பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

தமிழிலும் தெலுங்கிலும் விட்ட மார்க்கெட்டைப் பிடிப்பதற்காக அதிரடி ஆடிச் சலுகை சம்பளக் குறைப்பை அறிவித்து, அடுத்த படத்தில் நாகார்ஜூனுடன் ஜோடி போடுகிறார் நயன்தாரா. நயன் பேக்!


இன்பாக்ஸ்

பச்சைக் கண்ணுப் பொண்ணு லிசா ரேக்கு கேன்சராம்! '37 வயசாயிடுச்சு. விவரம் தெரிந்து நான் அழுதது இல்லை. சாதிக்கப் பிறந்த நான் ஏன் அழணும்?' என நம்பிக்கை மொழியில் ப்ளாக்கில் எழுதி அதிர்ச்சியிலும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார் லிசா. மை டியர் லிசா!


இன்பாக்ஸ்

அர்ஜென்டினா கால்பந்து அணியின் கோச் மாரடோனா அதிர்ச்சியில் உள்ளார். 2010 உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றில் ரேங்கிங் பட்டியலில் 6-வது இடத்தில் இருக்கும் அர்ஜென்டினா, 56-வது இடத்தில் இருக்கும் பொலிவியாவிடம் 6-1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது உச்சகட்ட அதிர்ச்சி. சரக்கைக் குறைச்சு சைடு டிஷ்ஷை மாத்துங்க!


சீரியல் ஸ்பெஷலிஸ்டான ஏக்தா கபூர், சமீபத்தில் தன்னுடைய புதிய தொடருக்கான ஆடிஷனில், முத்தக் காட்சியை நடித்துக் காட்டச் சொன்னது, அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது. 'தியேட்டர் நடிகர்கள் தயக்கம் காட்டவில்லை. பிடிக்காத சிலர், வெளியேறிவிட்டார்கள். அவ்வளவுதானே', என்று கூலாகப் பதில் கூறுகிறார் ஏக்தா. சீரியல் கிஸ்ஸர்!


மேக்ஸிம் பத்திரிகையின் டாப் 100 செக்ஸி பெண்கள் லிஸ்ட்டில் முதலிடம்... பிபாஷா பாசு! சென்ற ஆண்டு, முதல் இடத்தில் இருந்த தீபிகா படுகோனுக்கு இப்போது 6- வது இடம். அதிர்ச்சி என்னவென்றால், 100 பேர் லிஸ்ட்டில் ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு இடம் இல்லை. அச்சச்சோ என்னாச்சு ஆன்ட்டி?


இன்பாக்ஸ்

மூன்று மாத விடுமுறையில் எக்கச்சக்கமாக எடை கூடிவிட்டார்களாம் டோனியும் யுவராஜும். தீவிர டயட்டில் இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட, இப்போது பார்ட்டி, டிஸ்கோதெ பக்கம் பையன்கள் தலை காட்டுவது இல்லை. கன்ட்ரோல் பாய்ஸ்!


இன்பாக்ஸ்

தானே இயக்கி, தயாரித்து நடிக்கும் அடுத்த படத்தில், அசல் அரசியல்வாதியாக மிரட்ட வருகிறாராம் உலக நாயகன் கமல்ஹாசன். இதில், அவரை எதிர்த்து அதகளம் பண்ணுபவராக பாலசந்தரே நடிக்கிறாராம். குரு - சிஷ்யன்!


ஹாலிவுட் நடிகர்கள் வில்ஸ்மித், டாம் க்ரூஸ் ஆகியோருடன் சேர்ந்து அவ்வப்போது வாள் சண்டை விளையாடுகிறார் பிரபல கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்காம். வாள் பசங்க!


இன்பாக்ஸ்

இந்த ஆண்டு சிறந்த நடிகர், சிறந்த நடிகைக்கான இரண்டு விருதுகளையும் கன்னடத்தவர்களே வாங்கியதால் பிரகாஷ்ராஜுக்கும் உமாஸ்ரீக்கும் கர்நாடக அரசு சார்பாகப் பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்கிறார் எடியூரப்பா. எங்க சி.எம்மைக் கூப்பிடுவீங்களா?


ஜெயா பச்சன், ஆயிஷா டாக்கியா, ரவீணா டாண்டன் காம்பினேஷனில் தயாராகும் 'ஆப் கே லியே ஹம்' படத்தில் நடிக்க மறுத்த மாதவன், இப்போது ஓ.கே. சொல்லிவிட்டார். ''பெண்களை மையமாகக்கொண்டு எடுக்கப்படும் படங்களில் நடிக்க நடிகர்கள் மறுக்கிறார்கள். அதனால்தான் மாதவனுக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தோம்'' என்கிறார் படத்தின் இயக்குநர் ரேவதி. பைசா வசூல்!


கேஸ்டர் சமன்யா'... ஆப்பிரிக்காவின் சாந்தி. 800 மீட்டர் உலக தடகளச் சாம்பியன் பட்டம் வென்றவரை 'உடலில் கருப்பை இல்லை; ஆண் தன்மை இருக்கிறது' என்று ஆஸி பத்திரிகைகள் அதிரடிக்க, சமன்யாவுக்கு உலகம் எங்கும் ஆதரவுக் குரல்கள். ஆப்பிரிக்கர்களின் லேட்டஸ்ட் ஸ்டார்... இவரேதான். நம்பிக்கை!


இன்பாக்ஸ்

இசைக் கலைஞர் யானிக்கும் மல்லிகா ஷெராவத்துக்கும் இடையிலான காதல் போணி தற்போது அடுத்த கியரில். லாஸ் ஏஞ்சலீஸில் நடக்கும் தனது ஸ்பெஷல் ஷோவுக்கு மல்லிகாவை அழைத்து இருக்கிறார் யானி. ஹாலிவுட் கவனிக்கட்டுமே என்று மல்லிகாப் பொண்ணும் இப்போ ரெடி. ஜாக்கியைக் கழட்டியாச்சா?

 
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு