Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

நானே கேள்வி... நானே பதில்!

பிரீமியம் ஸ்டோரி
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!

'''திருமணங்கள் தோல்வி அடைவதால் திருமணங்களே தேவை இல்லை!' என்கிறாரே கமல்ஹாசன்?''

''நிறைய திரைப்படங்கள்கூட தோல்வி அடைகின்றன. அதற்காகத் திரைப்படங்கள் தயாரிப்பதை நிறுத்திவிடலாமா?

- அதிபன், ஈரோடு.

நானே கேள்வி... நானே பதில்!

''தைரியம் என்பது?''

''கொசுவத்தி மேலேயே கொசு உட்கார்ந்திருப்பது!''

- இரா.கமலக்கண்ணன், ஈரோடு.

''விவேக் என்றவுடனே, 'எப்டி இருந்த நான் இப்டி ஆகிட்டேன்' என்ற டயலாக்கும், வடிவேலு என்றால், 'இவன் ரொம்ம்ம்ப நல்லவன்டா!'' ஜோக்கும்தான் நினைவுக்கு வருகிறது. இதில் இருந்து என்ன தெரிகிறது?''

''உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது!''

- சிக்ஸ்முகம்,கள்ளியம்புதூர்.

''நாட்டில் பணவீக்கம் குறைந்து விட்டதா?''

''உத்தரப்பிரதேசத்தில் கணேஷ் என்னும் ஒரு விவசாயி 8 ஆயிரம் ரூபாய் கடனை அடைக்க முடியாமல் தனது மனைவியைக் கடன் வாங்கியவருக்கு விற்று இருக்கிறார். இதே இந்தியாவில்தான் ஸ்டார் ஹோட்டலில் ஒருநாள் இரவுக்கு 1 லட்சம் ரூபாய் வாடகை கட்டும் மத்திய மந்திரியும் இருக்கிறார். ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று ஆடுவோமே பள்ளுப் பாடுவாமே!''

- கே.ராஜா,கும்பகோணம்.

.

''சமீபத்தில் ரசித்த காமெடி...?''

''தமிழ் ஜோக்ஸ் 4 யூ என்ற வலைப்பூவில் பார்த்த ஞாபகம். அதில் தமிழ் சினிமா வசனங்களைக் கீழ்க்கண்டவாறு உல்டா செய்து நக்கலடித்து இருந்த£ர்கள்.

'சிட்டிசன்' படத்திலிருந்து...

அஜீத்: ''அத்திப்பட்டின்னு ஒரு ஊர் இருந்ததே, தெரியுமா உங்களுக்கு?''

நீதிபதி: ''எருமைக்காரன் பட்டின்னு ஒரு ஊர் இருக்கே, தெரியுமா உனக்கு?''

அஜீத்: ''தெரியாது!''

நீதிபதி: ''அப்ப அதுக்கும் இதுக்கும் சரியாப் போச்சு!''

'ரமணா' படத்திலிருந்து...

விஜயகாந்த்: ''டமில்ல எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு!''

மாணவன்: ''கேப்டன், அது டமில் இல்லை, தமிழ்!''

விஜயகாந்த்: ''சரி, அப்ப எனக்கு டமில்ல பிடிக்காத ஒரே வார்த்தை தமிழ்!''

'நாயகன்' படத்திலிருந்து...

கமல்: ''அவனை நிறுத்தச் சொல்லு, நான் நிறுத்தறேன்!''

டிராஃபிக் போலீஸ்: ''ஏ... வென்ட்ரு, அவனுக்கு விழுந்தது க்ரீன் சிக்னல், உனக்கு விழுந்தது ரெட் சிக்னல்!''

ரஜினி டயலாக்கிலிருந்து...

ரஜினி: ''நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா, வர வேண்டிய நேரத்துல கண்டிப்பா வருவேன்!''

கவுண்டமணி: ''ஏம்பா, சாப்பாட்டு பந்தியில வந்து பேசற பேச்சா இது? மாப்பிள்ளை வீட்டுக்காரங்க என்ன நினைப்பாங்க?''

- த.மலர், தேனி.

''சமீபத்தில் நொந்தது?''

'' 'புது விசை' இதழில் கோவை நகரை அழகுபடுத்தும் மாநகராட்சியின் திட்டம் குறித்து வந்த கட்டுரையில் ஒரு தகவல்.

'கோவை நகரை அழகுபடுத் துவதற்காக மாநகராட்சி 23 சேரி களைக் காலி செய்துள்ளது. இந்த 23 சேரிகளில் உள்ள மக்களுக்கு 272 சதுர அடியில் இடம் வழங் கப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது. இந்த 272 சதுர அடியில் கழிவறை, சுவர்களின் பரப்பளவு எல்லாம் அடங்கும்.

இதற்கு எதிராக போராட்டம் நடத்தும் கம்யூனிஸ்ட் கட்சி இளைஞர்கள் ஒரு மிருகக் காட்சி சாலைக்குச் சென்றார்கள். அங்கு இருந்த ஒரு சிங்கவால் குரங்குக்கு ஒதுக்கப்பட்ட இடம் 520 சதுர அடி!''

- கி.சண்முகம், திருச்சி-4.

எழுதலாம் எல்லோரும்! கேள்வியும் பதிலும் உங்களுடையதே. தபாலில் அனுப்பலாம். அல்லது செல்போனில் QA (space) உங்க சரக்கை 562636 நம்பருக்கு நறுக்குனு தட்டிவிடுங்க. பளிச் பரிசு நிச்சயம்!

 
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு