Published:Updated:

விகடன் வரவேற்பறை!

விகடன் வரவேற்பறை!

விகடன் வரவேற்பறை!
விகடன் வரவேற்பறை!
விகடன் வரவேற்பறை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
விகடன் வரவேற்பறை!
விகடன் வரவேற்பறை!

நவீன இந்துத்துவம் டபிள்யூ.ஜே.வில்கின்ஸ், தமிழில்: ச.சரவணன்
வெளியீடு: சந்தியா பதிப்பகம், 57-53வது தெரு, 9-வது அவென்யூ,
அசோக் நகர், சென்னை-83 ,
பக்கம்: 360 விலை ரூ.200

விகடன் வரவேற்பறை!

100 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் வாழ்ந்த இந்துக்களின் வாழ்வியல், சடங்குகள், வழிபாடு இவற்றைக் கண்டறிந்து வில்கின்ஸ் எழுதிய நூல். ஓர் அயலராக இருந்தாலும் அபிப்ராயங்களைத் தவிர்த்து, இந்து மதத்தின் அம்சங்களை ஆழத்துக்குப் போய் நிலைத்து எழுதுகிறார். அத்தனை ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டு இருந்தாலும்,உரைநடையில் இன்றைய தமிழை நெருடாமல் கொண்டுவந்திருக்கிறார் சரவணன்!


தோழர் பாலமோகனன்
இயக்கம்: எஸ்.இராமச்சந்திரன் - புதுவை இளவேனில்
எண்:6. பிரிவு 3, கவிக்குயில் வீதி, அசோக் நகர், புதுச்சேரி.

விகடன் வரவேற்பறை!

தோழர் பாலமோகனனின் போராட்ட வரலாறு ஆவணப் படமாகி இருக்கிறது. சுயநலன்களை உதறிவிட்டு, முழுக்க சக மனிதர்களின் உரிமைகளை மீட்டெடுக்கப் போராடுவது சுலபமானதுஅல்ல. அப்படி ஒரு தியாகம், தோழர் பாலமோகனனுக்குக் கைவந்திருக்கிறது. வாழும் காலத்திலேயே அவரை புதுவை மக்களின் சார்பாக செல்லுலாய்டில் ஆவணப்படுத்தி இருக் கிறார்கள்!


கவிதைபாரதி new.yugabharathi.wordpress.com

விகடன் வரவேற்பறை!

விஞர் யுகபாரதியின் வலைப்பூ. அனுபவம், அரசியல், கட்டுரைகள், நேர்காணல், மரபு எனப் பல தலைப்புகளில் இவரின் கவித்துவ வார்த்தைகள் கட்டுரைகளாகக் கிடைக்கின்றன. 'நாடோடிகள்' படத்தின் 'சம்போ சிவசம்போ' உருவான விதம் பற்றிய பதிவு சுவாரஸ்யம்!


உலக வரலாறு! new.history.com

விகடன் வரவேற்பறை!

'ஹிஸ்டரி சேனலி'ன் இணையதளம். ஒவ்வொரு நாளும் அன்றைய நாளின் வரலாற்று நிகழ்வுகளை அப்டேட் செய்கிறார்கள். போர்கள், பேரழிவுகள், அரசியல் மற்றும் ஆட்சி மாற்றங்களை நாடு, கால வாரியாகத் தொகுத்துள்ளார்கள். 20-ம் நூற்றாண்டுச் சம்பவங்களுக்கு மட்டும் வீடியோ கிளிப்பிங்குகள் விரிகின்றன. நாஸ்டர்டாமின் கணிப்புகள், வரலாற்று அதிசயங்கள் என ஆச்சர்ய ஏரியாக்களும் உண்டு!


உன்னைப்போல் ஒருவன்
இசை: ஸ்ருதிஹாசன், வெளியீடு: திங் மியூஸிக், விலை: ரூ 99

விகடன் வரவேற்பறை!

'உன்னைப் போல் ஒருவன்' பாடலை எழுதியிருக்கும் கமல்ஹாசனே பெரும் பட்டாளத்தோடு அந்தப் பாட்டைப் பாடியிருக்கிறார். இடையிடையே வரும் 'சம்பவாமி யுகே யுகே' சூப்பர் டச். 'நிலை வருமா...' பாடலில் கவனிக்கவைக்கிறது ஸ்ருதியின் இசை. 'நின்றே கொல்லும் தெய்வங்களும் இன்றே கொல்லும் மதப் பூசல்களும்' என வார்த்தை ஜாலம் காட்டுகிறது பாடலாசிரியர் கமலின் பேனா. ப்ளாஸே, ஸ்ருதியின் குரல்களில் 'வானம் எல்லை... இல்லை' பாடல் தவில் கூத்து. மனுஷ்யபுத்திரனின் பிரவாக வரிகளுக்கு கமலே குரல் மாற்றிப் பாடியிருக்கும் 'அல்லா ஜானே...' பாடல் லயித்து ரசித்துக் கேட்கவைக்கிறது. ஆனால், கடைசிப் பாடலான 'அல்லா ஜானே...' ரீ-மிக்ஸ் இலவச இணைப்பு என்பதாலோ என்னவோ சடுதியில் கடந்து போகிறது. அடித்து வெளுக்கும் இசை இல்லை என்றாலும் குறையன்றும் இல்லை!

 
விகடன் வரவேற்பறை!
விகடன் வரவேற்பறை!