பிரீமியம் ஸ்டோரி
5 கேள்விகள்
5 கேள்விகள்
5 கேள்விகள்
5 கேள்விகள்
5 கேள்விகள்
5 கேள்விகள்

நதியாவிடம்...

''எண்பதுகளின் ஹீரோ, ஹீரோயின்கள் சந்திப்பில் ரஜினி உங்களிடம் என்ன சொன்னார்?''

'' 'உங்களைத் திரும்ப சந்திக்கிறதுல ரொம்ப சந்தோஷம். அப்ப பார்த்த மாதிரியே இருக்கீங்க'ன்னு சொன்னார்!''


5 கேள்விகள்

சினேகாவிடம்...

'' 'இனிமேல் ஒரு பாட்டுக்கு மட்டும் ஆட மாட்டேன்'னு சொல்லிஇருக்கீங்களே?''

''நான் அப்படிச் சொல்லவே இல்லை. என்னை ஒரு பாட்டுக்கு மட்டும் டான்ஸ் ஆடக் கூப்பிட மாட்டாங்க!''


5 கேள்விகள்

செங்கோட்டையனிடம்...

''நீதிமன்றத்தில் நீங்கள் தாக்கல் செய்த மனுவில் 'திருமதி ஜெயலலிதா' என்று குறிப்பிட்டதற்காக ஜெயலலிதா உங்களைக் கடிந்துகொண்டாராமே?''

''அப்படி எதுவும் இல்லை. ஒரு மணி நேரத்தில் மனுத் தாக்கல் செய்ய வேண்டிய அவசரத்தில் நிகழ்ந்த சின்ன தவறு அது. ஆற்காடு வீராசாமி பாவம் பெரிய மனிதர்... சின்ன புத்தி... அதைவைத்து அரசியல் செய்யப் பார்க்கிறார்!''


5 கேள்விகள்

பத்மப்ரியாவிடம்...

'''தமிழ் சினிமா இயக்குநர்களுக்கு நடிகைகளை நடிக்க வைக்கத் தெரியவில்லை' என்று கேரளாவில் விமர்சித்திருக்கிறீர்களே... என்ன காரணம்?''

''நான் அப்படிச் சொல்லவே இல்லை. நம்புங்க. தமிழ்நாட்லதான் அந்த அர்த்தத்துல நியூஸ் வந்திருக்கு. சேரன், சிம்புதேவன், விஷ்ணுவர்தன்னு நான் பணிபுரிந்த அத்தனை இயக்குநர்களும் என்னை அழகா மோல்ட் பண்ணிஇருக்காங்களே. இதை உங்ககிட்டசொல்லிட்டேன்... அது தமிழ்நாட்டுக்கே சொன்ன மாதிரி!''


5 கேள்விகள்

தாரிகாவிடம்...

'' 'அணு அளவும் பயம் இல்லை' நிகழ்ச்சியில் கிளாமராக வருவதற்கு உங்களுக்கு மட்டும் ஸ்பெஷல் பேமென்ட் என்கிறார்களே?''

''ஏங்க... அதெல்லாம் ஒரு மேட்டரா? சும்மா யாராவது கொளுத்திப் போடுவாங்க. கண்டுக்காதீங்க. வெயில்இப்படிக் கொளுத்துதே... ஏங்க?''

 
5 கேள்விகள்
5 கேள்விகள்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு