்கு வந்த ஆறுமுகம் என்ற வெங்கட் தாயுமானவனின் வலிமிகு வாழ்க்கை அது. 18 வருடங்கள் கோடம்பாக்கத்தில் உழன்று, ஒரு சினிமாவை இயக்க வாய்ப்பு கைக்கூடி வந்த நேரத்தில் இடியாய் வந்தது புற்றுநோய். மருத்துவமனைப் படுக்கையில் சாய்ந்து படுத்தபடி ''ஃபேன்டஸியான ஒரு படம் பண்ணணும் சார். ஒரு லைன் சொல்றேன், கேளுங்களேன்...'' என அவர் விவரித்த கதை ஒன்று இப்போதும் எனக்குள் கேட்கிறது.

கடந்த 18-ம் தேதி காலையில் தாயுமானவன் மரணத்தைத் தழுவினார். புற்றுநோய்க் கட்டிகள் முற்றிய நிலையில் தாமதமாகக் கண்டுபிடிக்கப்பட்டதாலும், மருத்துவ முறையில் நடந்த சில குளறுபடிகளும் அவர் உயிர் பிரியக் காரணமாயிற்று.

ஒரு நல்ல சினிமாவுக்கான கனவுகள் அவருக்குள் இருந்தன. நாசர், ஞானராஜசேகரன் போன்ற கலைஞர்களிடம் சினிமா பயின்றவர். உலக சினிமா பற்றிய அவரது அறிவு எல்லை விசாலமானது. வாழ்வின் தேவைகள் துரத்தியபோது பத்தி ரிகையாளர், டி.வி. நிகழ்ச்சித் தயாரிப்பாளர், அக்கறையுள்ள கல்வியாளர் என்று அவர் எடுத்த முயற்சிகள் அதிகம். நவீன கவிதைக்காரராகவும், ஆன்மிகத்துக்கும் மனித உளவியலுக்கும் உள்ள தொடர்புகளை விவரித்து அவர் எழுதியவை இப்போதும் இணையத்தில் காணக்கிடைக்கின்றன.
குடும்பத்தை வறுமை ஆட்கொண்டு இருந்தபோது தாயுமானவன், மனைவி அன்புவுடன் சேர்ந்து டியூஷன் எடுக்கத் தொடங்கினார். கற்றுக்கொடுப்பதின் ருசி பிடித்துப்போக, பாடங்களை ஒலி வடிவில் சி.டி-யில் பதிவுசெய்து அதை போட்டுக் கேட்கும் புதிய திட்டத்தை 95-ம் வருடத்திலேயே அறிமுகப்படுத்தினார். அரசுடன் இணைந்து அந்த சி.டி-க்கள் காஞ்சிபுரம் மாவட்டப் பள்ளிக்கூடங்கள் முழுமைக்கும் விநியோகிக்கப்பட்டன.

இப்போது தாயுமானவன் இறந்துவிட்ட நிலையில் அந்தக் குடும்பத்தை வறுமை சூழ்ந்திருக்கிறது. அவரது மனைவி அன்பு, தனியார் பள்ளி ஆசிரியை. ஒரே மகன் பிரித்வி கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படிக்கிறான். அறிவை மட்டுமே சொத்தாகக்கொண்டு இருந்த தாயுமானவனின் மரணத்துக்கு வந்திருந்தவர்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். அருகாமை வீட்டினரின் உதவியுடன்தான் உடல் தகனமே நடந்தது!